கதை (19)
எதற்காவது ஆரம்பம் என்று உண்டானால் முடிவு என்று ஒன்றும் இருக்கும் இல்லையா?
முதலும் முடிவும் இல்லாத ஒன்றை, கடவுள் அல்லது, இறைவன் என்று சொல்கிறார்கள்.
இந்த கதையின் கதாநாயகனோ ஒரு கட்டிட கட்டுமானத் தொழிலாளி. தனது தொழிலில் காலடி எடுத்து வைத்து தொடங்கி, சுமார் நாற்பது வருடங்களைt தாண்டியாகி விட்டது. எனவே செய்து வந்த தொழிலிருந்து ஓய்வு பெற, முடிவு செய்தார்.
இதற்கான காரணங்கள் ஒன்று இரண்டு இல்லை. நமது கதாநாயகனுக்கோ, வயது முதிர்ச்சியால் குடும்பச் சுமை என்பது குறைந்தது. வரும் நாட்களில் பேரக்குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட மனம் விரும்பியது. அதோடு கண்பார்வையும் குறைந்து வàதது. உடலின் தளர்ச்சி எற்பட்டு அவரைத் தள்ளாட வைக்க, எல்லாமாக சேர்ந்து, மனிதனே, நீ உழைத்தது போதுமே! என்று மனம், உடல் இரண்டும் கெஞ்ச, நிரந்தர ஓய்வுக்குத் தயாரானார்.
நமது கதாநாயகன் பெரிய புகழ் பெற்ற கட்டுமான நிறுவனம் ஒன்றிற்கு பலவருடங்ளாக சிறந்த முறையில் பணி புரிந்து வந்ததார். நிறுவனம் நமது கதாநாயகனுக்கு தகுந்த சன்மானங்களை தாராளமாகவே தந்து வந்தனர். கட்டிட தொழிலில் சிறப்பானதொரு இடம் பிடித்தவர். எனவே நிரந்தர ஓய்வெடுக்க நினைத்த மனிதரை தமது முடிவை மாற்றிக் கொள்ள நிறுவனம் கேட்டு வந்தது. தொடர்ந்து மறுத்து வந்தார் நமது கதாநாயகன்.
நிறுவனத்தார், பல முறை கெஞ்சியதால், கடைசியாக ஒரே ஒரு முறை, ஒரு வீடு மாத்திரம் கட்டித்தருவதற்குச் சம்மதித்தார்.
புதிய வீடு வேக வேகமாகத் தயாராகியது. விருப்பமில்லாமல் செய்யும் எந்த வேலையிலும் நேர்த்தியிராது என்பதென்னவோ அனைவரும் அறிந்த ஒரு உண்மை.
வேலை பூர்த்தியானதும், நமது கதாநாயகனுக்கே மிக வருத்தமாக இருந்தது. தமது வாழ்நாளில், தொழில் கற்றுவரும் நாளில்கூட இவ்வளவு மோசமான வேலையை தாம் செய்ததில்லை என்பதை உணர்ந்தார். காலம் கடந்துவிட்டது. சரிசெய்வது என்பது கட்டுமானத் தொழிலின் அகராதியில் இல்லாத ஒரு சொல்.
கனத்த மனத்துடன் முதலாளியிடம் வீட்டு சாவியைத் தர, முதலாளியின் செயல், வியப்பைவிட வேதனையே தந்தது.
முதலாளி கடைசியாக உருவாகச் சொன்ன வீடு, அந்த தொழிலாளிக்கு ஒரு அன்பளிப்பாக தருவதற்காகவே! அவருடைய நேர்த்தியான வேலைக்கும், கடமை தவறா உழைப்பிற்கும் நிறுவனம் கொடுக்கத் தீர்மானித்த ஒரு பரிசு.
கதாநாயகனுக்கோ, நமக்கு இந்தவீடுவே பரிசாக வருமென்று முன்பே தெரிந்திருந்தால், மிகவும் நேர்த்தியாகக் கட்டியிருக்கலாமே என்ற எண்ணம் மனதில் உதிக்காமலில்லை.
மனச்சாட்சி பதில் சொன்னது:
கட்டும் ஒவ்வொரு வீட்டையும் தன் வீடாகக் கட்டு.
செய்யும் ஒவ்வொரு செயலையும் தனதாகக் கருதிச் செய்.
அடுத்த கருத்து, தன்னடக்கம்.
யாகாவாராயினும் நாகாக்க, காவாக்கால், சோகாப்பர், சொல்லிழுக்கு பட்டு என்றார் வள்ளுவர்.
நாம் பல சமயங்களில் நம்மை நாமே கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளத் தவறுவதால் பல மோசமான சூழ்நிலைகளுக்கு உள்ளாகிறோம்.
அவை அடக்கம் நாவடக்கம் இல்லாவிட்டால், துன்பங்கள் விடாது தொடரும்.