"

5

ஒரு  கரப்பான் பூச்சியை  நாம் பார்த்து   இதை எப்படியும் தப்பவிடக் கூடாது அடித்து விடவேண்டும் ,என்று நம் மனதில் நாம் நினைப்பதைஅந்தக் கரப்பான் பூச்சி அதன் மனதில் உணர்ந்து  இவனிடம் மாட்டமல்  தப்பி விடவேண்டும். என்று  நினைத்து அதற்காக எப்படி ஓடினால் தப்பிக்க  முடியும், என்று திட்டம் போட்டு தப்பித்து ஓடிவிடுகிறது.  இத்தனையும் கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்துவிடுகிறது.

ஆகவே மனத்தை பற்றி சிந்திக்க, வேறு  யாரால் முடியும். ஆகவே, என் மனமே நீதான் எனக்கு  உன்னைப் பற்றி அறிய  உதவவேண்டும்.

யாராவது  என்னிடம் வந்து எப்படி இருக்கிறீர்கள்  என்று கேட்டாலும், எல்லாப் ப்ரச்சனைகளோடும்  சந்தோஷமாய்  இருக்கிறேன் என்று பதில்  சொல்வது என் வழக்கம்.!   ஏனென்றால் ,ப்ரச்சனைகள் இருந்தாலும்,  அவைகளை சமாளித்துக் கொண்டு தான்,  அதற்கு நடுவே வாழவேண்டும், என்ற  கொள்கை உடையவன் நான்.! அது மட்டுமல்ல

“சகித்துக் கொண்டு வாழ்வதை விட

ரசித்துக் கொண்டு வாழ்வது சிறப்பானது “

ப்ரச்சனைகள் இல்லாத ஜீவராசிகளே, உலகத்தில் கிடையாது என்பது அடியேனுடைய எண்ணம்.!! ஒரு முறை ஒருவர் சொன்னார்,   ப்ரச்சனை இல்லாத மனுஷனும் இல்லை அர்ச்சனை இல்லாத கடவுளும் இல்லை என்று.

ஆனால்  அர்ச்சனை இல்லாத கடவுள்கள் இருக்கிறார்கள், ப்ரச்சனை இல்லாத ஜீவராசிகள், இல்லை  இல்லை  இல்லவே இல்லை,இதுதான் உண்மை.  ப்ரச்சனைகள் பல  வகைப்படும்.

License

Icon for the Public Domain license

This work (மனம் ஒரு மந்திரம் by தமிழ்த்தேனீ) is free of known copyright restrictions.