இது போகட்டும். மூடநம்பிககைகள் என்பது பல நூற்றாண்டுகளாக, பாட்டிகள் வாயிலாக பரவிய நம்பிக்கைகள். ஆதாரமோ, அல்லது ஆலோசிக்க இடமோ தராத நம்பிக்கைகள். நமக்கு, இவைகளினால் நன்மை அடைந்த யாரையும் தெரியாது. ஆனால் அவதிப்பட்ட அனேக மக்களைத் தெரியும்.
சில மூட நம்பிக்கைகள்
(1) பூனை குறுக்கிட்டால், பயணப்பட்ட காரியம் நடக்காது.
(2) சில நாட்களில், சில திசைகளில் பயணம், மேற்கொள்ளக்கூடாது. (வடக்கு திசையில் சூலம், தெற்கே சூலம் என்பார்கள்),
(3) மழை பொய்த்துவிட்டால், மனிதனுக்கும் கழுதைக்கும் திருமணம் முடிப்பதால், மழை பெய்யும்.
(4) சகுனம் பார்ப்பது.
இது போன்ற அபத்தங்களின் எண்ணிக்கைகள் கணக்கில் அடங்காது. மூடநம்பிக்கை தோன்றும் விதம் எப்படி என்பதற்கு கதை ஒன்றை காண்போம்.