10
ஒரு மறக்கமுடியாத சம்பவம், ஒரு நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன், அங்கு உள்ளே நுழைந்தவுடன், அந்த நண்பரின் குழந்தை வாங்க மாமா என்று என்னைக் கூப்பிட்டு, என்னைத் தாண்டி ஓடவும் அங்கிருந்த இரும்பு பீரோ அந்தக் குழந்தை மேல் சாயவும் , நான் வேகமாக எழுந்து ஓடினேன். பீரோ என் மேல் விழுந்தது, எனக்கடியில் குழந்தை நசுங்குகிறது, பீரோ என்னை நசுக்குகிறது,
எப்படியும் குழந்தயைக் காப்பாற்ற வேண்டும் என்கிற வெறியில் கஷ்டப்பட்டு பீரோவை கொஞ்சம் மேலே தூக்கி ,குழந்தையை எனக்கடியிலிருந்து வெளியே தள்ளிவிட்டேன், பிறகு என்னை அறியாமல் .மயங்கிவிட்டேன்.
நாலுபேராலும் தூக்க முடியாத அந்த பீரோவை, நான் எப்படி தாங்கினேன்? ,எப்படி குழந்தையை காப்பாற்றினேன்? என்று எனக்கே புரியவில்லை, எனக்கு கை எலும்பு முறிவு , காலில் நல்ல அடி ,படுக்கையிலிருந்து மூன்று மாதம் கழித்து தான் நான் எழுந்தேன்.
எனக்கு எப்படி அவ்வளவு பலம் வந்தது? என் மனம் குழந்தையைக் காப்பாற்றக் கட்டளை இட்டது, ஆக, எனக்கு இயல்பாய் இல்லாத பலத்தை,என் மனம் எனக்கு கொடுத்திருக்கிறது, ஓ… மனம் இருந்தால் மார்க்கம் உண்டு, என்பது இதுதானோ? ஆகவே மனதைக் கட்டுப்படுத்தினால் எதையும் சாதிக்கமுடியும்.
விந்திய மலையிலே நேபாள நாட்டிலே இருக்கும் முக்திநாத் என்னும் திருத்தலத்துக்கு போயிருந்தேன் , அங்கே கனமான ஆடைகளை அணிந்திருந்தாலும் குளிர் தாங்க முடியவில்லை ஆனால் நிர்வாணமாக சித்தர்கள், அந்தப் பனியிலும் தங்கள் உடலை 98.4, என்கிற அளவிலேயே வைத்திருக்கிறார்கள், காரணம் மனக் கட்டுப்பாடு,அழகான பெண்ணை பார்க்கும்போது அவளை தங்கையாகவோ, தாயாகவோ, மகளாகவோ, அல்லது சக்தியின் அவதாரமாகவோ ,பார்க்கும் மனப்பக்குவம் ஏற்படுத்திக்கொள்ள மனக்கட்டுப்பாடு அவசியம்.