"

16

மனம் என்பது நாடு மொழி மதம் இனம் ஜாதீ பணக்காரன் ஏழை என்கிற எல்லா  அடிப்படைகளையும் கடந்து நிற்பது.    எல்லாவற்றையும்  கடந்து நின்றால் அது கடவுள்  அல்லவா? அப்படியானால் மனம் தான் கடவுளா?

 உலகில் உள்ள மக்கள் அனைவரும் நலமாக இருக்கவேண்டும் என்று மனிதர்களின் ஒன்றுபட்ட  மனம் நினைத்தால் இன்று வளர்ந்துள்ள விஞ்ஞானம் அறிவியல் நுட்பங்கள், போன்ற எல்லா வசதிகளையும்   உலகில் உள்ள எல்லா மக்களும் அடையவேண்டும்   என்ற சமநோக்கோடு

உலகில் உள்ள அனைத்துப்  ப்ரதிநிதிகளும் ஒன்று கூடிப் பேசி மனதளவிலே செயல்  பட்டால் பேதங்கள் நீங்கி  செயல்திறன் மூளைத்திறன்  அனைத்தும் ஒரு புள்ளியில் குவிக்கப்பட்டு ஆக்கபூர்வமாக செயல் பட்டு சரியான  மிகச் சரியான  விளைவுகளை ஏற்படுத்தும்.

உதாரணமாக  அணுசக்தி இந்த சக்தியை இதன் வளத்தை பெருக்க தனித்தனியாக செயல் படும் எல்லா நாடுகளும்  ஒற்றுமையாக சேர்ந்து ஒரு அணு ஆராய்ச்சி நிலையம்  அமைத்து எல்லா நாடுகளும் அதில் பங்கேற்றால்  அதன் கண்டுபிடிப்புகள் பொதுவாக உலகிற்கே பயன்படும்.!

அதை விடுத்து என் நாடு வல்லரசு எல்லா நாடுகளும் எனக்கு பயப்படவேண்டும்  என்று நினைக்க ஆரம்பித்தால் அணு ரகசியங்கள்  அண்டை நாடுகளுக்கு  விற்கப்படும் அபாயம் தவிர்க்க முடியாததாகிவிடும்.!

இதை எதற்காக சொல்கிறேனென்றால் எல்லா  நாடுகளும் எல்லா மக்களும் ஒரு மனதாக  இணைந்தால்  மனம் ஒருமைப்பட்டால் சுபிட்ஷம் வரும் எல்லாம் ஒரு குடைக்கீழ் ஆளப்பட வேண்டும்  அங்கு ஆளப்படுபவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

License

Icon for the Public Domain license

This work (மனம் ஒரு மந்திரம் by தமிழ்த்தேனீ) is free of known copyright restrictions.