"

8

ஒரு கடிகாரத்தில்  59 கோடுகள் வினாடிகளாக உள்ளன, அதில் எந்தக் கோடு ஒன்றாவது வினாடியோ  அதே கோடுதான் 59 ஆவது வினாடியும், இந்த 59ஆவது வினாடிக்கும்  முதல் வினாடிக்கும் இடையே  60 ஆவது வினாடி ஒளிந்து கொண்டிருக்கிறது. அந்த 60 ஆவது வினாடி தான் மனது , இறைவன் ,உயிர் எல்லாம்,  அதுபோல  மனமும் இந்த 60 ஆவது வினாடி போல் மூளையில்தான் ஒளிந்து கொண்டுள்ளது

ஆகவே  உங்களால்அந்த 60 ஆவது வினாடியைக் கண்ணால் காட்டமுடிந்தால்  நானும்  மனதையும், உயிரையும்,இறையையும் கண்ணால்  காட்டுகிறேன்என்றார்

யோசித்துப்   பார்த்தால் அவர் சொன்ன செய்தியிலும்  நல்ல உட்பொருள் இருக்கிறது.

ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன், வேலைக்காரர் என்னை உள்ளே  உட்காரச் சொல்லி விட்டு, வரை அழைத்துவர உள்ளே போனார், அதற்குள் என் மனதிலே எத்தனை எத்தனை  எண்ணங்கள்?   இவரைப்பார்ப்பது நம் தகுதிக்கு சரிதானா?,   இவரால் காரியம் நடக்குமா? ,

இவர் எப்படி  இருந்தாலும் நைச்சியமாய்ப் பேசி காரியத்தை  முடிக்க வேண்டுமே!, இப்படியெல்லாம் ஆயிரம் நினைவுகள் என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

அந்த அறையை நோட்டமிட்டது என் மனது, ஒரு விலை உயர்ந்த பொருள் என் கண்ணில்  பட்டது,  உடனே அதை அவர் வருவதற்குள்  எடுத்து வைத்துக் கொள்ளலாமா?இப்படி   ஒரு  மனது சொல்லியது,-அதற்குள் இன்னொரு மனது ,வேண்டாம் அது தவறு என்று சொல்கிறது,

அப்படியானால் ,நாம் பார்க்கும் பொருட்கள், அழகு பிம்பங்கள், எல்லாம் மூளையில் பதிகிறதா? அல்லது மனதில் பதிகிறதா?

அப்பப்பா…. மனம் நம்மை எவ்வளவு ஆட்டி  வைக்கிறது?

 

License

Icon for the Public Domain license

This work (மனம் ஒரு மந்திரம் by தமிழ்த்தேனீ) is free of known copyright restrictions.