20
மனிதன் கூடுவிட்டு கூடு பாயும் முறையில் தன்னிலிருந்து தானே பிரிந்து மீண்டும் தன்னை வந்தடைய முடியும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அப்போது உயிர் நம்மை விட்டுப் பிரிந்துசென்று அனுபவங்களைச் சேகரித்துக்கொண்டு மீண்டும் நம்மை வந்தடைகிறது என்பதாகும். நாம் காணும் கனவுகளே நம் ஆழ் மனதின் விளைவுகளே என்று கூறுவர்.
ஆகவே கனவு காணும் மனிதர்கள் தன்னிலிருந்து பிரிந்து தானே தன்னை வந்தடையும் சக்தியில் ஒரு குறிப்பிட்ட அளவினைக் கொண்டிருக்கிறார்கள் என்பது தானே உண்மை. இந்தக் குறிப்பிட்ட அளவை விஸ்தரிக்க முடிந்தால் அது மனித இனத்தை மெய்ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் முன்னேற்றமடையச் செய்யும்.
மதம் ஜாதீ மொழி இனம் குலம் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் பொது நோக்கோடு கையாண்டு மனதால் ஒன்று படும் மனோ சக்தியைப் பெருக்கிக் கொள்வோம். மனம் இணைந்தால் சமத்துவம் மலரும் சமத்துவம் மலர்ந்தால்சகோதரத்துவம் பெருகும் அன்பு பெருகும்பாசம் வளரும்கனிவு வளரும் கருணை பிறக்கும்