7
இந்த உயிரும் ,மனமும் மறை பொருள் போல் கண்ணுக்குத் தெரியாமல் இருந்தாலும் மறை பொருளான சக்தியாகிய இறைவன் போல் நம்மை ஆட்டி வைக்கிறது.
ஒரு நண்பருடன் விவாதித்துக் கொண்டிருந்தேன் மனமும் மூளையும் ஒன்றல்ல என்று . அவர் அப்படி அல்ல மூளையில் இருக்கும் நினைவுப் பெட்டகத்திலிருந்துதான் மனம் செயல் படுகிறது, ஆகவெஎ மூளையின் செல்களில் பதிந்திருக்கும் செய்திகளே மனதை ஆட்டி வைக்கிறது ,ஆகவே மனமும் மூளையும் ஒன்றே என்று விவாதித்தார்.
ஆனால் நான் மூளை என்பது உறுப்பு மனம் என்பது கண்ணுக்குத் தெரியாதது. அது உறுப்பல்ல ஆகவே மனமும் மூளையும் வேறு வேறு என்று வாதிட்டேன். அவரிடம் மனது எங்கே இருக்கிறது என்று காட்ட முடியுமா என்று கேட்டேன், அதற்கு அவர் சொன்ன பதில் என்னை வியப்பிலாழ்த்தியது
இல்லைஎப்படிப் பரம்பொருளைக் கண்ணால் பார்க்க முடியாதோ உயிரையும்
கண்ணால் பார்க்க முடியாதோ அதேபோல் மனதையும் கண்ணால் பார்க்கமுடியாது என்றுகூறிவிட்டு ஒரு நடைமுறை உதாரணத்தை சொன்னார்.