என் அன்பான வாசகப் பெருமக்களே மனிதராக அல்லது உயிருள்ள எந்த மிருகமானலும், எந்த ஜீவராசிகள் ஆனாலும் அவை எல்லாவற்றையும் ஆட்டிப் படைப்பது ஆன்மீக வாதிகளின் கூற்றுப்படி நம்மை மீறிய ஒரு பெரும் சக்தி நாத்திகவாதிகளின் கூற்றுப்படி இயற்கை ஆனால் உண்மை என்னவெனில் மனம் என்னும் ஒரு கருவியே நம் எல்லோரையும் ஆட்டுவிக்கிறது என்பது என் அனுமானம்,.
என்னுடைய அனுமானத்துக்கு வலுவூட்டும்படியாக என் ஆராய்ச்சி அமைந்தது. அந்த ஆராய்ச்சியில் எனக்குக் கிடைத்த கருத்தை என்னுடைய பாணியிலே நான் எழுதி இருக்கிறேன். என் கருத்துக்களில் உங்களுக்கு ஏதேனும் கருத்து மாறுபாடு இருந்தால் நாம் விவாதிக்கலாம் அப்படி ஆரோக்கியமாக விவாதிப்பதன் மூலமாக நானும் நீங்களும் இன்னும் அதிகமாக கற்றுக் கொள்ள முடியும் என்பது என் கருத்து.
வாழ்க்கையில் பிறந்தது முதல் இறுதி வரை கற்றுக்கொள்ளுதலின் மூலமாகவே நாம் பரிணாம வளர்ச்சி பெறுகிறோம், பரிணாம வளர்ச்சி பெற்று படிப்படியாக நாம் முன்னேற ஆரோக்கியமான விவாதங்கள் உதவியாக இருக்கும்.ஆகவே எனக்கென்று என்னை அன்போடு ஆதரிக்கும் ரசிகப் பெருமக்களே என் படைப்புக்களை அன்போடும் பாசத்தோடும் படித்து கருத்து கூறும் என் அன்பார்ந்த வாசகப் பெருமக்களே வாருங்கள்
இந்தப் படைப்பையும் படித்துவிட்டு என் அறிவு விசாலத்தையும் மேம்படுத்த உதவியாய் இருப்பீர்கள் என்று எப்போதும் என் ரசிகப் பெருமக்களாகிய உங்களிடம் எனக்கு அபரிமிதமான நம்பிக்கை இருக்கிறது
வாருங்கள் மனதின் ஆழத்திலே உலா வருவோம்
அன்புடன்
தமிழ்த்தேனீ