19
ஆம் மனதை வசியம் செய்வதுதான் மனோவசியம், மனோவசியம் முறையாக செய்து மிருகங்களை மனிதர்களை ஏன் தேவதைகளைக்கூட வசியம் செய்ய முடியும் என்று நம் முன்னோர்கள் நிரூபித்திருக்கிறார்கள்! ஆனால் மனிதன் எல்லாவற்றையும் வசியம் செய்துவிட்டு தன் மனதை வசியம் செய்யும் அவசியத்தை மறந்து அப்படியே செய்தாலும் மனஉறுதி இல்லாமையினால் தோற்றுப் போகிறான்.!!
உயிர் என்பது ஆத்மாவா இரத்தமா இருதயமா மூளையா அல்லது நாடித்துடிப்பா ஒவ்வொரு யந்திரத்துக்கும் உள்ளே மின்சாரம் ஒரு சக்தியாகி அதை இயங்கவைப்பதுபோல் உடலுக்கு சக்தி ரத்தமென்றால் ரத்த தானம் செய்யும்போது நம் உயிரை இன்னொரு உடலுக்குள் செலுத்துகிறோமா ஒரு உடலுக்கு இரு உயிர்களா
“உயிருக்கு உருவம் கிடையாது அந்த உயிரின்றி எதுவும் நடவாது ” என்ற கண்ணதாசனின் வரிகளைப் படித்தால் உயிருக்கும் ஆத்மாவுக்கும் உருவம் கிடையாது என்று பொருள் வருகிறது அப்படியானால் உயிர் பிரிந்த பிறகும் அந்த ஆத்மாவோடு மனம் இருக்கிறதா
அந்த மனம் தான் எண்ணங்களைத்தேக்கி வைத்துக்கொண்டு ஆன்மீகவாதிகள் சொல்வது போல் ஏழு ஜென்மங்களுக்கும் தொடர்பு விட்டுப்போகாத பாலமாய் இருக்கிறதா போன்ற கேள்விகள் வருகின்றன.
அப்படியானால் தூக்கம் என்பது தற்காலிக மரணம் என்றும் மரணம் என்பது நிரந்தரமான ஓய்வு என்றும் கூறுகிறார்கள். இந்த ஓய்வு என்பது உடலுக்கா மனதிற்கா அல்லது உயிருக்கா.