6
1.தானாகவே வருவது, 2 நாமாக எற்படுதிக்கொள்ளுவது,
3.தீராத ப்ரச்சனைகள்,4முயன்றால் தீர்த்துவிடக்கூடிய ப்ரச்சனைகள்,
ஆனால் மனம் என்று ஒன்று இருக்கும் வரை, அந்த மனத்தை கட்டுப்படுத்தும் சூட்சுமம் அறியாத வரையில், யாருமே ப்ரச்சனைகளில் இருந்து மீளவே முடியாது. ஆகவே மனம்தான் பெரிய ப்ரச்சனை.
மனம். இது எங்கிருக்கிறது? , இதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். மனம் மூளையிலிருக்கிறதா? இல்லை ,இதயத்தில் இருக்கிறதா? சொல்லமுடியவில்லை , ஏனென்றால், மனமும் உயிரும் ஒரே மாதிரியானவை, மனசு அதிர்ந்து போனால் உயிர் போகிறது- உயிர் போய் விட்டால் மனது எங்கு போகிறது?
உயிர் எங்கிருக்கிறது? இதயத் துடிப்பிலா, ரத்தத்திலா?, நாடிகளிலா? மூளையிலா?, அல்லது, உணவிலா? கடினம் கண்டுபிடிப்பது கடினம். மனசுலெ இருக்கு, வார்த்தையில் வரமாட்டேங்குது அப்பிடீன்னு சொல்வோம், அப்படியானால், எண்ணங்கள் தேக்கி வைக்கப்படும் இடம் ,மனது அல்ல மூளை.! -இது சரியென்றால் , மனது மூளையிலுள்ளதா?
அப்படியென்றால் ,அன்பை, காதலை, வெளிக்காட்ட இதயத்தின் படம் எப்படி வரையலாம்? மூளையின் படமல்லவா வரையவேண்டும்? மூளையின் , படம் வரைந்து காதலை சொன்னால், என்ன ஆகும் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது!! நிச்சயமாக பயித்தியக்கார விடுதிக்கு அனுப்புவார்கள். உலகில் இருக்கும் ஜீவராசிகளின் உடலில் உறுப்புகள் பல இருந்தாலும் உறுப்பற்ற உயிரும் மனமும் முக்கிய அங்கம் வகிக்கின்றன