21
கனிவும் கருணையும் ஒருசேர இணையும்போது நம் மனம் அமைதி பெறும். நம் மனம் அமைதி பெற்றால் நாம் நம்மை உணர தலைப்படுவோம். நம்மை நாம் உணரத்தலைப்பட்டால் ஆன்மயோகம் பெருகும் (Internal Travel), உட்ப்ரயாணம் லகுவாகும் . (Internal Travel, உட் ப்ரயாணம் லகுவானால் நாம் நமக்குள்ளே ப்ரயாணம் செய்து ஆத்ம ஞானத்தை அடையலாம் ,ஆத்ம ஞானம் கைகூடினால் இறைவனைக் காணலாம்.
” உள் ப்ரயாணம் ” கவிதை
கிட்டாதது கிட்டுமென்றால்
எட்டி நடை போடலாம்
கிட்டாதாயின் வெட்டன மற
சொல்லி வைத்த பெரியோர்கள்
பொன்மொழிகள் வாழ்க்கைக்கு
உதவ வில்லை கிட்டாததை எண்ணியே
ஏங்குகின்ற பேதை மனம்
கிட்டுமென்றால் அதன் மதிப்பு
அறியாமல் போகுதிங்கே
இறைவனே நேரில் வந்து
நான்தான் இறைவன் என்று
சொன்னால் நம்புவோமா நாம்
வேடதாரியென்போம் வேடிக்கை
காட்டுகிறான் என்போம்
மனதுள்ளே தேடியவன் தாள் பணிந்தால்
நம்பாத நாத்திகனும், நம்புவது போல்
நடிக்கும் ஆத்திகனும் கண்டுகொள்வார்
உண்மையினை அவனுள்ளே தான் ஒளிர்ந்தால்
நட்ட கல்லும் தெய்வமே நாதன் உள்
இருக்கையில், நாரணனும் நடிகனே
அவன் வெளியே இருக்கையில்
அவதார மகிமையினை நாம் இங்கே
கண்டுகொள்ள மானுடனாய் அவதாரம்
ராமனாய் ஒரு வடிவம் மானுடனென்றே
மற்றவர் யோசிக்க உணர்ந்தோரே
கண்டுகொண்டார் இறையென்று
உள்நோக்கி மனம் தெளிந்தால்
அத்துணை மாந்தருமே அவன்
வடிவாய்க் காட்சி தரும் அற்புதம்
தனைக் காண உள்நோக்கி
மனக் கோயில் தனை நாடி
புறப்படுவோம் உடனே வாரீர்
“இறைவன் வேறெங்கும் இல்லை” அவன் நம் மனதில் இருக்கிறான் மனதால் இணைவோம் மனதை உறவாடவிட்டு மனிதத்தைக் காப்போம்”
அன்புடன்
தமிழ்த்தேனீ
rkc1947@gmail.com, http://thamizthenee.blogspot.com ,http://peopleofindia.net–https://www.youtube.com/user/thamizthenee/videos
முகவரி: எண் 5, விஜயலக்ஷ்மி அவன்யூ,
பச்சை அம்மன் நகர்- திருமுல்லை வாயில்
சென்னை 600062 – கைப்பேசி: 9840884088 – இல்லம் : 044-26384455