"

13

 

என் மனம் நீ அறிவாய் உந்தன்என்ணமும் நான் அறிவேன்.    என்ற கவிஞர் கண்ணதாசனின் கவிதை  வரிகளும்   கண்ணும் கண்ணும் கொள்ளைஅடித்தால்  காதல் என்றே அர்த்தம்.  என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகளும்  வியப்பூட்டுகின்றன. நம் சிந்தனையைத்  தூண்டுகின்றன!

கண் மனதின் வாசல்-ஆகவே மனம் ஒன்றோடு  ஒன்று வசமாகிவிட்ட, காரணத்தாலேதான் கண்ணோடு கண் நோக்குகிறதா,  அல்லது கண்கள் சந்தித்துக்கொண்டதால்  மனம் வசப்படுகிறதா?அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கண்கள் கலந்தன கருத்தொருமித்தோம் என்றார் வர்ணித்தார் கம்பர்.  ஆதலால் கண்கள் கலந்தால் கருத்து ஒருமித்துப் போகும் அதன் பின் மனம் வசமாகும் என்பதா?

அல்லது இராமன் பரப்ரும்மம் சீதை உலக மாதா  என்று பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஏற்கெனவே மனதளவில் அறிந்திருந்ததால்,ஒருமித்துக் கண்கள் கலந்தனவா?

ஏனென்றால் இராமனோ சீதையோ வேறு யாரையும்  பார்த்து  கருத்து ஒருமிக்கவில்லையே ஆகவே கண்கள்  மனதின் வாசல்  உள்ளிருப்பவர் சம்மதம் கொடுத்தால் அன்றி  வாசல் திறக்குமா?ஆகவே உள்ளிருப்பது மனம்-உயிர்-ஆத்மா  ..அகத்தின்அழகு முகத்தில் தெரிவது அகத்தின் வாசலாகிய கண்கள், முகத்தில் இருப்பதால் தானோ?

மனக்கதவம் திறந்த பரம்பொருளே திருக்கதவம் திறக்க வரமருளே

என்கிற அப்பரின் வரிகளும் இதற்கு நல்ல சான்றாகும்.

License

Icon for the Public Domain license

This work (மனம் ஒரு மந்திரம் by தமிழ்த்தேனீ) is free of known copyright restrictions.