கதை (7) தோல்வியை துரத்திய,
தாமஸ் ஆல்வா எடிசன்
ஒருகாலத்தில், சூரியன் மறைந்ததும், உலகம் முழுவதும் உறங்கத் தொடங்கியது. இரவுகளைப் பகலாக்கும் விந்தைக்கு வித்திட்டார், ஒரு விஞ்ஞானி.
அவரது தொலை நோக்கு, விடாமுயற்சி மற்றும் தோல்வியில் துவளாத தன்மை ஆகிய குணங்கள் அவருக்கு வெற்றியும், பொதுவாக உலகுக்கும், முக்கியமாக மனித வாழ்க்கைக்கும் அதிக ஒளியையைத் தந்திருக்கிறது.
ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என்ற எண்ணம் மறைந்து, முழு 24 மணி நேரம் மனிதனுக்குக் கிடைத்ததற்கு, இந்த விஞ்ஞானிக்கு பெரும் பங்கு உண்டு. மனிதர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் எல்லாமே வெற்றி பெறுவதில்லை. ஆனாலும், தோல்விக்கும் வெற்றிக்கும் இடைவெளி மிக மிகக் குறைவு.
பெரும்பாலும், பலர், மேலும் சிறிது முயற்சி செய்தால் வெற்றி கிட்டும் என்ற நிலையில் பொறுமை இழந்து, அரை குறையாகக் கைவிட்ட ஆராய்ச்சிகள் எண்ணிக்கையில் அடங்காது.
எடிசன் மின்சாரத்தினால் எரியும் விளக்கை உருவாக்க ஆராய்ச்சி மேற்கொண்டார். நாட்கள், நகர்ந்தன. முதலீடு விரயமானது. ஆராய்ச்சியின் பலன் மட்டும் கிட்டவில்லை.
விஞ்ஞான ஆராய்ச்சியில் பல வகை உண்டு. அதில் பொறுமையை அதிகம் சோதிக்க வல்லது பணம் விரயமாவதைத் தவிர்க்க முடியாதது. சில சமயங்களில் ஆபத்தானது: சோதனைகள் மூலம் நடத்தும் ஆராய்ச்சி (ணிஜ்ஜீக்ஷீவீனீமீஸீNணீறீ ஸிமீˆமீணீக்ஷீநீலீ) எனலாம்..
தொடக்கத்தில், எடிசனின் ஆராய்ச்சி சாலையில் அவருக்கு ஒரு உதவியாளான்.
அவர் அந்த சமயம் மேற்கொண்ட ஆராய்ச்சியானது, எந்த பொருளை உபயோகித்தால், அதன் வழியாக மின்சாரம் செல்லும்போது ஒளி கிடைக்கும் என்பதே.
சுமார் இரண்டாயிரம் பொருள்களை உபயோகித்து, மெல்லிய இழையாகச் செய்து, அதன் மூலம் மின்சாரத்தைச் செலுத்த, ஒன்றுமே அவர் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இதற்கிடையில் பல மாதங்களும், பணமும் செலவானதுதான் உண்மை.
பொறுமையை இழந்தான் உதவியாளன்.
நாம் இரண்டயிரத்திற்கு அதிகமான பொருள்களைச் சோதனை செய்தும் பலன் ஏதும் இல்லை. இனிமேலும் இந்த முயற்சி வீண் என்று புலம்பலானான்.
எடிசன் கூறினார், இதை, வேறுவிதமாகப் பார்.
நாம் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை பல மைல் கல்களை கடந்து வந்திருக்கிறோம். சுமார், இரண்டாயிரம் பொருட்கள் மின் விளக்கு தயாரிக்க பயன் தராது என்ற உண்மையை கண்டு பிடித்திருக்கிறோம். இதை, வெற்றிக்கு வெகு அருகாமையை நாம் அடைந்து விட்டோம் என்று கொள் என அறிவுருத்தினார்.
அவ்வாறே, விரைவில், கரி இழையை கொண்ட மின் விளக்கு ஒன்றை உருவாக்கி புகழ் பெற்றார். அதன் பின்னர், டங்ஸ்டன் போன்ற உலோக கலவைகள் உபயோகித்தும், (சோடியம் வேப்பர் விளக்கு போன்ற விளக்குகள் வழக்கத்தில் இருந்தாலும்) உலகுக்கு வெளிச்சம் தந்தவர் என்ற பெருமை தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களை மட்டுமே சேரும்,.
கருத்து: அழிவிலும் லாபம் உண்டு
அழிவைக் கண்டு நமக்கு எப்போதுமே ஒரு பயம். அழிவுகள் எல்லா சமயங்களிலுமே, மனிதனுக்கு துயரம் தருவதில்லை.
இதை விளக்க ஒரு கதை