14
என் மனசறியச் சொல்கிறேன் என் மனசாலகூட உனக்கு த்ரோகம் செய்ததில்லை, என் கண்களைப் பார் அதில் கள்ளம் இல்லை இப்படியெல்லாம் பேசுகிறோம். மனதில் கள்ளம் இல்லவிட்டால் கண்கள் தூய்மையாய் இருக்கும் என்பது உண்மையாகிறது.
மனதடக்கத்தோடு ,தன்னடக்கமாக இருப்பவன் உலகை ஆளுவான் என்பார்கள். வாய் பேச முடியாத ஊமைகள் கூட கண்களாலும் சைகைகளாலும் அவர்கள் நினைப்பதை நமக்கு புரியவைத்து விடுகிறார்கள்.
சரி கண்கள் இல்லாத குருடர்களுக்கு இருக்கும் மனதுக்கு வாசல் கிடையாதா? உண்டு. அப்பார்வை அற்ற விழிகள்கூட அவை ஏற்படுத்தும் பாவங்களினால் அன்பை வெளிப்படுத்தி விடும் அந்த பாவங்கள் அவர்களுக்கு மனதின் வாசலாகிவிடுகிறது பார்வையாகிறது, மனிதருக்குப் ப்ரதானமாவது மனது.
மனதை எப்படி கட்டுப்படுத்துவது? கணக்கிலடங்கா எண்ண அலைகள் மோதும் கடல் இது கடலில் கூட அலைகள் ஓரத்திலேதான் வரும் நடுக்கடலில் அலைகள் இருக்காது ஆகவே கடல் தனக்குத்தானே நடுவிலே கட்டுப்பட்டு இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
நடுக்கடலுக்கு போகவேண்டுமென்றால் அதற்கு வாகனம் வேண்டுமே. எண்ணங்களே எண்ண அலைகளே இல்லாத ஆழ்மனது என்பது நடுக்கடல் என்று வைத்துக்கொள்வோம்.அல்லது கட்டுப்பட்ட மனது என்று வைத்துக்கொள்வோம்.
நம் மனதிற்குள்ளேயே கட்டுப்படுத்த முடிகின்ற ஆழ் மனது இருக்கின்றது