17
ஆள்பவர்கள் பொது நோக்கோடு உலகிற்காக த்யாகம் செய்பவர்களாக இருக்கவேண்டும் அதற்கு எல்லோரும் பொது நோக்காக மனதளவிலே நல்ல சிந்தனைகளை மலரச் செய்யவேண்டும் எல்லோருடய மனமும் ஒன்றுபடவேண்டும் அப்போதுதான் பேதங்கள் மறையும் மனதிலே ஆத்மசக்தி வளரும்.!
நம் மனது அல்லது மூளை அன்றாடம் நாம் சந்திக்கும் சம்பவங்கள் சச்சரவுகள் வாசனைகள் இடங்களின் தத்ரூபமான தோற்றங்கள் நிறங்கள் எல்லாவற்றையும் பதித்துக் கொள்கின்றது. இப்போது கணிணியில் மெமெரி ரிகால் என்னும் ஞாபகப் புதுப்பித்தல் மீட்சி இருப்பது போல் நம் மூளையிலும் அல்லது நம் மனதிலும் ஞாபகங்களை புதுப்பிக்க ஒரு கருவி இருக்கிறது! மனோதத்துவ நிபுணர்கள் நம்மை தற்காலிகமாக தூக்க மயக்கத்தில் ஆழ்த்தி நம் எண்ண அலைகளை பின் நோக்கி போகச்செய்து அப்போதய கால கட்டத்தில் என்ன நடந்தது என்பதை நம் நினைவுக்குக் கொண்டு வருவது உண்டு
ஆனால் இதுவரை பதியாத வருங்கால நிகழ்ச்சிகளை எந்த முறையிலும் அறிய முடியாது என்பது விஞ்ஞானம் ஆனால்முடியும் என்கிறது மெய்ஞானம். த்ரிகால ஞானிகளை நம்முடைய இதிகாச புராணங்கள் அறிமுகப் படுத்தியிருக்கிறது .
உதரணங்கள்:- 1.
ரேணுகா தேவி ஜமதக்னி முனிவரின் கற்புள்ள மனைவி தன் கற்பின் திறத்தாலேயே பச்சை மண்ணாலேயே பாண்டம் செய்து நித்ய பூஜைக்கு நீர் கொண்டு வருபவள் அந்த நீரிலே ஒரு கந்தர்வனின் நிழலைக் கண்டு இப்படியும் அழகான ஆண்களும் உள்ளனரா? என்று நினைத்ததை மனதாலேயே உணர்ந்த ஜமதக்னி முனிவர்.!
- அர்ஜுனனின் பேரன் அபிமன்யுவின் புத்ரன் பரிக்ஷித்து மகராஜா பத்தாவது நாளில் பாம்பு கடித்து இறப்பான் என்று முன்கூட்டியே உணர்ந்து சொன்ன த்ரிகால ஞானி.