அத்தியாயம் 7
அறிவும் – நம்பிக்கையும்
நம்பிக்கையும் அறிவும் பிரியும் இரு பாதைகள்.
முன்னுரை:
கற்பது எதுக்கு? அறிவைப் பத்திப் படிச்சு ஓரளவு தெரிஞ்சுதுக்கிட்டோம். அறிஞ்சதைத் தோரணமா கட்டறதுன்னு ஒருமாதிரி புரிஞ்சிடுத்து. நினைவாற்றலின் தேவை மற்றும் அடையும் வழியும் தெரிஞ்சுக்கிட்டோம்.
தேவையான அறிவை அடையர சிந்தனைனையைப் பத்தி இதுவரை விளக்கமா எங்கேயும் படிச்சோ இல்லை கேட்டோ தெரிஞ்சிக்கல்லே. அதற்கு அதிகமா உங்களுக்கு இதுவதை வாய்ப்பில்லை.
உள்ளுணர்வுலே, இதெல்லாம் படிக்காமலும் ஆராயாமலும் அறிவாளிகளும், பேரறிவாளிகளும் தோன்றிக்கிட்டே இருக்காங்க.
அறிவை எப்படி அடையரதுன்னு படிச்சு தெரிஞ்சுக்கிட்டா மட்டும் போதாது.
சொன்ன வழிகளை முழுக்க முயற்சி செய்யாமப் போனா, அறிவு கிடைக்கவும் வாய்ப்பு ஏதும் இல்லை. உதாரணமா, மதுரையில உள்ள மக்களுக்கு சென்னைக்குப் போக பல வழி தெரியும். தெரிஞ்ச எல்லோருமே சென்னைக்கு போறாங்களா? போக முடிவு செஞ்சு பயணம் தொடஙினா, அப்ப பயன் தரும்.
அறிவின் அளவும் வாழ்வின் வளமும்
(1) இயற்கையாகவே அறிவை அடைகிற வாய்ப்பு உள்ளவங்க மிக மிகக் குறைவு. மிகக் குறைந்த அறிவுள்ளவங்க, ஏழையா, வறுமையிலே வாடி, அடிமைப் படுத்தப்பட்டு, கொடுத்த உழைப்புக்கு ஏற்ற வாழும் வசதிகள் கிடைக்காமலே வாழ்ந்து சாவறாங்க.
(2) இன்னும் கொஞ்சம் அறிவு சேத்தவங்க, வறுமை அதிகமா வாட்டாம வாழ்ந்து சாவறாங்க. முடிஞ்ச அளவு அறிவு கொறஞ்சவனை சுரண்டிடராங்க,
(3) இன்னும் அதிகம் அறிவு சேத்தவங்க, ஆசைப் பட்ட பொருளை அடைஞ்சு கொஞ்சம் கூட வசதியா இருக்காங்க. இதிலேயும் பல ஆளுங்க மத்தவன் பொருளுக்கு ஆட்டையப் போடரவங்க இருக்காங்க. தலைவராகி தப்பெல்லாம் பண்ணி வசதியோட வாழ்ந்து மத்தவன்போடர சாபத்தோட சாவராங்க
(4) மேலும் மேலும் அறிவு கிடைச்சவங்க, பொருள் மேல ஆசை கொள்ளாமல், வறுமையிலே வாடரவங்க மேலே கருணை கொள்ளுறாங்க.
(5) அதுக்கு மேல அறிவு அடைஞ்சவங்களுக்கு உதாரணமாகச் சொன்னா இயேசுபிரான், தீர்க்கதரசி முகம்மது அவர்கள், புத்தர் பிரான், வடலூர் ராமலிங்க வள்ளலார், சேஷாத்திரி சாமிகள், காஞ்சி மகாப் பெரியவர், சுப்பிரமணனிய பாரதியார் என்று பெரிய பட்டியல் போடலாம். இவங்க யாருடைய மனசுலேயும் தன்னைப்பற்றிச் சிந்தனை சிறிதும் இருக்கிறதில்லை. மற்ற உயிர்களை வாடாமல் வாழவைப்பது எப்படின்னுதான் அவர்களுடைய சிந்தனை ஓடிச்சு. அதனால அவங்களை கொண்டாடினாங்களா? அதுவும் இல்லே.
வேற்றுமையில் ஒரு ஒற்றுமை: மிகக் பெரிய அறிவாளிக்கும் அறிவே இல்லாதவங்களுக்கும் ஒரே ஒரு ஒத்துமை. இந்த இருவித மக்களும் பொருள் இல்லாதவர்கள். பேரறிஞர்களோட வறுமையை எளிமையின்னுதான் சொல்லணும்.
அறிவிருந்தா பொருள் சுலபமா வரும். ஆனால் இவங்க வறுமையை விரும்பி ஏத்துக்கிட்டவங்க. வள்ளலார் வாழும் காலத்திலே உண்ட உணவு மிகக்குறைவு. ஆனால் அவர் ஏழைகள் பசியால் வாடாமலிருக்க ஏழைகளுக்கு இலவசமா உணவைத் தர ஏற்படுத்திய அடுப்பு நூறு வருஷத்துக்கும் மேல அணைக்கப்படவே இல்லை. மனிதரா வாழர காலத்துலே இவங்கதான் மிகப் பெரிய அறிவாளிங்க. அவங்களுக்கு தொல்லை கொடுத்தவங்களுக்கும் குறைவில்லே.
அறிவில்லாமல் வாழ முடியுமா? வறுமையிலே வாடர மக்கள் பெரும்பாலும் அறிவிலே குறைஞ்சவங்கதான். இப்ப விளக்கமா அறிவு, மற்றும் அறிவு குறைவோடு (நம்பிக்கை அடிப்படையிலே) எப்படி வாழ்கிறார்கள் என்று தெரிந்து கொள்வோம்.
மக்கள் மூன்று விதமா வாழ்கிறார்கள்.
எல்லா மனிதர்களுக்கும் வாழும் காலத்திலே ஒரு தீர்மானம் செய்யும் அதாவது முடிவுகள் எடுக்கும் கட்டம் அடிக்கடி குறிக்கிடும். அப்ப நாம எல்லோரும் எதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறோம் அதை வச்சு நாம மக்களை மூணு விதமா பிரிக்கலாம்.
(1) நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்வோர்.
எந்த நாட்டிலேயும் சரி, ஒரு 1000 மக்களை சந்தித்து அவர்கள் தினசரி வாழ்வில் முக்கிய முடிவளை எதன் அடிப்படையிலே எடுக்கராங்க என்று கேட்டுப் பாத்தா, 999 மக்கள் பயன் படுத்துவது நம்பிக்கையை மட்டுமே.
இவர்கள் சாதாரண மக்கள். பெரும்பாலும் ஏழைகள். சமுதாயத்தின் ஓட்டத்திற்கு மிகவும் அவசியமான சக்கரங்கள். அறிவு தேவைப் படும் நேரங்களில் இவர்கள் தாங்கள் அறிவாளி என்று நம்புகின்ற ஒரு மனிதரின் உதவியைத் தேடுவதுண்டு. அப்படிக் கிடைக்காவிட்டால், இறைவனின் அருளை நாடுவார்கள். இவர்களுக்கு அறிவின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கத் தேவையான அறியும்-ஆற்றல் இருப்பதில்லை.
நம்பிக்கைதான் வாழும் ஆதாரம் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள மறுத்து தவறான அறிவின் அடிப்படையில் முடிவுகளை எடுத்து மொட்டையானவர் கதை ஒன்றைப் பார்க்கலாமா?
கதை 02
டாக்டர் மகேன்திரன்
அப்பாவோட சொந்தப் பெயர் ஆஞ்சனேயலு. பட்டப் பெயர் பிழைக்கத் தெரியாத ஆள். ஆந்திரமானில அரசு ஊழியர். லஞ்சம் வாங்கமாட்டார். கோவில் குளம் என்று சுத்துவார். பொய்கள், சினிமா, சிகரெட், சாராயம், சூதாட்டம் என்பது போன்ற எதுவும் இவரை நெருங்காது. இவருடைய அலுவலக நண்பர், பெயர் சாதிக், ஒரு பியூன். அவர் சம்பளம் (அந்தக் காலத்தில்) ரூபாய் ஆராயிரம்.
இரண்டே இரண்டு பிள்ளைகள். நன்றாகப் படித்தார்கள். சிறு வயதில் பெற்றொருக்கு எந்தவித பிரச்சனைகளையும் உண்டாக்கவில்லை. மூத்த பிள்ளையின் பெயர் மகேந்திரன். மானில அளவிலானத் தேர்வில் 10 ம் வகுப்பில் மானிலத்தில் இரண்டாவது இடம். அடுத்து +2 தேர்வுகளில் மூன்றாம் இடம். அப்பாவுக்கு மகனை டாக்டராகப் பார்க்க ஆசை. மகனுக்கோ அப்பாவின் கனவை நிறைவேற்றி வைப்பதில் ஆசை.
மகேந்திரனுக்கு மருத்துவக் கல்லூரியில் தகுதியால் சுலபமாக இடம் கிடைத்தது. அதனால் கல்லூரியில் செலுத்த வேண்டிய பணம் சமாளிக்கும் அளவில் இருந்தது. ஆனால் புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க ஆகும் செலவு மிக மிக அதிகம். மகனை மருத்துவராக்கிப் பார்க்கும் ஆசை விரைவில் நிரைவேறப் போதிவதில் கிடைத்த மகிழ்ச்சியில் தன் திரும்பித் தரும் சக்தியை மீறிய கடன்களையும் பெற்று, பிள்ளையைப் படிக்க வைத்தார்.
படிப்பு முடிந்து எளிதாக ஒரு வேலையும் கிடைத்தது. சம்பளம் ரூபாய் இரண்டாயிரம் மாத்திரமே. இத்தனை படித்தும் பியூன் சாதிக் வாங்கர சம்பளம் கூட கிடைக்கவில்லையே என்று வருந்தினார்.
மகேந்திரன், இதைப் பற்றி சக மாணவர்களை விசாரித்தான். விடை கிடைத்தது. மேலும் மூன்றாண்டுகள் உயர் கல்வி அடைவதே வழி என்று. மேலும் மூன்றாண்டுகள் படிப்பில் கரைய, தந்தையில் சேமிப்புகள் மேலும் கரைந்தது. இப்போது மகேன்திரனை எம் டி என்ற பட்டம் ஒட்டிக்கொண்டது. வேலை தேடினான். எளிதாகக் கிடைத்தது. சம்ப்பளம், ரூபாய் நாலாயிரம் மட்டுமே. இதை அறிந்த தந்தையை நோய் தின்னலாயிற்று. ஏன்? மருத்துவத்தில் உயர்கல்வி பெற்றும் சாதிக் அளவு சம்பளம் வரவில்லையே.
மகேன்திரன் விடுவதாயில்லை. சுமார் முப்பது வயதை எட்டும் தருவாயிலும் விடாது உழைத்தான். மேலும் உள்ள, டி.எம் என்ற பட்டம் பெற்றாகிவிட்டது. வேலையில் சேர போபால் சென்று கொண்டிருந்த போது, நானும் அதே ரயிலின் பயணம் செய்தேன்.
அப்போது மகேந்திரன் சொன்ன கதைதான் இது. இன்று பியூன் சம்பளத்தை எட்டிப்பிடித்து விட்டார். ரூபாய் ஆராயிரம் இவர் சம்பளம். (பியூன் இதனிடையில் ரிடையர் ஆகிவிட்டார்). இந்தச் செய்தியைக் கேட்ட தந்தை உடனே மாரடைப்பால் இறந்துவிட்டார்.
இந்தக் கதையை சிறிது அலசுவோம்:
ஒரு நல்ல குடிமகனுக்கு, ஒரு நல்ல மகன். தந்தையின் ஆசையை நிரைவேக்ற்ற கடுமையாக உழைத்தான். கடைசிவரை தந்தைக்கு மகிழ்ச்சி வரவில்லை. துயரத்தில் முழுகியவர நோய் தாக்க பின் அகால மரணம் அடைந்தார். இது யாருடைய குற்றம்?
மருத்துவரானால் பெரிய வருமானம் கிடைக்கும் என்று அவர் கேட்டொ, படித்தோ, விசாரித்தோ அறியவில்லை. அது அவருடைய தனிப்பட்ட நம்பிக்கை. அதுவும் தவறாக அறிந்தது. மொத்ததில், அவர் தன் மகனை மருத்துவராக்கிய காரணம், தன் மகனுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்ற தவறான அறிவு.
மருத்துவர், வழக்கறிஞர், சார்ட்டர்டு அக்கௌடண்டு போன்ற தொழில்களில் தொடக்க காலத்தில் அதிக வருமானம் கிடைக்காது. அதிக அனுபவம், அடைந்த வெற்றிகள், பெற்ற புகழ் ஆகியவை வயது கூடிவரும்போது அதுவும் கூடி வந்தால், அதிக வருமானத்தை அள்ளித் தரும்.
இஞ்சினியர்கள், அரசு அலுவலர்கள், வங்கி அதிகாரிகள் எல்லோரும் தொடக்கத்தில் சுமாரான வருமானம் கிடைத்தாலும், வயது கூடினாலும் வருமானம் ஓரளவுக்குமேல் உயராது.
குறைந்த வருமானமுள்ளவர்கள், தான் வாழும் காலத்தில் தனது புத்திரச் செல்வங்கள் வளமுடன் வாழ்வைதைக் காணவேண்டும் என்றால், மருத்துவர், வழக்கறிஞர் போன்ற தொழில்களுக்குப் படிக்கும்படி வலியுருத்தக்கூடாது.
தனக்குத் தெரியாமலிருக்கலாம். தவறாக அறிந்திருக்கலாம். அதனால்
பலரை, தீர விசாரித்து, அறிந்து செயல் பட்டிருக்க வேண்டும்.
மகேந்திரன், தன் சக பிரயாணியான என்னிடம், இந்த நாடு நல்லவர்களுக்கில்லை. இந்த நாடு அழிய வேண்டும் என்றெல்லாம் தன் கோபத்தை என் மீதும் நாட்டின் மீதும் கொட்டினார்.
மெதுவாக, படிபடையாக இந்த தந்தை – தனையனின் தோல்விகளின் காரணம், அவர்களின் அறிவின்மைதான் என்பதைப் படம் பிடித்துக் காண்பித்தேன்.
தான் வசதி இல்லாத வாழ்க்கை நடத்தினாலும், பிற்காலத்தில் பிள்ளைகள் மிக வசதியான வாழ்க்கையைப் பெறுவேண்டும் என்ற நல்ல எண்ணத்திலே பல பெற்றோர்கள் தங்களின் சுகங்களைத் தியாகம் செய்கிறார்கள். அதில் அறிவதில் குறைபாடு, இவர்கள் எண்ணம் நிரைவேரத் தடையாகிறது. இதை விளக்கிய பிறகு மகேந்திரன் மனம் தெளிந்து, எனது நண்பரானார்.
தனது தந்தைக்கு தன் அலுவக வேலையைத் தவிர வேறு எதுவும் அறிந்திருக்கவில்லை என்பதைக் கூறினார்.
தன் மகனுக்கு எந்த கல்வி சரியானது மருத்துவக் கல்விதானா என்று ஒரு மருத்துவரை கேட்டறிந்து செயல்பட்டிருக்கலாம்.
தானே முடிவு செய்யத் தேவையான அறிவைத் தேடிப் பெறவும் முயற்சி செய்யவில்லை. டாக்டர் படிப்பு, கல்வி முடிந்த உடனே பணம் கொட்டுமென அவர் நம்பினார். (அவர் படையெடுக்கும் டாக்டர் மிக வசதியாக வாழ்வதைக் கண்டு மகனுக்கு (டாக்டர் படிப்பை) சிபாரிசு செய்திருக்கலாம்.
மாறாக நன்றாகப் படிக்கும் மகனை ஒரு எஞ்சினியராகவோ அல்லது (வக்கீல், டாக்டர் போன்ற தொலைத் தவிர்த்து) வேறு துறையில் படிக்க வைத்திருக்கலாம். அவரது கனவு எளிதாக நிரைவேறியிருக்கும்.
இங்கே கவனிக்க வேண்டியது:
தொழில்கள் ஒவ்வொன்றிலும் வருமானத்தில் உயர்வு பெற சில நியதிகள் அல்லது உண்மைகள் உண்டு.
உதாரணமாக, டாக்டர், வக்கீல் போன்ற தொழில்களில் ஆரம்பகாலத்தில் அதிகம் காசு புரளாது. இவர்கள் தலை முடி நரைத்து, பாதி தலை வழுக்கையாகி வரும்போது (அதோடு, தவறாமல்) அனுபவம் பெருகி வந்தால் வருமானமும் பெருக வாய்ப்புண்டு. இந்த வகை கல்விகள், வசதியான தந்தைகளின் வாரிசுகள் அதாவது டாக்டர் – வக்கீலின் பிள்ளைகளுக்கே சரி வரும். (தனது தந்தையில் வருமானததில் நடுவயதுவரை சுகமாக வாழ்ந்து, அதன் பிறகுதான் தன் காலில் நிற்கலாம்).
கல்வி பெற்ற பிறகு கடும் உழைப்பால் கிடைத்த அனுபவம் அதனால் வந்த புகழ் இரண்டும் பிற்கால வருமானத்தை தீர்மானிக்கும்.வருமானத்தைத் தீர்மானிப்பது படித்த பட்டம் மட்டுமில்லை. அனுபவ அறிவு. அதனால் வரும் பயன்பாடு, அவர்கள் தொழிலில் கிடைக்கும் வெற்றிச் செய்திகள் மக்களிடம் சேர்வது, இவை எல்லாமே அவசியம்.
பட்டங்கள் பல பெற்றும் ஈ ஓட்டி வரும் டாக்டர்களும், வக்கீகளும் எஞ்சினியர்களும் எத்தனை பேர்?
(2) அறிவின் அடிப்படையில் வாழ்வோர்.
இவங்க பல விதங்களிலே அறிவை அடைஞ்சவங்க. பெரும்பாலும் இவர்கள் அறிவின் குறைவினால் தோல்விகளைச் சுமப்பதில்லை. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் பெற்ற அறிவுமதற்க்கு அப்பால் பல காரணங்கள் உண்டு. தவறாக அறிந்ததும், புதியதாக உருவாகும் காரணங்களும், அறிந்த சூனிலைகள் மாறுவதும் பல காரணங்களில் சில.
இவர்கள் ஏழ்மையைத் தழுவதில்லை. ஞானிகளாக மாறும் வாய்ப்பைப் பெற்றவர்கள்.
(3) அறிவில் சிறிதும், நம்பிக்கை + தவறானநம்பிக்கை + தவறான அறிவு ஆகியவற்றின் கலவையில் மிகுதியும் கொண்ட கலவையின் துணை கொண்டு வாழ்வோர்.
நம்பிக்கை என்று சொல்லும்போது, மற்றவர் பெற்ற அறிவில், தவறாக அறிந்ததில், இறைவன் ஒருவன் இருக்கிறான். இறைவனைத் தொழுதால் நலமாக வாழலாம் என்ற எல்லா நம்பிக்கைக்களும் அடங்கும்.
தவறான அறிவும், குறைந்த அறிவும் அதிக தொல்லை தரும். இறைவன் மீது வைத்த நம்பிக்கை துயரம் நீங்காவிட்டாலும், துயரத்தைத் தாங்கும் மன உறுதியை அதிகரிக்கும். மொத்ததுலே விஷயம் ஒண்ணுதானே?
அறிவில்லாம தொடங்கின வாழ்க்கை
பிறந்த யாருமே, நிம்மதியா வாழத் தேவையான அறிவோட பிறக்கல்லே. பிறந்த குழந்தைக்கு எவ்வளவு அறிவு இருக்கு? பசி, தூக்கம் மற்றும் ஈரம் இதானால வரக்கூடிய தொல்லைகள் வரும்போது அழுதா மத்தவங்க சரிபண்ணிடுவாங்க என்கிற அறிவுதான் மொதல்ல வருது.
(நம்மைச் சுத்தி இருக்கிற பல மனுசங்க, இந்த அறிவை வாழ்நாள் கடைசி வரை, அழு மூஞ்சியா, பயன் படுத்துவதைப் பாக்கலாம். இவங்களுக்கு அறிவு வளர்ச்சி இல்லைன்னு புரிஞ்சுக்கலாம் இல்லையா?)
அப்புறமா, கொஞ்சம் கொஞ்சமா, மற்றவர் உதவியில்லாம, தானாவே இப்படிப்பட்ட தொல்லைகளிலே இருந்து விடுபடுவத்ற்கான அறிவை அடையுது. வளர வளர, குழந்தைகள் அழும்போது, அவங்களோட தொல்லைகளை தீர்க்கும் அறிவை அடையுது.
இப்படி குழந்தையா சில தொல்லைகளோட தொடங்கின வாழ்க்கையிலே கணக்கில்லாத தொல்லைகள் தொடருது. தொல்லையின்னா தனியா வரல்லை.நாம அப்படி உணருகிறோம் (உளருகிறோம்) அவ்வளவு தான்..
நானும், மிலிட்டிரிலே இருக்கும்போது, என்னை ஒரு அறிவாளின்னு காட்டிக்கிறது வழக்கம். அப்ப பல மொழிகள் பேசும் சில நண்பர்களிடம் என் எண்ணங்களை சொல்வதுண்டு.
அவங்க எல்லாரும் சொல்லுவாங்க, உனக்கு பிரச்சினை இல்லை. நீ ஒரு அதிருஷ்டக்காரன். என்னோட இடத்துலே இருந்து பார்த்தா, வாழ்வு தரும் கணக்கில்லாத தொல்லைகள் தெரியும் என்பார்கள். வாழ்விலே தொல்லைகள் உண்டு, உண்டு, உண்டு என்று அடித்துச் சொல்வார்கள்.
என்னோட பதில் என்ன தெரியுமா?
வாழ்க்கையிலே, நாம் எல்லோருமே, நாம் விரும்பியும், பல சமயங்களில் விரும்பாமலும் பல புதிய புதிய சூழ்நிலையில் மாட்டிக்கிறோம். ஒவ்வொண்ணிலேயும் கொஞ்சம் நெளிவு – சுளிவு தவறாம இருக்கும். அதைப் பார்த்து பயப்படாமல், விலகி ஓடாம, அந்த நெளிவு சுளிவிலே புகுந்து, வலியில்லாமல் வெளியேரிடலாம்.
அதை பலவிதமா விளக்கலாம். இப்படிக் கூட சுருக்கமா சொல்லலாம்.
வாழும் காலத்திலே ஓவ்வோர் வாழும் சூழ்நிலையும் மாறிக்கிட்டே இருக்கு. இல்லையாக்கும், நாமே விரும்பி புதுப் புது சூழ்னிலைக்குள்ளே போயிடரோம்.
சில மனிதர்கள் இருக்கிற சூழ்நினைய சமாளிக்க முடியாம புதிய சூழ்நிலைக்கு மாறிடுவாங்க. அங்கேயும் சமாளிக்க முடியல்லியா, ஓடு வேறு ஒண்ணைத் தேடி.
சூழ்நிலைய அடைந்த அறிவாலே, சமாளிச்சு அதிலே புகுந்து வெற்றிகரமா வெளியேறினவங்க, அடுத்த வெற்றியத் தேடி, பயம் இல்லாம அடுத்ததுலே புதிய சூழ்னிலியிலே விரும்பி புகுந்துதுவாங்க.
புதிய சூழ்னிலையிலே பிரச்சனை வரும் என்று பயந்து, உள்ளதிலே சுகம்மா செட்டிலானவங்களும் மிக அதிகமானவங்க.
ஓவ்வொறு வாழும் சூழ்நிலையிலேயும் நிரைய தெரியாதது, வித விதமான நெளிவு சுளிவு இருக்கு. அதைப் பார்த்து பயப்படாம, நெளிவு சுளிவ கண்டு பிடிச்சு, அதுலேருந்து அடிபடாமல், வாழறது, அதிலே விருப்பப் பட்ட முன்னேற்றத்தை அடைவது அறிவின் பயன்.
அதிக அளவுலே அறிவைச் சேர்த்துட்டா, அவங்களை ஞானிகள் என்று சொல்லுவோம். அப்ப அவங்க ஆசை காணாமப் போயிருக்கும். முன்னேற்றம் ஒரு மாயை என்கிற நினைப்பு வந்துடும். எந்த ஒரு சூழ்னிலையும் அவங்களுக்கு தொல்லை தராது. சாதாரண மனுசங்களுக்கு கண்ணுலே கண்ட எல்லாத்தையும் நமக்கு கிடைக்கணுமின்னு ஓடுரோமில்லே. அறிவு மிக அதிக அளவில் அடைந்தவர்கள் ஓடுவதில்லை.
இதை வலியுருத்த ஒரு கதை: கோவிலில் மணியடிக்கும் தொழிலாளி.
இதைப் படிக்கிறபோது, ஒரு முக்கியமான அறிவு நமக்கு கிடைக்கும். அத் என்ன? அவ்வப்போது நாம் விரும்பாமலே நமக்குச் சாதகமில்லாத சூழ்நிலைகளிலே தள்ளப்படலாம். அப்போது அதைக் கண்டு பயம் கொள்ளாமல், இருக்கிற அறிவை செயல்படுத்தி, எதிர்கொண்டால், துயரம் வராது என்பது மட்டுமில்லை, எதிர்பாராத பல வெற்றிகள் கூடக் கிடைக்கும். இந்த கருத்து மனசுலே பதிய ஒரு பலமான பின்னணி தேவை. அதனாலே, கதை பின்னாலே வருகிறது.
அறிவை அதிகம் அடைந்த மக்கள்
மனிதன் தோன்றிய காலத்திலே இருந்து உலகத்தோட எல்லா மூலைகளிலேயும், இன்று போல, என்றுமே பலர் அறிவில்லாமல் வாழ்ந்திருக்க வேண்டும். மக்கள் சிறிய சிறிய கூட்டங்களாய் வாழ்ந்திருக்கக் கூடும். பலமுள்ளவர் பலம் குறைந்தவரை அடிமைப் படுத்துவதும், பசி, பிணியில் வாடுவோர் நிரைந்திருந்திருந்தது தெரியவருகிறது. ஒரு மனிதநேயம் கொண்ட, நாகரிக சமுதாயம் அன்று உருவாகவில்லை. இதை ஞானிகள் அன்று மக்களுக்கு செய்த உபதேங்கள் மூலம் அறிகிறோம்.
எந்த காலகட்டத்தில் அறிவற்ற மக்கள் அதிகரிக்கிறார்களோ அவர்களுக்கு மத்தியிலே அறிவிலே சிறந்த சிந்தனையாளர்களும் ஞானிகள் தோன்றியிருக்கிறார்கள். அதில் சிலர் இயற்கையை அறிய முயன்ற விஞ்ஞானிகள். வேறு சிலர் மக்கள் நல்வாழ்க்கை வாழ்வதெப்படி என்று ஆராய்ந்த மெய்ஞானிகள்.
மெய்ஞானிகள், மக்களை நல்வழியில் செல்ல வழிகள் பல சொன்னார்கள். காட்டிய வழியில் போகக்கூட அறிவு வேணுமே. எந்த காலத்திலும் அறிவை வளர்ப்பது கடினம். எனவே மக்களை நல்ல வழியில் வழி நடத்த (இறைவன் மீது) நம்பிக்கையை வளர்க்க பாடுபட்டார்கள். அதன் விளைவுதான் இன்று நாம் காணும் மதங்கள்.
இரு தரத்தினரும் உருவாக்கிய இரு பெரும் பாதைகள் அறிவுப் பாதையும் நம்பிக்கைப் பாதையும் என்று நாம் உணரலாம்.
மதங்கள் நம்பிக்கையில் அடிப்படையிலானவை. நம்பிக்கையை வேறூன்ற வைக்க, கோவில்கள், அதில் பலவித ஆராதனைகள் நோன்புகள், சடங்குகள், விழாக்கள் மற்றும் ஆடல் பாடல் வழிபாடுகள் என்பவை சேர்க்கப் பட்டு வந்தன. ஓட்டு மொத்தமாக அவைகள் இன்று பலவித கலாச்சாரங்களாக ஒளிர்கின்றன.
மதங்கள், நம்பிக்கை என்ற வாழும் பாதையாக அறியப்படுகிறது.
மக்கள் காலம் காலமாக நம்பிக்கையின் பாதையிலும், அறிப்பாதையிலும் மாறி மாறி வாழ்கிறார்கள்.
ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாக மக்களின் அறியும் திறன் அதிகரித்துள்ளன. அடைந்த விஞ்ஞான வளர்ச்சி பல மக்களை பலவிதமாக பாதித்துள்ளது.
எல்லா மத அமைப்புகளும், வழக்கமான ஆராதனைகள் சடங்குகள் மற்றும் நம்பிக்கைப் பாதையின் பல முக்கிய அம்சங்களை மேம்படுத்தி வருவதோடு நிற்கவில்லை. பல கல்வி நிலையங்களை அமைத்து, அறிவுப் பாதையை உருவாக்கியுள்ளன. மனித நல்வாழ்க்கைக்கு உதவும் ஆரோக்கியம், உடல் நலம் காக்க வைத்திய வசதி ஆகியவற்றிக்கும் முக்கியத்துவம் தந்து பல அமைப்புகளை உருவாக்கியுள்ளன.
இப்ப அறிவுப் பாதையைப் பற்றியும் நம்பிக்கைப் பாதைகள் மதங்களைப் பற்றியும் தெளிவாக அறிந்தோம். இல்லையா?
இப்போ, மணியடிக்கும் மனிதரைப் பற்றிய கதைக்குப் போவோம்.
கதை: 03
மணியடிக்கும் தொழிலாளி.
இது ஓ ஹென்றி என்கிர பிரான்ஸ்நாட்டு சிறுகதை மன்னன் எழுதியது என்று நினைவு.
ஒரு நூறு வருசம் முன்னாடி, நியூ இங்லீஷ் சர்ச் என்கிற அமைப்பு. ஆதிகத்தோடு நிக்காமல், கல்விக்கு, ஆரோக்கியம் ஆகியவற்றிர்க்கும் ஒரு முக்கிய இடம் தர முடிவு செய்தது.
அதன் அடிப்படையில், சர்ச் -ல் பணி செய்யும் அனைவரும் குறைந்தது எழுத – படிக்க அறிந்திருக்க வேண்டும். எல்லோருக்கும், முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. ஒருவரைத் தவிர அனைவரும் கற்றார்கள். கற்க இயலாதவர் ஒரு மணி அடிக்கும் தொழிலாளி. பல முறை முயன்றும், வெற்றி பெறவில்லை.
நிருவாகம், ஒரு தொகையை அளித்து, இவரைப் பணி நீக்கம் செய்தது. மணி அடிப்பதில் கிடைத்த அனுபவத்தில் கலைக்டர் வேலையா கிடைக்கும்? வேறு என்ன தொழில் செய்ய முடியும்?
ஒரு சிறிய சிகரெட் கடை ஒன்றை (பெட்டிக்கடை) துடங்கினார். இருபத்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. அன்று அவர் ஒரு பெரிய வர்த்தகர். வங்கிகள் அவருடைய கணக்கை அடைய போட்டியிட்டன.
ஒரு வங்கியைத் தேர்வு செய்தார். அவர்கள் கத்தை கத்தையாக அச்சடித்த காகிதங்களைத் தந்து, சாவகாசமாக படித்து, கையெழுத்திடச் சொன்னார்கள். இவர் எங்கே கையெழுத்திட வேண்டும் என்று சொல்லுங்கள். எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது, என்றார்.
அதிந்து போன வங்கி அதிகாரி சொன்னார். எழுதப் படிக்க அறியாமலேயே இவ்வளவு பெரிய செல்வந்தராக இருக்கிறீர்கள் உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் …..
முன்னாள் மணி அடிக்கும் தொழிலாளி, அதிகாரியின் பேச்சில் குறிக்கிட்டார், ….. “தேவாலயத்தில் மணி அடித்துக் கொண்டிருப்பேன்” என்று சொல்லி முடித்தார். வாசகர்களே, வெற்றியின் ரகசியங்கள் தெளிவானதா?
இதை இத்தோட நிருத்திக்கலாம்.
அடுத்து, கல்வி, கல்வித்திட்டம் பற்றி அலச வேண்டிய அவசரத்தில் உள்ளதால் கல்வித் திட்டங்களை கேலி செய்து ஒரு நையாண்டிக் கட்டுரை. இதை ஆங்கிலத்தில் குச்tடிணூஞு என்போம். இதையும் மற்றும் இதுபோன்ற வார்த்தை விளையாடல் கக்N , சிலேடை ஆகியவற்றை புரிந்து கொண்டு ரசிக்க அதிக அளவு அறிவு தேவை என்று அறிவோம். இப்ப இல்லையினா பரவாயில்லே, சீக்கிறம் வளத்துக்கங்க.
எங்களை மன்னிச்சுடுங்க
அடுத்த அத்தியாயத்தைப் படிங்க. படிச்சப்புரம் வாசகரில் எத்தனை பேர் இதை ரசிக்கிறார்களோ தெரியாது.
புரிந்து கொண்டு என்மேல் கோபம் கொண்ட பல ஆசிரியர்கள் இருக்கலாம். அவர்களுக்கு என் இதயத்திலிருந்து மன்னிப்பு கேட்கிறோம்.
கல்வியாளர்களே, கல்வித் திட்டத்திலே “எல்லாமே சரியா இருக்கு” என்று நீங்கள் உங்களையும் ஏமாற்றிக் கொண்டு, ஒரு சமுதாயத்தையும் 60 ஆண்டுக்கு மேளே ஏமாத்திகிட்டு, அறிவைச் சார்ந்த கல்விக்கூடங்களை, நம்பிக்கையின் அடிப்படையினால் நடத்துர கல்விக் கோவிலாக மாற்றிவிட்டீர்கள்.
மக்கள் அறிவை அடைய வழி செய்ய வேண்டிய ஒரு மாபெரும் இயக்கம் வழி தவறியதை சுட்டிக் காட்ட இதைவிட சுலபமான வழி ஏதும் தெரியவில்லையே!
வாங்க படிக்கலாம்.