அத்தியாயம் 8
கந்தசாமி: இந்த அத்தியாயம் வாசகர்களுக்கு ஒரு தேர்வு. இவர்களிலே எத்தனை பேருக்கு இதிலுள்ள நகைச்சுவை புரியுமுன்னு தெரியல்லே. நையாண்டி என்கிற விதமான ஒரு கட்டுரை. ஆங்கிலத்தில் குச்tடிணூஞு என்று அழைக்கப்படும்.
நடராஜன்: இதே போல வார்த்தை விளையாடல், நகைச்சுவை போன்றவை வாழ்வின் நாம் விரும்பாத சூழ்னிலைகளில் சிக்கும்போதும் சரி, பொருள் வேட்டையில் தோல்விகளைச் சந்திக்கும் போதும் சரி, இல்லை அது போன்ற மற்றும் பல சம்பவங்களால் மனதை இறுகலாக மாறும் நேரங்களிலும், மனதை இலேசாக்கும் சக்தி கொண்டது.
அதே போல இலக்கிய ரசனை, கவிதைகள், இசை ஆகியவை மனதை மகிழவைக்கும் திறன் கொண்டது
கந்தசாமி: எந்த மொழி கற்றாலும், அதைக் கொண்டு பலவிதமான புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாக்க மொழியறிவு அதிகமாகும். பல மொழிப் புத்தகங்களை படிக்கிற பழக்கம் அதிக அளவுலே மனச்சுமைகளைக் குறைக்கும்.
கீழே கண்ட கட்டுரையிலே இருக்கிற நகைச்சுவயும் நையாண்டியையும் இதைப் படிச்ச பலருக்கு புரியாலியாம். ஒரு சிலருக்கு ஏதோ கல்வித் திட்டத்திலே குறைகளைச் சொல்கிறோம் என்று தெரியுராப்புலே இருக்காம்.
கல்விக்கூடங்களைகல்விக்கோவில்கள்என்றுஅழைப்பது
மிகவும் பொருத்தம். ஏன் தெரியுமா?
இன்று, கல்விக்கூடங்கள், கோவில்கள் ஆகிய இரண்டுமே, நம்பிக்கையின் அடிப்படையில் செல்கின்றன.
எப்படியோ கடந்தது ஒரு கஷ்டமான காலம், நிகழ்காலமோ, துயரங்கள் கூடியது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க தேவையானது ஒரு வளமான வருங்காலம்.
நாமெல்லாம் இதைப் பெற வேண்டி, இறைவனின் அருளைத் தேடணும். கேட்டுப் பறுவதற்காக. வேண்டுதல்களை இறைவனின் முன்னாலெ வைக்கணும். சும்மாவா? தேங்காய், பூ, பழம், அர்ச்சனைச் சீட்டு, தட்டில் வைக்க சில சில்லரைகள். சகிதம் கோவிலுககுப் போகிறோம்.
அதேபோல தங்கள் மக்கட் செல்வங்களுக்கு வளமான எதிர்காலம் அமையவேண்டி, மாணவர்களை பெற்றோர் பள்ளிகள் கல்லூரிகள் என்பதாக அறியப்படும் கல்விக் கோவிலுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
கோவில்கள் : கோவிலில் பலதரப்பட்ட பூசாரிகள், அர்ச்சகர்களும், நமது வேண்டுகோளை கடவுளுக்கு எடுத்துச் சொல்ல இருக்காங்க. சீட்டு வாங்க ஒரு சில நாணயங்கள் போதும்.
ஆனால் கல்விக் கோவிலில் சமாசாரம் வேற. இருப்பதை விற்று, கடன் வாங்கி, வயிற்றைக் கட்டி வாயைக் கட்டித்தான் சீட்டு வாங்கணும். போகட்டும்.
அர்சகருக்கு கடவுளையும் பிரார்த்தனகளையும் எடுத்துச் சொல்ல பயிற்சிகள் உண்டு. அவர் புரியாத மொழியில் ஏதொதோ சொல்கிறார். நமக்கு அவர் சொல்லும் பிரார்த்த்னைகளுக்குப் பொருள் நமக்குத் தெரியாது. நமக்கு பிரார்த்தனை செய்யும் பயிற்சி இல்லை. அதனாலே அவரை நம்புகிறோம். இவர் சொல்லிய மந்திர உச்சாடனைகளில் மனம் மகிழ்ந்து, கடவுள் செவி சாய்த்து, நமது வேண்டுகோளை நிரைவேற்றுவார் என்று ஒரு நம்பிக்கை.
கல்விக்கூடங்களுக்கு நாம் பிள்ளைகளை பெரும் செலவில் அனுப்புவதும் ஒரு நம்பிக்கைதான். இங்கே படித்து அறிவு அடைந்து, பட்டங்கள் பெற்று, பெரிய வருமானம் வரும் வேலை கிடைத்து அமோகமாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கைதான்.
பக்தனின் பிரச்சனைகள் பூசாரி அல்லது அர்ச்சகருக்கு ஒரு வயிற்றுப்பிழைப்புக்கு பயனாகிறது. பக்தனின் சில்லரைகள் கை மாறுகிறது. ஆனால், பக்தரின் வேண்டுகோள் நிரைவேறியதா இல்லையா என்பதைப் பற்றிய கவலை, பூசாரிக்கில்லை.
அவரால் முடிந்த அளவுக்கு, அவருக்கு தெரிந்த அளவுக்கு, எல்லாமே கடவுளிடம் சொல்வார். ஆனால், பூசாரியின் சிபாரிசுக்கு. கடவுள் செவி சாய்ப்பாரா? செவி சாய்க்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.
கல்விக்கோவில்:
வளமான எதிர்காலத்தைத் தேடி கல்விக் கோவிலின் காலை வைக்கிறோம். ஷஹ, யுனிபாரம், ஆட்டோ, பஸ், டொனேஷன், வருடம் முழுவதும் எதோதோ செலவுகள். மாதாந்திர செலவுகள், வருடாந்திர செலவுகள், செமஸ்டர் செலவுகள் புத்தகங்கள் வாங்க ஆகும் செலவுகள், கல்விக்கொடை, கட்டிடத்திற்கு தானம் என்று ஏராளாமான பணத்தை ஒரு நம்பிக்கையுடன் செலவழிக்கிறோம். ஆசிரியரும் (கருவரையில் பூசாரி மந்திரம் சொல்வது போல மிகுந்த ஆர்வத்துடன்) மாணவருக்கு முன்னால் பாடங்கள் சொல்லி சிலபஸ்ஸை முடிக்கிறார். இதெற்கெல்லாம், பலன் கிடைக்குமா? இந்த் கல்வியினால் பிழைப்பதற்கு வேலை கிடைக்குமா? வாழ்வதற்கு அறிவு வளருமா? நம் சந்ததிகளின் வருங்காலத்தை வளமாக்குமா?
கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்., வளமாக்கலாம் வளமாக்காமலும் போகலாம். ஆசிரியர் தன் கடமையை செய்வார்: பல பஸ்களை தவற விட்டாலும் சிலபஸ்ஸை தவறாமல் முடிப்பதில் கண்ணும் கருத்துமாயிருப்பார்.
பல வித தேர்வுகள் நடத்துவார். பரிட்சைக்கு முன்னால் . முக்கியமான கேள்விகளைத் தருவார், அதோடு பதிலையும் தருவார். பட்டி அடிக்கலாம் அல்லது பிட்டடிக்கலாம். இதை எல்லாம் வாத்தியார் சரியாக செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையில் கல்வி நிர்வாகி நிம்மதியாக வாழ்கிறார்.
ஆனால் சிலபஸ்ஸை முடித்தவுடன் மாணவர்களுக்கு அதற்கான அறிவு வருமா? வரலாம். இல்லை வராமலும் இருக்கலாம். எல்லாமே, வரும் என்பது ஒரு நம்பிக்கைதான் இல்லையா?
மாணவர் பங்கு
மேலே கண்ட சிரமத்தை பெற்றோர்கள் சுமப்பது யாருக்காக? தங்களின் புத்திர செல்வங்களுக்காகத் தானே? அவர்களாவது தங்களை விட சீரும் சிறப்புமாக. வசதியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் தானே?
கல்வித்திட்டத்தின் கதாநாயகனே நான்தானே என்கிறார் மாணவர். பெற்றொரின் கனவை நினைவாக்கக் கல்வித்திட்டத்தில் கால் வைக்கிறார். வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை முடிந்தவரை கேட்கிறார். புரிந்தவரை தலையாட்டுகிறார்.
சில மாணவர்களுக்கு அதிகமாகவே புரிகிறது. அதிக மாணவர்களுக்கு கொஞ்சம்தான் புரிகிறது. வேறு பலருக்கு கொஞ்சமும் தலையிலே ஏறல்லே. பரிட்சை வருது. பத்து நாள் முன்பாகவே மனப்பாடம் செய்கிறார்.
சினிமா பாட்டு சினிமா வசனம் எல்லாம் பல வருஷம் ஆனாலும் மனசுலே நிக்கிதுல்லே. இந்த பாடம் சனியன் மட்டும், கொஞ்ச நேரம் கூட நிக்க மாட்டேங்குது. பிட் அடிச்சானும் பாஸாயிடனும். அப்படி நினைக்கிறார் மாணவர்.
எல்லா மாணவர்களும், பரிட்சைக்கு போரப்ப, வழிலே பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட்டு, தேங்கா ஒடக்கிறதா பிராமிஸ் பண்ணிட்டு (தேங்காயும் நாம தானே திங்கப்போறோம், பரவாயில்லே என்ற எண்ணம் அவருக்கு), போராரு.
படிச்சதை, இல்லை படிச்சதிலே சீரணிக்காத எல்லாத்தையும் காகித்துலே வாந்தி எடுத்துட்டா, மகனே, அடுத்த செமஸ்டர் வரிக்கும் ஜாலிதான்.
பரிட்சைக்கு முன்னாடி பத்தே நாள் திரும்பவும் புரியாத பாடத்தை எல்லாம் தலையிலே இல்லே பிட்டிலே தினிக்கணும். அதுவரே நிம்மதி.
சரி இப்போ ரிசல்டுக்கு வருவோம். இப்படிப் பட்ட படிப்பில் மார்க் எடுக்க முடியுமா?
பிள்ளையார், தான் திங்காத தேங்காய்க்கு, எத்தனை மார்க் போடவைப்பார்? யாராலேயும் சரியா சொல்ல முடியல்லெ.
மார்க் போடுவார் என்கிற நம்பிக்கையிலேதானே கல்விக்கூடத்துப் பக்கத்திலே புள்ளையார் சிலை வச்சிருக்கானுக. இல்லைனா, அங்கேயும் தலைவர் சிலையில்லே வச்சிருப்பானுக? நல்ல லாஜிக்.
அப்ப, அதுவும் ஒரு நம்பிக்கைதான். சரி பரிட்சைக்கு பத்து நாள் முன்னாலே முழுங்கிட்டு, பரிட்சை அன்னிக்கி வாயிலெடுதுட்டா, வேலை தேடரப்போ பிரச்சனை வராதா? வராது என்பதும் ஒரு நம்பிக்கைதான். அன்னிக்குப் பார்க்கலாம்.
இன்னைக்கி அப்பா அம்மா கேட்ட பணம் தராங்க. மற்ற பசங்களோட ஜாலியா இருக்கலாம். போதாத குறைக்கு பஸ்லே புட் போர்ட்லே நின்னுகிட்டு பொண்ணுங்களே கவர் பண்ணலாம். பணக்கார நண்பன்கிட்டே மோட்டர் பைக் கடன் வாங்கி, அதில் எட்டு போட்டு பொண்ணுங்களை இம்ப்ரெஸ் பண்ணலாம். காதலிக்கலாம். இதெல்லாம் எப்போ அனுபவிக்கிறது மச்சீ ? அனுபவி ராஜா அனுபவி.
அப்பா, அம்மா சொல்றாங்க:
அடப் பாவி மக்களே, வயத்தைக் கட்டி வாயைக் கட்டி, வட்டி கட்டி, எங்களுக்கே கட்டி வந்து அவதிப்பட்டு உங்களை சீரும்-சிறப்புமா பாக்க கனவு கண்டா நீங்க என்னவோ, யாரையோ வாயும்-வயிறுமா நிப்பாட்ற புரோகிராமுல்லே போடரீங்க.
அப்ப, பெற்றொர்களின் கனவு என்ன ஆவுரதுன்னு கேட்டாக்க – ஒரு மாணவர் சொல்கிறார், அவங்க கோவிலுக்கு போவாங்க, சாமிக்கு நேந்துப் பாங்க, எல்லாம் பலிக்கும் என்கிற நம்பிக்கைதான். நம்பிக்கயிலே தான் உலகம் இயங்குதுன்ன எங்க அப்பாரு, அப்பப்ப சொல்வாறு.
இது மட்டுமில்லே பெற்றொருக்கும் கல்வித் திட்டத்தில் வேற பல மிக முக்கியமான பங்குகள் உண்டு.
பள்ளிகூடத்தில் மாணவர்கள் படித்தால் மட்டும் போறாது. டியூஷன் வைக்கணும், இண்டெர்னெட் கனேக்ஷன் வாங்கிக் கொடுக்கணும், இதற்கெல்லாம் பணம் ஏற்பாடு செய்யணும். பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டுமில்லை தாய் தந்தைக்கும சேத்துத்தான் ஹோம் ஒர்க் தராங்க.
அதனால்தான், எல் கே ஜி முதல் பள்ளியில் சேர்க்க தாய் தந்தை இருவரும் நேர்காணலுக்கு வரணும். இல்லையா. அதனால பெற்றவங்க பங்கு கல்வித்திட்டத்கு உள்ளேயயே நிறைய இருக்கு.
ரொம்ப நல்லா இருக்கு !
இதெல்லாமல் உணஞ்டிணஞுஞுணூடிணஞ் ஞுணtணூச்ணஞிஞு, Mஞுஞீடிஞிச்டூ ஞுணtணூச்ணஞிஞு, ஐஅகு, IIM, IIM ஐஐகூ இவற்றுக்கு வேறே தனி பயிற்சிக்கு வேறே .செலவு பண்ணணும்
ஆமா, இத்தன பாடுபட்டு, செலவு பண்ணி கல்வியை சுமுகமாக முடித்து வெளியே வந்தா, வேலை கிடைக்குமா, கிடைக்காதா?
இதென்னையா ரோதனையயா போச்சு, இதெல்லாம் ஒரு நம்பிக்கைதான். நம்பிக்கை இல்லாமலா ஏழை பாழை படிச்சவன் படிக்காதவன் எல்லோரும் பிள்ளைகளை கல்வித்திட்டத்துலே சேக்கராங்க?
மலையாளத்துலே ஒரு பழமொழி சொல்லுவாங்க: நாடு ஓடும்போழ், நடுக்கே ஓடனுமுன்னு.
அதாவது நாட்டுலே, நம்மை சுத்தி இருகிரவங்க, ஓடரப்போ நாமும் அதுக்கு நடுவுலே சேர்ந்து ஓடிரணும். தனியா நிக்கப்படாது. புரியயுதா?
ஆனா ஓடரவங்க எல்லாரும் ஒரு அதல பாதாளத்துலே விழுந்துட்டா என்ன செய்யறது ? நாமும் விளுந்துருவோம் இல்லையா?
விளமாட்டாங்க, என்கிறதும் ஒரு நம்பிக்கைதான்.
பிள்ளைகளின் எதிர்காலம்
நம்பிக்கை எல்லாம் சரி, கல்வித் திட்டத்தில் இவ்வளவு சிரமப்பட்டு செலவழித்து வெளிவரும் பிள்ளைகள் எல்லோருமே ஒரு கல்விக்குறிய வேலை கிடைத்து வளமாக வாழ்வார்களா? அவ்வளவு வேணாம், வயிற்றைக் கழுவ, கல்விக்கடனை வட்டியுடன் திருப்ப, பெற்றோர் தான் அடைந்த கடனை அடைக்க, ஓகோன்னு இல்லைனாலும் ஓக்கேங்கிற மாதிரி, ஒரு வேலை கிடைக்குமா?
கிடைக்கலாம் இல்லைனா கிடைக்காமலும் போகலாம். கிடைக்கும் என்கிற நம்பிக்கைல தான் எல்லோரும் கல்விக்கூடம் போறாங்க. நம்பிக்கைதான் ஐயா. ….
போதும். நிருத்துமைய்யா. நீங்களும் உங்க நம்பிக்கையும்.
இப்படியும் ஒரு உண்மை:
அர்ச்சகரே இல்லாத கோவில்களில் பிரார்த்தனைகள் நிரைவேறுவது போல, ஆசிரியர்கள் குறைந்த, கூரை இல்லாத பள்ளிகளில் படித்து உயர்கல்வியை, மற்றவரோடு, எட்டிபிடித்த மாணவர்களும் உண்டு.
எல்லா செலவுகளையும் செய்து உயர்கல்வி பெற இயலாத மாணர்களும் பலருண்டு.
உயர் கல்வி பெற்றும் வேலையில்லாத வெட்டிகளாய் திரியும் பட்டதாரிகளுக்கும் குறைவில்லை. குறைந்த கல்வி பெற்று உயர் பதவி வகிப்போருக்கும் குறைவில்லையே !
இது எதைக்காட்டுகிறது ? கல்வித்திட்டத்திற்கும் உண்மைக்கும் உள்ள, இடைவெளியை.
கல்விக்கும் – வாழ்வில் அடையும் வெற்றிகளுக்கும் கல்வித்திட்டங்கள் மட்டுமே (முழுவதாக) காரணமில்லை. ஆனால் கல்வித் திட்டங்களின் குறைகளையும் மீறி வெற்றி அடையும் சிலருக்கு நாம் நமது சிரம் தாழ்த்துவோம்.
பள்ளித்திட்டததிலில் இடம் பெற்றும், வாழ்வில் பலர் வெற்றி காணதற்குக் காரணம்: பெற்றொர்களின் வேண்டுதல்களில் குறைவா? மாணவர்களின் ஊழ்விலையா?
சாலமன் பாப்பையா, ராஜா எல்லோரையும் கூட்டி சன் டிவிலே பட்டி மன்றம் கூட்டிருவோமா?
இவை எல்லாமே மனதை தேற்றிக்கொள்ள, எல்லாமே வேஸ்டா போச்சுஎன்று பைல குளோஸ் பண்ண மட்டுமே உதவும் ஆனால் வெற்றிக்கு உதவாது.
மாணவர்களின் பிரச்சனைகள்
ஒரு வகுப்பறையில் ஒரு நிகழ்வு.: ஒரு ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்துகிறார், முன் பெஞ்சில் சிலர் ஆசிரியர் தலையாட்டும் போதெல்லாம் தன் தலையையும் அதே போல ஆட்டுகிறார்கள். ஆசிரியருக்கு நிம்மதி. நான் பாடம் நடத்துவதை, இவர்கள் கவனித்து வருகிறார்கள்..
வேறு சிலர் தலைகள் வெவ்வேறு விதமாக ஆடுகிறது. ஆசிரியருக்கு புரிந்துவிட்டது, இவர்களது தூக்கத்தில் அவரர் தலைகள் தானாக ஆடுகிறது எனபது.
வேறு ஒரே ஒரு மாணவன் மாத்திரம் மோட்டு வளாயை பர்த்தவாறு இருக்கிறான். ஆகா, நாம் நடத்திய பாடத்தை சிந்திக்கிறான் போலும். இவன் தான் சிறந்த மாணவன் என்று மகிழ்கிறார். அந்த மாணவனை கேட்கிறார், நான் சொன்னதெல்லாம் தலையில் நுழைந்ததா என்று.
ஒரு எலி, இலவச மதிய உணவு நேரம் எப்போது வரும் என்று பசியோடு, நிம்மதி இல்லாமல் இங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது. கடைசியாக வகுப்பு அறையின் சுவற்றில் இருந்த ஒரு பொந்தில் நுழையப் பார்த்தது. பையன் தன் காதில், நுழைய என்ற சப்தம் கேட்ட உடன் சுய நினைவுக்கு வந்தான், உடனே எழுந்து பதில் சொன்னான். ஐய்யா, கிட்டத்தட்ட நுழைந்து விட்டது. வால் மட்டும்தான் பாக்கி என்றான்.
எலி தன் வளைக்குள் நுழைவதை எல்லோரும் காணலாம், தெரிந்து கொள்ளலாம். மாணவன் படிக்கும் பாடம் மண்டையில் நுழைவதைக் காண வழி உண்டா? இதை யாருமே தெரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை.
அதை இப்போது விளக்கப் போகிறேன். இதற்குப்பிறகாவது கல்வித் திட்டங்களில் மாற்றங்கள் வருமா?
செய்யப்படும் என்ற நம்பிக்கை எனக்கும் உண்டு, எல்லோரும் நம்பிக்கை வைத்திருப்பது போலும் நானும் நம்புகிறேன். எல்லோருமே சொல்கிறார்களே, உலகமே நம்பிக்கையின் அடிப்படையில்தானே இயங்குகிறது.
அறிவை அடையும்வழிகள்
சிந்திப்பது
அடைந்த செய்தியை, அறிவாக மாற்ற சிந்தனை தேவை.
நடராஜன்: பரிட்சை எழுதுரப்போ, படிச்சதிலேருந்து சரியான விடை எதுன்னு நினைவுபடுத்திப் பார்ப்போம் இல்லையா? அதை சிந்திப்பதாகச் சொல்லலாமா?
கந்தசாமி: அதை யோசனை செய்யரதுன்னு சொல்லுவாங்க. செய்தியா நாம சேமிச்சு வைத்ததிலிருந்து தேடிப் பிடிக்கிறது. அது சிந்தனையாகாது. நல்ல உதாரணம் சொல்லுணும்னா நெரய இருக்கு. விஞ்ஞானிகள் சிந்தனை செய்யாமல் அண்டத்திலே ஒளிஞ்சிருக்கிர ஒரு உண்மையைக் கண்டுபிடிக்க முடியாது. மருத்துவர்கள், அவங்க கிட்டே வர நோயாளிகள் சொல்றதை மட்டுமே வச்சு, சரியா வைத்தியம் செய்ய முடியாது.
விதையிலே மறைந்துள்ள எண்ணையை எடுக்க பல வித முறைகளைக் கேட்டிருப்போம் பாத்திருப்போம்.
வெறும் கையினால ஒரு பிடி எள்ளையோ, கடுகையோ வச்சு நசுக்கினா ஒரு சொட்டு எண்ணை கூடத் தேராது. அந்த விதைகளை அம்மியிலே நசுக்கினா சில சொட்டு எண்ணை அதிகமாகவே கிடைக்கும். அதயே செக்கிலே போட்டு ஆட்டினா அதிகமாவே கிடைக்கும். எக்ஸ்பெல்லர்னு ஒரு மின் இயந்திரம் இருக்கு. அதிலே போட்டா, கிட்டத்தட்ட விதையிலே உள்ள எல்லா எண்ணையையும் பிரிச்சுடும்.
அதே போலத்தான் அறிவை, செய்தியிலேருந்து பிரிக்கவும் பல வழிகள் இருக்கு. ஒவ்வொரு வழியும் மற்றதைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்தவை. இதை சிந்திக்கும் வழிகளா சொல்லலாம்.
சின்னப் பசங்க விளையாட அட்டையிலே செஞ்ச, ஜிக் சா பசில் (Zig saw puzzle) தருவாங்க. இது (மனசுனாலே) சிந்சிச்சு கையினாலே செய்யுர, ஒரு விளையாட்டு.
ஓவ்வொண்ணையும் சொல்லி. அதுக்கு உதாரணமா ஒரு கதை அல்லது நிகழ்ச்சியை சேத்துச் சொன்னா, அதை செயலாக்கத் தேவையான வழிகள் மனசுலே பதியுமில்லே. வழக்கம் போல எச்சரிக்கிறேன். தயவு செஞ்சு கதையைப் பிடிச்சிக்கிட்டு கருத்தை காத்திலே விட்டிராதீங்க.
இயற்கையாகவே சிலபேரு பலவிதமான அறிவை சிந்தனைகள் மூலமா அடையராங்க. அது எப்படின்னு முதல்லே பாத்துட்டு, செய்தியிலேருந்து அறிவைப் பிரித்தெடுக்கிற வழிகளைத் தேடுவோம்.
ஒரு முக்கியச் செய்தி
- உலகத்துலே உள்ள மக்கள் எல்லாரையும் சிந்திக்கும் திறன் உடையவங்களா மாத்த முடியாது.
- பேரதிகம் மக்கள், சிந்தனை செய்யும் மற்றவர்களோட சிந்தனையை ஒட்டி வாழரவங்க. இவங்களை நம்பிக்கையின் அடிப்படையா வாழரதா சொல்லிடலாம்.
- சிந்தனை செய்ய இயலாதவங்க உடல் உழைப்பை எளிதாக நினைப்பாங்க.
- சிந்தனையிலே வாழரதை எளிதா நினைக்கிறவர்கள் உடல் உழைப்பிற்கு தகுதி இல்லாதவர்கள்.
- இயற்கை, தன் வேலை சரியா நடக்க, மிகக் குறைவானவர்களுக்கு வெவ்வேறு அளவுகளில் சிந்திக்கும் திறனையும் மற்றவர்களுக்கு, வெவ்வேறு அளவிலே உடல் பலத்தையும் தந்திருக்கு.
- ஓரு சிறிய அளவிலே சிந்தைனைத் திறன் உள்ளவங்களையும் அதிக அளவுலே செயலாக்கம் கொண்டவர்களும் உள்ள சமுதாயம் மட்டுமே தான் சுமுகமாக இயங்க முடியும்.