அத்தியாயம் 5
கல்வி மற்றும் அறிவைப் பற்றி நமது முன்னோர் சொன்னதென்ன?
ஞானிகள், காலம் காலமா, நாம நல்லா வாழரத்துக்கு என்னனென்னவோ சொல்லியிருக்காங்க. அதைப் பாடமாவும் படிச்சிருக்கோம். ஆனாலும் எதையும் மனசிலே ஏத்திகிறது இல்லை. கதைகளைச் சொல்லி அதிலே அறிவைத் திணித்து தநதாங்க. கதையை படிச்சுட்டு கருத்தை காத்திலே விட்டுவிட்டோம்.
(1) எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்.
விபத்துலே ஒரு கண்ணு குருடாகி, ஒத்தக் கண்ணை வச்சிட்டு, நடக்க சிரமப்பட்டு, ஸ்கூட்டர் ஓட்ட முடியாம அவதிப்படும் மக்களை நமக்குத் தெரியும்.
கணித அறிவு, மொழி அறிவு, (இலக்கிய அறிவு மொழி அறிவைச் சார்ந்தது) என்கிற இரண்டு அறிவில் ஒண்ணுமட்டும் இருந்தா போதாது. வாழ்கையை சீரா ஓட்டுனமுன்னா (மனிதருக்கு, இரண்டு கண்களும் எப்படி அவசியமோ அப்படியே) எண் – எழுத்து என்ற இரண்டுமே அவசியம் என்று, கண்களை ஒரு அருமையான உவமானமா சொல்லி இருக்காங்க. கணக்குன்னாலே மிகச் சிறிய அளவிலே மக்களுக்கு பயன் இருக்கிறது. மற்றவங்களுக்கு பயம்தான் இருக்கு.
காரணம், சொல்லித் தரதுல உள்ள கோளாறு. இன்னிக்குள்ள தொழில் முன்னேற்றத்தை உபயோகித்து மிக எளிமையா புரிய வைக்கலாம். சுக்கமா சொன்னா, எழுத்துகளும் எண்ணங்களும் கொண்ட ஒரு பிரச்சனையின் தீர்வை எண்களாக மாற்றி அமைக்கும் போது சுலபமாக ஒரு தீர்வு காணலாம்.
பல எழுத்துகள் தேவைப்படும் ஒரு சூழ்னிலையை விளக்க ஒரு சிறிய எண் தொடர் போதும். எழுத்துகளும் விளக்கங்களும் தெரிவிக்க முடியாத செய்திகளை எண் தொடர் சுலபமாகச் செய்திடும்.
கணித பாடத்தை வெறும் எண்களோடு சொல்லித்தராமல் பயன்பாட்டுடன் இணைக்கும் போது விளக்குவதற்கு ஆசிரியர்களுக்கும் எளிது, கற்கும் மாணவர்களுக்கும் கசக்காது
(2) இளமையில் கல்.
ஏன் அப்படி சொன்னாங்க? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
(3) ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
ஏன் அப்படி சொன்னாங்க? உலகமும், அதிலுள்ள நிகழ்வுகளும் மாறிக்கிட்டே இருக்கு,
(4) ஓதுவது ஒழியேல்
இப்படி, எப்பவோ ஏதோ ஒரு ஔவைப் பாட்டி சொல்லிட்டாங்களாம். இது ஒரு தமிழ் அறிஞர் சொன்ன தகவல். இப்பெல்லாம், தினம் தினம் ஓதுவது ஓதுவார் என்ற மக்கள் மட்டும்தான். அதுவும் சிவன்கோவில்ல ஓதுராங்க.
அவர்களும் ஓதுகிறார்கள் என்பதும் தவறுதான். ஏனென்றால் ஞானிகள் எப்பவோ எழுதின சில பக்திப் பாடல்களை, திரும்பத் திரும்ப தினந்தோரும் சாமி முன்னாலே, மனப்பாடமா சொல்லுவாங்க. அதை ஔவையார் சொன்ன ஓதுவது என்கிற கணக்கிலே வராது.
ஔவையார் சொன்ன ஓதுவது இது இல்லை. அறிவை அடைய முதல்படி, படிப்பது (நம்மை சுற்றியுள்ள நிகழ்வுகளிலிருந்து தெரிஞ்சுக்கறது, கேட்டு, பார்த்து, அனுபதிவதால் உணர்ந்து தெரிஞ்சுக்கறது எல்லாமே தான்). வேண்டா வெறுப்பாக, பரிட்சைக்கு பத்து நாள் முன்னால மனப்பாடம் பண்ணி, பரிட்சை முடிஞ்ச அன்னிக்கே ஒரு சினிமாவைப் பாத்துட்டு படிச்ச எல்லாத்தையும் மறந்து போற மாணவர்கள் ஓதுவது கூட ஔவை சொன்ன ஓதுவதிலே சேராது.
ஏன் ஔவை எல்லோரையும் விடாமல் ஓது. ஒருநாள் கூட படிக்காமல் செல்லக் கூடாதுன்னு ஏன் சொன்னாங்க?
(4) கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு
இப்பக் காரணம் புரிஞ்சுடுத்தா? அடுத்ததாக வள்ளுவர் கல்வியைப் பற்றி என்ன சொன்னார்.
(5) கற்க கசடர கற்க. கற்றபின், நிற்க அதற்குத் தக.
ஞானிகள், நமக்கு சிந்திக்கிற பழக்கத்ததை வளர்க்கும் எண்ணத்துடன். பல கருத்துகளை, சுருக்கமா சொல்லிடுவாங்க. படிச்சிட்டு மனசிலே வாங்கி சிந்தனை செஞ்சு, அதை சரியான இடத்துலே பயன்படுத்தணும். சிந்தனை என்றால் என்ன? அதை செய்யறது எப்படி? அதைப் பற்றி விவரமா, பின்னாலே படிக்கப்போறோம்.
அறிய வேண்டியதை அரைகுறையாக அறியாமல் சுத்தமாக தெரிந்து கொள்வது முதல் கட்டமான அறிவை அடைவதின் முறை.
அப்படி ஒரு முழுமையான, குறைகள் இல்லாத அறிவை அடைந்தால் மட்டும் போதாது. கற்றதன் பயனாக கிடைத்த முழு அறிவையும் வாழ்வில் சரிவரப் பயன் படுத்துவதும் அவசியம் என்பதை சொல்வதாகக் கொள்ளலாம்.
இந்த அத்தியாத்துலே, அறை குறை அறிவுனாலே வரக்கூடிய ஆபத்து பற்றி ஒரு பழைய கதை ஒண்ணைப் படிப்போம்.
வள்ளுவர் கல்லாதவர்களை கடுமையாக விமசரித்திருக்கிறார். கல்லாதவர் கண்ணைப் புண் என்கிறார். குரள் 401 முதல் 410 வரை அலசுங்கள்.
ஒரே ஒரு சமாதானம். கல்வி கல்லாதவர் எல்லாம் கெட்டவரில்லை என்று ஒப்புக்கிறார். ஆனா இவங்க, கற்றவங்க முன்னாடி வாயைப் பொத்திகிட்டு கம்முனு இருக்கணும் என்று மட்டும் சொல்லறாரு.
இப்போ திரு மூலர் அறிவைப் பற்றி என்ன சொல்றாருன்னு பாக்கலாம்.
மெய்யறிவல்லாத பிற அறிவு, பேய் அறிவு.
தன்னை அறிவதே தலையாய நல் அறிவு…..என்கிறார் திருமூலர்.
நாம் நமது முன் பிறவில் செய்த தவம் எப்படிப்பட்டது? நல்லறம் செய்து – நல்ல தவம் செய்துள்ளோமா? இதை இந்த பிறவியில் எப்படி கண்டறிவது? ஒரு சுலபமான வழி சொல்லுகிறார் திருமூலர். இந்த பிறவியில் நாம் அடைந்துள்ள நலங்களை, பெற்றுள்ள பேறுகளை முன் பிறப்பில் நாம் செய்த நற்றவம் எப்படிப் பட்டது என்பதை எளிதில் புரிந்து கொள்ளாலாம். இந்த தவம் சிறக்க தன்னை அறிந்துணரும் மெய்யறிவை பெறவேண்டும். அப்படி இல்லாமல், அதாவது அந்த மெய்யறிவை அடைய நினையாமல் மற்ற அறிவு நலங்களை பெறுவது- அறிவது பேதமையெ ஆகும். மெய்யறிவல்லாத பிற அறிவு பேய் அறிவு.
இப்போதைக்கு, இது வேண்டாம். ஆனா படிச்சதை மனசிலே பத்திரமா போட்டு வச்சிங்கன்னா. ஒரு கட்டத்துலே பொருள் மேலே ஆசை ஓடிவிடும். அந்த நேரத்திலே இதெல்லாம் பயனாகும். அதுக்கு முன்னாடி இதெல்லாம் பிதற்றல்களாகத் தான் தெரியும்
அரைகுறை அறிவு.
ஒரு கதை
வி த்ரீ, எஸ் சார், ஆல்ரைட்
அறைகுறைவாக அதையும் செய்வது தவறு. கல்வி கற்பது உள்படத்தான். கற்ற பிறகு கற்றதைப் பயன்படுத்தாவிட்டால், கற்றவருக்கும் மற்றவருக்கும் வேறுபாடுதான் என்ன> பயன் பாட்டையும் சரியாக செய்யா விட்டால் நன்மை கிடைக்காது. மாற்றாக ஆபத்துக்கு மட்டுமே தொடரும். இந்தக் கருத்தை வலியுருத்த ஒரு நூறு வருட காலத்துக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு கதை.
திரை கடல் ஓடியும் திரவியம் தேட ஔவையார் சொல்லியது என்னவோ உண்மை. அதற்காக தகுதிகள் எதையும் அடையாமல், சேரும் நாட்டில் வழங்கும் மொழியும் அறியாமல் கடலைத் தாண்டிப் போகச் சொன்னாறா?
மூன்று நண்பர்கள், (இப்பேல்லாம் அமேரிக்கா போற மாதிரி) வளமான வாழ்வைத் தேடி இங்கிலாந்து நாட்டிற்கு குடியேர முடிவு செய்தார்கள். மூன்றில் முதலாமவர் சொன்னார். நாம் சிறிதளவாவது ஆங்கிலம் தெரிந்து கொள்ளாவிட்டால் பிழைப்பது இயலாது. எனவே நாம் ஒரு ஆங்கில ஆசிரியரை அணுகுவோம் என்றார். இருவரும் சம்மதித்தார்கள்.
ஆங்கில ஆசிரியர், ஆங்கில இலக்கணம், வார்த்தைகளின் வளம் சேர்க்க பாடங்கள், சிறிது இங்கிலாந்து நாட்டைப் பற்றிய வரலாறு, பழக்க வழக்கங்கள், கலாசாரம் பற்றிய நுணுக்கங்களை எல்லாம் சொல்லித் தருகிறேன் என்கிறார்,
இவர்களோ, இவை அனைத்தையும் கற்க பொறுமையும் நேரமும் இல்லை என்ற காரணத்தால், ஒன்று ஒன்றாக ஒதுக்கினார்கள். மூவரும் கடைசியாக, ஒவ்வொருவருக்கு, மிக மிக அவசியமான, பல சந்தர்ப்பங்களில் பயன் தரும் ஒரே ஒரு வார்த்தை மாத்திரம் கற்றால் போதும் என்ற முடிவுக்கு வந்தார்கள்.
முதலாமவருக்கு -நாங்கள் மூவரும் என்ற பொருள் தரும் – ஙிஞு tடணூஞுஞு – என்ற சொல் தரப்பட்டது. அவர் அதை மனப்பாடம் செய்தார்.
அடுத்தவருக்கு, – சரிதான் ஐய்யா என்ற பொருள்வரும் – ஙுஞுண், குடிணூ – என்ற சொல்லும், மூன்றாமவருக்கு எங்களுக்கு சம்மதம் என்ற பொருளைக் குறிக்கும் – அடூடூ ணூடிஞ்டt – என்பதும் தரப்பட்டது.
மூவரும் கப்பலில் ஏறி, லண்டன் மாநகரை அடை தார்கள்.
துரைமுகத்திற்கு வெளியே வந்தவர்கள் ஒரு கூட்டமாகக் கூடி எதையோ வேடிக்கை பார்ப்பவர்களைக் கண்டார்கள். என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதில் ஆவல் கொண்டார்கள்.
அங்கே ஒரு மனிதர் கொலையுண்டிருந்தார். போலீஸ் அதிகாரிகள் கூடியிருந்தவர்களை நோக்கி. இந்தக் கொலையைச் செய்தது யார் என்று கேட்டார். இந்த மூவருக்கும் கேள்வியின் பொருள் புரியாததில் வியப்பு ஒன்றும் இல்லை. ஆனாலும் அப்போது, மூவரும் தாங்கள் பெற்ற ஆங்கில அறிவை பயன் படுத்த போட்டியிட்டனர்.
முதலாமவர் சொன்னார் – ஙிஞு tடணூஞுஞு. மூவரையும் அதிகாரிகள் பிடித்து சிறையில் அடைத்து, மறுநாள் நீதி மன்றத்தில் நிறுத்தினார்கள். குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. அதன் பொருள் மூவருக்கும் புரியவில்லை. ஆனால் தாங்கள் கற்றது ஏதோ பயனாகிறது என்று மாத்திரம் புரிந்தது.
நீதிபதி, மூவரையும் நோக்கி, மூவரும் குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா என்று கேட்டதும். இரண்டாமவர் பேசத் துடித்தார். அவர், ஙுஞுண், குடிணூ என்று சொல்ல, அடுத்து உங்கள் மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கிறென் என்கிறார்.
மூன்றாமவர், நண்பர்களை நோக்கி, உங்கள் முறை முடிந்து விட்டது. இப்போது நான் தான் பேசுவேன் என்றார்.
அவர் கனம் நீதிபதி அவர்களைப் பார்த்து. அடூடூ ணூடிஞ்டt – என்கிறார். மூவரும் தூக்கில் இடப்படுகிறார்கள். இது மிகைப் படுத்தப்பட்ட கதையாகத் தெரியலாம்.
ஆனால் அறைகுறை அறிவு ஆபத்தை விளைவிக்கும் என்பது மிகைப் படுத்தப்படாத ஒரு உண்மை.
கற்றதனால் ஏதாவது பயன் வேண்டுமே?
படிச்சிட்டு, படிக்காதவனப் போல வாழ்கையிலே நடந்துக்கிட்டா, படிச்ச பயன் என்ன?
வள்ளுவர் அறிவின் வழியிலிருந்து ஏன் நம்பிக்கை வழிக்குத் தாவினார்?
அடுத்து வள்ளுவர் சொன்னதிலே ஒண்ணு. மேலோட்டமா பாத்தா, அது கொஞ்சம் அறிவு சம்பதப்பட்டதாக தெரியல்லை. அது மட்டுமில்லை, அறிவுக்கு நேர் எதிரானது. அதாவது நம்பிக்கை என்பது போல தோணுது.
- கற்றதனாலாயபயனென்கொல், வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்.
கடவுளைத் தொழவில்லை என்றால், படிச்சுப் பிரயோசனம் இல்லை. இறைவன் இருப்பது, அவர் நம்மைப் படைப்பது, காப்பது அழிப்பது எல்லாமே ஒரு நம்பிக்கை. மற்ற அறிவைப் போல புலன்களா அறிப்படுவது இல்லை?
கல்வியோ அறிவைச் சார்ந்தது. ஆனாலும் எதுக்காக அறிவு வழிலே நம்பிக்கையை இழுத்துப் போடறாரு? காரணம் இல்லாமலில்லை. ஏன் அப்படிச் சொன்னார் என்கிற காரணத்தை அலசிப் பார்த்தா புரிஞ்சுக்கலாம்.
அறிவே இல்லாதவர்கள் ஏழையா வாழ்கிறார்கள். அறிவே இல்லாதவர்களுக்கு உதவ பத்துபேர் சமுதாயத்தில் இருந்தா, ஒரு நூறு மக்கள் அதை தனக்கு சாதகமா பயன்படுத்தி ஏழையைப் படுஏழையாக்கக் காத்திருக்காங்க, இல்லையா?
ஏமாத்தரவனுக்கு ஏமாறுகிறரைவிட சிறிதளவானும் அறிவு அதிகமா இருக்கணும். இதுவும் நமக்கு சந்தேகம் இல்லாம தெரியும்.
ஏமாத்துகிறவனும் ஏமாறுகிறவனும், ஒரு விதத்துலே ஒத்துமையைக் காணலாம். இவர்கள் இரு தரத்தினரும், புலன்களின் ஆளுகையில் சிக்கி, பொருளில், பதவிகளில், புகழ்களில் மகிழ்ச்சி அடைபவர்கள். அதுனாலே இவற்றை அடைவதுக்கு இருக்கிற கொஞ்ச அறிவையும் முழுவதும் தவறான வழியிலே (ஏமாத்துரத்திலே) முதலீடு செய்யராங்க.
இந்த ஏமாறுகிற மற்றும் ஏமாத்துர கூட்டத்தில் இல்லாத மக்களில் சிலர் எப்போதுமே இருக்காங்க. இவர்களோட அறிவு சராசரி மக்களான நம்மைவிட பல மடங்கு அதிகம். இவர்கள் யாருமே புலன்களின் ஆட்சியில் சிக்காதவர்கள். இந்த மனநிலை வரணும் என்றால், அறிவு அதிகமா இருக்கணும்.
இவர்கள் பிறருக்கு எந்த சூழ்னிலைகளிலும் தீங்கு செயவதில்லை. இவர்கள் அறிவு மேலும் மேலும் வளரும்போது, புலன்களில் சிக்கும் அறிவை நாடுவதை விட்டு, புலன்களில் சிக்காத அறிவைத் தேடி அலைவார்கள்.
புலன்களில் சிக்காத அறிவுன்னா என்ன? ஆன்மா, ஆண்டவன், அண்டம் மற்றும் அகில அண்டம் என்பதெல்லாம் தான். அங்கே, இவர்களின் தேடுதல் வேட்டை தொடரும்.
அந்த மக்களின் குறிக்கோள் இறைவனின் கால்களைப் பற்றிக் கொள்வது, அதுவே அறிவின் எல்லையாக வள்ளுவர் சொல்லுகிறார்.
ஔவையாரும் கல்வியும்
ஓதுவது ஒழியேல்.
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
ஓதுவதும் கற்பது வேறு வேறு செயல்கள் இல்லை. உண்மைதானே?
தேர்வுக்கு முன் தினம் மனப்பாடம் செய்து, தேர்வு முடிந்த மறு கணமே மறப்பதுதான் இன்றைய கல்வித் திட்டத்தின் சிறப்பு. கற்பது மறப்பதற்கு அல்ல. இது கல்வியில்லை. ஔவை சொன்ன ஓதுவதுதோடு கணக்காது.
கல்விக்கூடங்களில் கற்கும் காலங்களிலேயே, பலர் அனுதினமும் படிப்பதில்லை. பட்டம் பெற்றபின் எந்த ஒரு செய்தித்தாளோ பத்திரிக்கைகளையோ கூட படிக்காதவங்க எண்ணிக்கைதான் அதிகம்.
அப்படிப் படிக்கும் ஒரு சிலர் கூட திகில் மற்றும் கேளிக்கைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவாங்க. துறை தொடர்பான அறிவு கல்விக் கூடத்துலே அறைகுறையா தெரிஞ்சிக்கிட்டதோட சரி.
முக்கியமா, தொழில் துறைகளிலே இருப்பவங்க, அன்னன்னிக்கி வெளியாகுற புது கண்டுபிடிப்புகள், புதிய செயல்பாடுகள் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கல்லேன்னா பொளப்பு சந்திசிரிச்சுடும்.
கல்வி பெற்றவர்கள் அறிவு பெற்றவரில்லை என்று நமது கல்விக்கூடங்களுக்கும் அவப் பெயர் சேர்க்கிறோம்.