"

அத்தியாயம் 6

chap 6

கீழை நாடுகளிலே, முக்கியமா, சீனாவுலே  மிகச் சிறந்த அறிவாளிங்க  வாழ்ந்திருக்காங்க.  ஆயிரம் வருசங்களுக்கு முன்னாலே சீன ஞானிகள், அறிவைப் பத்தி அழகா விளக்கியிருக்காங்க. அவங்க சொன்னதை யாருமே படிக்கல்லியா? படிச்சது யாருக்குமே புரியல்லயா?  அது நமக்குத் தெரியல்லையா சாமி.

கல்வியாளரெல்லாம், அதைப் படிச்சிருந்தா, படிச்சதைப் பயன் படுத்தியிருந்தா, நாமெல்லாம் அதிகமான அறிவோட வாழ்ந்திருப்போம்.

அப்ப அறுவது வருசமா நாம கொண்டாடிக்கிட்டுகிற  கல்வித்திட்டம் பத்தி என்ன சொல்ல வாரேன்?

இங்கிலீஷ்காரன் மெக்காலே (பிரபு)  தானம் பண்ணின ஆரம்பக்கல்விக்கு, அப்படியே  மீசை வச்சு, வேட்டி கட்டி உயர் கல்வியாக நீட்டிடாங்களா? அப்படித்தான் தெரியுது,

அது எப்படின்னா, ஒரு உதாரணம் சொல்லுவாங்க. தெலுகு மொழிலே குதிரைக்கு குர்ரம் என்பாங்க. அதைக் கேட்டுட்டு. அவ்வளவுதானா தெலுகு. குதிரைக்கு குர்ரம்னாக்க, யானைக்கு யர்ரம், மாட்டுக்கு மர்ரம், கழுதைக்கு கர்ரம் … அப்படி சொல்லிட்டே போற மாதிரி.

கல்வித்திட்டதுலே பெரிய அறிஞர்கள் ஞானிகள் இல்லாம இருக்கலாம்.

பெரிய பதவி, நெரய சம்பளம் வாங்கிக்கிட்டு, கல்வி அறிவு பத்தி படிச்சு கூடத் தெரிஞ்சுக்காதது அதிசயமா இருக்கு.

போகட்டும். நாம சொல்லிடுவோம். அதையாவது யோசிச்சுப் பாத்து, ஏத்துக்கிட்டா சரி.

அறிவின் தன்மையை இதைவிட சுருக்கமாவும் அருமையாவும் யாராலும் சொல்ல முடியாது. அதுவும் போதாதுன்னு நான் சில உதாரணமும் சொல்லப் போறேன்.

(1) கற்றவர் சிந்திக்கல்லேன்னா, கல்வி பெற செலவழிச்சது (செஞ்ச செலவு, செலவழிச்ச நேரம்) எல்லாமே பாழப்போச்சு.

(2) கல்லாதவன் சிந்திச்சால், அவனுக்கும் ஆபத்து, அவனை சேர்ந்துள்ள மக்களுக்கும் ஆபத்து.

இது புரியரமாதியும் இருக்கு இதை கொஞ்சம் விளக்கமா பார்க்கலாம். அப்ப, முக்கியமான விஷயம் சிந்திக்கிரதுலே இருக்கு.

எல்லாருக்கும் சிந்தனை என்பது அவசியம் என்று தெரியும். ஆனா அதைச் செய்யர வழிகளை யாருமே சுத்தமாக   சொல்லித் தரல்லே.

சிந்தனையைப் பற்றி விவாதிக்கிரதுக்கு முன்னாலே, மனசு, அது செயல்படுகிற விதத்தை ஒரு மாதிரியா புரிஞ்சாத்தான், மற்றது புரியும். படிப்படியா படிப்போம்.

License

Icon for the Public Domain license

This work (மிகவும் உயர்ந்த் அறிவை அடைவது எப்படி? by nat123; நடராஜன் நாக்ரெத்தினம்; and Natarajan Nagarethinam) is free of known copyright restrictions.

Share This Book