"

12

அரசே அந்த சந்தனகட்டை வியாபாரியின்  சந்தனக் கட்டைகள் விற்காமல் இருந்தன   அன்று அவன் மனதில் இந்த ராஜா இறந்து  போனால் அவரை எரிப்பதற்கு  சந்தனக்கட்டைகள்  விற்று விடுமே என்ற  எண்ண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. அதை  அறிந்து கொண்ட நான் நேற்று அவர் சந்தனக்கட்டைகளை  விற்பதற்கு வேறு ஏற்பாடு  செய்தேன்.

அதனால் இன்று ராஜா நீடூழி வாழ வேண்டும்  என்று நினைக்கிறார்  அதனால் உங்களுக்கும் சந்தோஷமாக இருக்கிறது என்றார் . மற்றவர்களின் எண்ண ஓட்டங்களைக்  கூட நம் மனம் அறிகிறது. இதைதான் பெரியோர்கள் த்ருஷ்டி படுகிறது  என்று சொன்னார்கள்   ஆகவே நம் மனதைக் கட்டுப்படுத்தவேண்டும் மேலும் அடுத்தவர் மனதிலும் நல்ல எண்ணங்கள்  எற்படுத்தி அவர்களையும் நம் வசமாக்கவேண்டும்  இதைத்தான் ஆங்கிலத்தில் இமேஜ் என்கிறார்கள் .

ஆக, மனம் எனும் கருவியை கட்டுப்படுத்தியே  ஆகவேண்டும்!  எப்படி கட்டுப்படுத்துவது?  அனுபவம் தான் ஆரம்பப் பாடம்.  அனுபவம் அனுபவித்து அறிய வேண்டிய ஒன்று அடுத்தவர்களால் உணரவைக்கமுடியாத ஒன்று

அனுபவம் என்பது என்ன  என்று ஆராய்ந்தால்  உலகில் எல்லாத் தவறுகளையும்  நாமே செய்து அனுபவம் பெற  முடியாது.  அதற்கு ஆயுள் போதாது.  அடுத்தவர் தவறு செய்யும் போது கூட அதைப் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் ஆதலினால் அன்றாடம் நம்மைச் சுற்றி நடக்கும்  நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.  அதில் நம்மை ஆழ்த்தி  அதைக் கற்பனையாய் அனுபவித்து பெற்றுக்கொள்வது அனுபவம்  ஆகும்.

License

Icon for the Public Domain license

This work (மனம் ஒரு மந்திரம் by தமிழ்த்தேனீ) is free of known copyright restrictions.