மனம் ஒரு மந்திரம்
மனம் என்பது ஒரு பொய்கை, தடாகம், குளம், அல்லது சுனை, என்று பலவிதமாக சித்தரிக்கப் படுகிறது. ஆனால் பொய்கை தடாகம் போன்றவைகளைக் கண்ணால் காணலாம், இந்த மனம் கண்ணுக்கு அகப்படாது . இந்த மனம் மனதுக்கு மட்டுமே, உணர்வுக்கு மட்டுமே அகப்படும். ஏனென்றால் அகப்படுவது என்றாலே நம்முள்ளே ஆழ்ந்து ஆழ்ந்து வெளியுலக சிந்தனைகளை, உறவுகளை, எண்ணங்களை, சலனங்களை தொடர்பறுத்துக் கொண்டு உள்ளே ஆழ்தல் ஆகும் மனமாச்சரியம் என்பது மனதின் ஆழத்தை ,அதன் சக்தியை விளக்குகிறபோதுதான். அகப்படும் ,ஆமாம் அகம் நம் மனதுக்கு படும். அவ்வளவு ஆழத்தில் இருப்பதுதான் மனம். ஆகவே நாம் புறத்தை விட்டு அகன்று உள்ளே ஆழ்ந்து அகப்படவேண்டும்,
அகப்படுதல் என்றாலே நாம் இன்னொரு சக்தியிடம் அகப்படுதல். அல்லது ஏதேனும் ஒரு சக்தியை நம்முள்ளே அகப்பட வைத்து நாம் அதனிடமும் அது நம்மிடமும் அகப்படவேண்டும். ஆழ்ந்து ஒருவரை ஒருவர் உணர்ந்து இரண்டறக் கலந்து இருவருமே எல்லா நேரத்திலும் ஒருவருக்கு ஒருவர் அகப்படவேண்டும்.
இங்கே தப்பித்தல், தள்ளிப் போதல், அல்லது மறைந்திருத்தல் போன்ற எதுவுமே இல்லாமல் வெளிப்படையாக அகப்படவேண்டும்.