5

அவளை

நெருங்கும் பொழுதெல்லாம்

பதட்டம் கொள்கிறேன்,

மிச்சப் பொழுதில்

நேசம் கொள்கிறேன்,

தொலைவில் வந்தால்

தாகம் கொள்கிறேன்,

தூரம் நின்றால்

துயரம் கொள்கிறேன்,

சிரிக்கும் பொழுதில்

மட்டும்

சில்லரையாய் உதிர்கிறேனே

அவள் பாதத்தில்.

images (19)

License

அவள் பாதத்தில்..... Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.

Share This Book