15
அங்கு நாம் சென்றால் மனதைக் கட்டுப்படுத்தலாம் சரி வாகனம் வேண்டுமே முதலில் அந்த வாகனம் நம் கட்டுக்குள் வரவேண்டும் பிறகு அதை நாம் ஆளவேண்டும் அதன்பின் அதில் ஏறி, ஆழ் மனதுக்கு செல்லவேண்டும்.!
ஒருமுறை பகவான் க்ருஷ்ணன் சகாதேவனிடம் உன்னால் என்னை கட்டிப்போடமுடியுமா? என்று கேட்டாராம் உடனே சகாதேவன் கண்களை மூடித்யானம் செய்து கிருஷ்ணனை மனதிற்குள்ளே கட்டிப்போட்டானாம் அது பக்திக் கட்டு.
அங்கு பக்தி ஒரு சாதனமாக பயன்பட்டது அந்த பக்தி என்னும் சாதனத்தை பயன் படுத்தி த்யானம் என்னும் வழியில் சென்று ,ஆழ்நிலையைத் தான் அடைந்து பக்தி என்னும் சாதனத்தை துணையாகக் கொண்டு அங்கு கண்ணனையும் அழைத்துச் சென்று கட்டிவிட்டு தான் மட்டும் வெளியே வந்த சகாதேவன் நிச்சயமாய் சக்தி படைத்தவன்தான்.
ஆக ஆழ் நிலைக்குப் போக சக்தி தேவைப்படுகிறது அந்த சக்தியை அடைய த்யானம் யோகம் தவம் என்று எதை வேண்டுமானாலும் கையாளலாம். மனதிலே நமக்கு நாமே உறுதி எடுத்துக்கொண்டால் அன்றி முடியாத காரியம்.
மனோதத்துவ நிபுணர்கள் கூட நம்மை வசப்படுத்த நாமே நம்மை அவரிடம் நம்பிக்கை வைத்து ஒப்படைத்தால் தான் முடியும் அல்லது நம்மனதைக் கட்டுப்படுத்தும் வழி அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆகவே மனதைக் கட்டுப்படுத்த முதலில் அதை தயார் செய்யவேண்டும். மனமென்னும் மனோதத்துவ நிபுணரிடம் நாமே நம்மை தயார் செய்து ஒப்படைக்கவேண்டும் ஒத்துழைக்கவேண்டும் அப்போதுதான் நம் மனதை நாமே கட்டுப் படுத்தமுடியும்.!
மண்ணுலகில் மனிதனை விட சிறந்தது வேறொன்றுமில்லை ஜீவரசிகளில் மனதை விடச் சிறந்தது வேறொன்றுமில்லை.!