18
ஆகவே மரணம் என்பது எப்படி ஏற்பட்டாலும் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆஹா சரியான நேரத்தில் இறந்தார் என்றோ. அடாடா சாகிற வயதா இது என்றோ முடிவு செய்ய நம்மால் முடியுமா? நாம் உண்ணும் ஒவ்வொரு அரிசியிலும் நம் பெயர் இருக்கும் , என்பார் பெரியோர். ஆகவே விதி வலியது. ஆமாம் அது எந்த அளவுக்கு வலியது என்றால் அதைப் படைத்த ஆண்டவனாலேயே மாற்றமுடியாத அளவுக்கு வலியது.
ஆகவே நாம் நம் மனதிற்கு ஆறுதலாகவோ நம்மை ஒரு கட்டுக்குள் வழி நடத்தவோதான்,கடவுளைக் கும்பிடுகிறோம். ஒருவருக்கு கத்தியால் காயம் ஏற்படும் என்று விதி இருந்தால் அந்தக் காயம் எதிராளியாலோ அல்லது நம் நோய் தீர்ப்பதற்காக வைத்தியராலோ ஏற்பட்டே தீரும்.
உடலுக்கோ மனதிற்கோ நோய் வந்தால் வைத்தியர் உண்டு உயிர் நோய்வாய்ப் படுமா அதற்க்கு வைத்தியம் உண்டா வைத்தியர் உண்டா உடலைவிட்டு உயிர் தனியாக இயங்கமுடியுமா உயிர் போனால் ஆவி போய் விட்டது என்கிறார்கள் அப்படியானால் உயிர் தான் ஆவியா? ஒருவர் உடம்பில் ஆவி புகுந்து இருக்கிறது என்கிறார்கள்
உயிர்தான் ஆவி என்றால் ஒரு உடம்பிற்குள் இரு ஆவி எப்படி இருக்கமுடியும்? இதற்கு முன்னால் அவனுடைய மொழியைத் தவிர வேற்றுமொழியே தெரியாத ஒருவன் ஆவிபுகுந்தால் மட்டும் வேறு வேறு மொழிகள் பேசுவது எப்படி?
அப்படியென்றால் ஆவிகள் மனிதனுடைய மனதை ஆக்ரமிக்கிறதா? அப்படியென்றால் வேறு ஆவிகளோ தேவதைகளோ நம்மை ஆக்ரமிக்க முடியுமென்றால் நம்மாலும் அவைகளை ஆக்ரமிக்க முடிய வேண்டும் அல்லவா முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் அதற்கு பெயரும் இட்டிருக்கிறார்கள் அதுதான் மனோவசியம்.