11
ஆகவே மனக்கட்டுப்பாடு இல்லாமல் இந்த ப்ரபஞ்சம் இல்லை. இந்தப் ப்ரபஞ்சம் மனதுக்குள் கட்டுப்படவேண்டும். சகல ஜீவராசிகளையும் ஆட்டிப்படைப்பது மனம். நம் மனதைக் கட்டுப்படுத்தினால் வசமாகாத சித்துக்களே இல்லை நம் எண்ணங்கள் தான் நம்மை வாழவைக்கிறது வீழ வைக்கிறது.
நம்மை அறியாமலே, நமக்கு ஒருவர் மீது வெறுப்பு வருகிறது என்றால் அவர் தவறான எண்ணங்களைக் கொண்டிருப்பார் அதை நம் மனம் கண்டுபிடித்து விடுகிறது அதேபோல்,நம்மை அறியாமலே ஒருவர் மீது நாம் கொள்ளும் அன்புக்கும் அதுதான் காரணம் நம் மேல் அவர் உண்மையான பாசம் வைத்திருப்பார் அதையும் நம் மனம் கண்டுபிடித்துவிடுத்துவிடுகிறது.
மனம் என்பது ஒரு அருமையான கருவி.ஒரு ராஜா வழக்கமாக உலா வரும் பாதையில் ஒரு சந்தனக்கட்டை வியாபாரி அவருக்கு வணக்கம் சொல்வார் ராஜாவுக்கும் அவரைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும் ஒருநாள் அந்த சந்தனக்கட்டை வியாபாரி வணக்கம் சொல்லும்போது, ராஜாவுக்குஅவரை வெட்டிப் போடவேண்டும் போல்இருந்தது.
அதற்கு காரணம் தெரியாமல்அவர், மந்திரியைக் கூப்பிட்டு ஒரு நாளும் இதுபோல் தோன்றியது இல்லையே இன்று ஏன் இப்படி தோன்றுகிறது என்று கேட்டார்.மந்திரி ஒருநாளைக்கு அந்த வழியே செல்லாமல் வேறு வழியில் ராஜாவை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டு மறுநாள் பழைய வழியிலேயே, அழைத்துக்கொண்டு போனார்,
அன்று மீண்டும் ராஜாவுக்கு வியாபாரியை பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது.
அதற்கு என்ன காரணம் என்று மந்திரியைக் கேட்டார்.