2
பல மனோதத்துவ மேதைகள் (ப்ராய்ட்)போன்றவர்கள், மற்றும் மெய்ஞானத்தில் பல பெரியவர்கள் அனைவருமே மனதைக் கட்டுப்படுத்தும் வழி முறைகளை வகுத்து தொகுத்து வைத்திருக்கிறார்கள். மனமென்பது இந்தப் ப்ரபஞ்ஜத்தில் அனைத்துக்கும் காரணமானது, மனம் வைத்தால் உலகில் எதையும் சாதிக்கலாம்,
“கண்ணில் காதலியர் கடைக் கண் காட்டி விட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் சிறு கடுகாம் “
“மனம் போல மாங்கல்யம் “ போன்ற சொல்லாடல்கள் மனத்தைக் கட்டுப் படுத்தினால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதே.
அதாவது மெய்ஞானத்திலும்,விஞ்ஞானத்திலும் நிரூபிக்கப்பட்ட மறுக்க முடியாத உணமை எண் சாண் உடலுக்கு சிரசே ப்ரதானம் என்று சொல்லுவார்கள், எண் சாண் உடலுக்கு மனமே ப்ரதானம் என்று சொல்லலாம் சரி இந்த எண் சாண் உடலில் மனம் என்பது எங்கிருக்கிறது…?
கடலாழம், ப்ரபஞ்சத்தின் தூரம், ஒளியின் வீச்சு, வேகம், ஒலியின் அதிகபட்ச அளவு, எதை வேண்டுமானலும், அது அதற்குண்டான விஞ்ஞான அளவுகோள்களை, வைத்துக் கண்டு பிடித்து விடலாம், ஆனல் இன்னும் மனிதனால் கண்டு பிடிக்க முடியாத ,நான்கு புதிர்கள் ,
வெகு நாட்களாக என்மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது,