4
அப்படியென்றால் , உடம்பை அல்லவா ஆராய்ச்சிசெய்யவேண்டும் .இல்லை ..இல்லை மனத்தைப் பற்றி , ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானம் மட்டும் போதாது,மெய்ஞ்ஞானமும் வேண்டும்..
மெய் ஞானம், எங்கு கிடைக்கும். அனுபவ அறிவிலேதான் கிடைக்கும் , ஆகவே நாம் மனதைப் பற்றி ஆராய, அனுபவத்தை, அனுபவத்தின் மூலமாக கிடைத்த எண்ணங்களை ஆராய்ச்சி செய்வோம்.
அனுபவம் கொடுக்கும் தெளிவு ,அறிவு ,ஞானம் இவைகளை அடுத்தவரால் கொடுக்க முடியாது. அவ்வளவு ஏன்,, ஆண்டவன்கூட நமக்கு அனுபவங்களைக் கொடுத்து அதன் மூலமாகத்தான் தெளிவைக் கொடுக்கிறான்.
ஆதலால் என் சிற்றறிவுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு என் தெளிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆதலினால், முதலில் மனம் என்பதைப் பற்றி, என் மனதில் உதித்த சில எண்ணங்களை, உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் என் ஆசையை , இந்தக் கட்டுரை மூலமாக சிறிதேனும் தீர்த்துக்கொள்ளத்தான், இந்த சின்ன முயற்சியை மேற்கொள்ளுகிறேன்.!!
கடலாழம் காண முடிந்தாலும் பெண்கள் மனதாழம் காண முடியாது.!! என்று ஒரு கவிஞ்ஞன் பாடினான், மனிதனுக்கு ஆண் பால் ,பெண் பால், போன்ற வித்தியாசங்கள் உண்டு, மனதுக்கு ஏது வித்யாசம். மனம் என்னும் ஒரு கருவி ,மனிதனுக்கு மட்டும் சொந்தமில்லை . மனம்….எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவான ஒன்று,