அத்தியாயம் 1
நடராஜன்: அறிவைப் பத்தி பலர் பலவிதமா சொல்றாங்க. நீங்க உங்க வழியிலே சொன்னா, நல்லா மனசுலே ஏறிடும். இப்ப அதைச் சொல்றீங்களா?
கந்தசாமி:
(1) அறிவை, அதன் அவசியத்தை ஒரு மாதிரியாக எல்லாருமே உணர்கிறோம்.
(2) கல்வி பெற்றவர்களுக்கு அறிவு இருக்க வேண்டும் என்று பலர் தவறான எண்ணங்களைச் சுமப்பது உண்டு. இப்ப உள்ள கல்வி முறையிலே அதுக்கு சான்சே இல்லை.
(3) முறையான கல்வி பெற்றவர்கள், அப்படிப் பெறாதவர்களைவிட அதிக அறிவை அடைய சந்தர்ப்பங்கள் மிக மிக அதிகம். அறிவு பெற்றவர்களா ஆகராங்களா என்பது ஒரு பெரும் கேள்விக்குறி. பெரும்பாலும் தற்போதையக் கல்வித் திட்டங்கள், அதற்குத் தேவையான சிந்தனைகளைச் சொல்லித் தரல்லே.
(4) கல்வி பெற்றவர்கள் அறிவைப் பெறாமல் இருக்கப் பல காரணங்கள் உண்டு.
(*) அறிவின் அவசியத்தை அனைவரும் உணர்ந்தாலும், அதை அடையும் எல்லா வழிகளையும் கற்பவர்கள் அறிவதில்லை.
(*) கல்வித் திட்டத்தில் உள்ள யாருக்குமே அறிவைப் புகட்டும் வழிகள் அனைத்துமே தெரியாது. ஆகவே, அவர்களைக் குற்றம் சொல்வதில் பயன் ஏதும் இல்லை
(*) வாழ் நாளில் நாம் தேடுவது எல்லாமே நமக்குக் கிடைப்பதில்லை. அப்படியிருக்க நாம தேடாத ஒண்ணு தானாகவே, நம்ம முன்னால் வந்து நிற்குமா என்ன?
(*) உதாரணமாக, நாம் கல்வியைத் தேடுவது அறிவை வளர்க்கும் நோக்கத்தோடு இல்லை. மாறாக அதிக உடல் உழைப்பில்லாமல். வௌ¢ளைக் காலர் உத்தியோகம் தேடி, வயிரை வளர்க்கத்தான்.
அடைந்த கல்வி எல்லாருக்கும் வயிரை வளர்க்க உதவினால் கூட எல்லோரும் மகிழ்ச்சி அடையலாம். ஏதோ நூறு பட்டதாரிகளில் ஒண்ணு இல்லே ரெண்டு பேரு மாத்திரம் பயன் அடைஞ்சா, இது என்ன ஒரு கொடுமை?
கல்வியில் பயன் அறிவையும் வளர்க்க உதவாமல், வயிரையும் வளர்க்க உதவல்லேன்ன, காரணத்தைக் கண்டுபிடிக்கணும். தலைவர்களும் கல்வியாளர்களும் முழிச்சுக்கணும். கல்வியிலே என்ன குறைபாடுன்னு சிந்தனை செய்யணும். .
பின் வரும் பக்கங்களில் கல்வி, அறிவு இரண்டையும் அலசுவோம். பேரறிவுன்னா என்ன, அதை அடையும் வழியும் பாக்கலாம்.
கல்வியின் குறிக்கோளையும், அறிவை அடையும் முறைகளையும்¢ சிறிதும் சந்தேகம் இல்லாமல் விளக்குகிடுவோம்.
இதிலே சொன்ன விஷயத்தை சுத்தமா புரிஞ்சிக்கிட்டா, விரும்பும் அனைவரும் அறிவை அடையலாம்.
இப்போ கந்தசாமி அண்ணன் சொல்லச் சொல்ல, அப்படியே நான் எழுதப்போறேன்