1
.
மறைபொருளுக்கு நாம் அகப்படுவோம் .நமக்கு மறைபொருள் அகப்படுமா? நம்முள் இருக்கும் மறைபொருளை நம்மாலேயே அடைய முடியவில்லை, நமக்கே அது அகப்படவில்லையென்றால் என்ன உபயோகம்? ஆகவே நம்முள் உறையும் மறைபொருளுக்கு நாமும் , நம்மில் உறையும் மறைபொருள் நமக்கும் அகப்படவேண்டும் . அப்படியானால் நாம் நமக்குள்ளே ஆழ்ந்து தேடிக்கண்டு பிடித்து அதை நமக்கு அகப்படுமாறு செய்யவேண்டும் . அதைத்தான் ஆழ்தல், உள் ப்ரயாணம் என்றெல்லாம் சொல்கிறார்கள் அப்படி அகப்பட்டவர்கள். அல்லது அகப்பொருளை கண்டு பிடித்து அகப்படுத்தியவர்கள் இவர்களை சித்தர்கள், யோகிகள் என்றெல்லாம் சொல்கின்றனர்.
. மனமே ஒரு ஆச்சரியம், அதை ஆராய்ந்தால் , பல நுட்பமான விஷயங்களை கண்டு பிடிக்கலாம் என்னும் முடிவுக்கு வந்துதான் மெய்ஞானத்திலும்,விஞ்ஞானத்திலும்
மனதை ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கிறார்கள்.