"

அத்தியாயம் 9

நினைவாற்றல்:

அறிவை அடைய நினைவாற்றல் அவசியம். ஆனா பிறக்கும்போது நம்ம எல்லோருக்கும் குறைவாகவே இருக்கு. சில குடும்பங்களிலே, குறிப்பா மத்திய வருமானம் உள்ள வீடுகளில்,   தங்கள் வீட்டுச் சிறு பிள்ளைகளை பெரிய பெரிய பாடல்கள் கவிதைகள் தோத்திரங்களை மனப்பாடம் செய்யரதை பழக்கராங்க. இவங்களுக்கு, நினைவாற்றல் மற்றவங்களைவிட அதிகமா இருக்கும். நினைவாற்றல் என்பது கிடைக்கும் செய்தியையும்,  சிந்திச்சு சேக்கர அறிவையும் சேமிக்கிற பொட்டி அல்லது பாதுகாக்கிற அறை போல நினைச்சுக்கலாம்.

வட இந்திய மக்கள் பேருலே, வேதி, துவேதி, திரிவேதி, சதுர் வேதி என்று பேரு இருக்கும். இதெல்லாம் குடும்ப பேரு. ஒரு காலத்துலே குடும்ப நபர்கள், ஒன்று, இரண்டு மூன்று நான்கு வேதங்களையும் மனப் பாடமா படிப்பாங்களாம்.

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாதும்பாங்க. ஐந்து வயதிலே நினைவாற்றலை வளர்க்க ஆரம்பிச்சா, கடைசிவரை வளக்கலாம். இன்னிக்குக் கூட ஆரம்பிக்கலாம்.  முயற்சி செஞ்சா அடைய முடியாதது ஒண்ணுமில்லே.  இசையோட இணைத்த எதையும் மனப்பாடம் செய்யறது சுலபம்.

ஆர்வம் இருந்தா எதுக்கும் வயசு ஒரு தடையில்லே, உங்களுக்கு நினைவாற்றல் குறையாக உணர்ந்தால், திருக்குரள் தொடங்கி கணக்கில்லாத கவிதைகள், அறிஞர்கள் அள்ளித் தந்த அரிய அறிவுரைகள். (உதாரணம் – அறிவுதரும் ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன்), பாரதியார்  பாடல்கள், புத்தர், ஏசுபிரான், தீர்க்கதரசி முகம்மது ஆகியவரின் தந்த அறிவுறைகளை (பொருளுடன்) மனப் பாடம் செய்யும் போது, நல்லறிவும்  நினைவாற்றல் இரண்டும் சேர்ந்தே வளரும்.

அறிவின் ஆழங்கள்:

ரொம்பத் தெரிஞ்சவங்க அறிவை மூன்று எல்லைகளாப் பிரிக்கிறாங்க. இந்த  மூணுலேயும் ஒவ்வொண்ணுக்கும்  அறிவின் ஆழங்கள்  உண்டு.

 (1) தெரிஞ்சது என்ற எல்லை. (2) தெரிஞ்சுக்க முடியும் என்றஎல்லை,  (3) தெரிஞ்சுக்க இயலாதது என்ற எல்லைதெரியாதது  மூன்றாவது.

(1) முதல் வகை.  உணர்வுகளாலே அறிவது. மற்றவர்  உணர்ந்து, அதை நாம படிச்சு, பரிசோதனை செஞ்சு நம்மளோட அறிவா மாத்திக்கிறது. இந்த வகை அறிவு எல்லாத்தையுமே எல்லோருக்கும் தெரிஞ்சிருக்க என்று  அவசியம் இல்லை. எல்லோருக்கும் சிறிதளவு தெரியும்.

(2) உணர்வுகளைத் தாண்டியுள்ள (உலகத்தோட) அறிவை, பல வித அறிவியல் உபகரணங்களைக் கொண்டும் பரிசோதனைகளைச் செய்தும், புதிசு புதிசா கண்டு பிடிக்கறாங்க. இன்னும் கண்டுபிடிச்சிட்டே இருப்பாங்க.  இது இரண்டாம் வகை அறிவு.  இதுவே, நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் அறியாத அறிவின் உறைவிடம். ஆனால் ஞானிகளும், விஞ்ஞானிகளும் விளையாடுமிடம்.

(3)  ஒரு எறும்பும் ஈயும் என்ன உபகரணத்தை வச்சிட்டு, யுனிவர்சிடிலே கொடுக்கற அறிவுலே ஏதானும் ஒண்ணை அடைய முடியும்? நமக்குத் தெரிஞ்சு ஒண்ணும் இல்லே.

அதே மாதிரி நம்ம பிண்டத்துக்கும் (உடம்புக்கும்), பெரிய அண்டத்துக்கும் சம்பந்தம் என்ன, கடவுளை எப்படிப் பிடிக்கிறது என்ற  தேடுதல்களை உள்ளடக்கிய அறிவு. இவை மனிதனோட புலன்களின் ஆதிக்கம் எல்லாத்தையும்  கடந்து ரொம்பதூரம் போகணும். முதல் இரண்டு வகையான அறிவின் எல்லைகளைத் தாண்டி இருக்கிறது. ஞானிகளில் பலர் இந்த எல்லைகளைக் கடக்கும் முறைகளை அறிந்தவர்கள். இவர்கள் அடையும் அறிவு மூன்றாம் வகை.

அவங்களும் விஞ்ஞானி மாதிரி தான் அறிஞ்சதை மக்களுக்கு பாடலாகக் கதறிப் பாக்கறாங்க, கவிதையா சொல்லிப்பாக்கராங்க, கட்டுரையா எழுதித்தள்ளராங்க. நம்ம மனத்திலே இருக்கிற மிகச் சிறிய அளவு மக்களுக்கு புரியர மாதிரி இருக்கு. ஆனா, புரியல்லே.

அதுனாலே நம்மள்ளே பல பேரு அவங்க கையிலே ஒரு சீப்பு வாழைப் பழத்தைக் கொடுத்துட்டு, காலிலே விழுந்து கும்பிட்டு, சாமி எனக்கு அதுவேணும் இதுவேணும் என்று ஒரு பட்டியல் தந்துட்டு சன்தோசமா திரும்பிடுவோம். அறிவுப் பசியிலே இருக்கிறவங்களுக்கு வாழைப்பழம் என்ன பிரயோசனம் செய்ய முடிவயும்?

இப்ப அறிவை எப்ப எப்ப நாம தேடறோம் என்று பாக்கலாம்.

(1) முதல் வகையான அறிவு;  ( Proactive Learning. ) எல்லோரும் பொருளைத் தேடுவோம். சில பேரு மாத்திரம்,  கிடைத்த  அறிவை எல்லாம் பாடமாகவோ, அனுபவம் மூலமாகவோ தேடி அடையராங்க. பிறகு பொருளைத் தேடுவாங்க. இவங்களுக்கு ஓரளவு வெற்றி தீர்மானமா கிடைக்கும்.

சுத்தி உள்ள மத்தவங்க அடையர சிக்கல் துயரம் தோல்வி எல்லாதையும் பாத்துட்டு, இப்படிப் பட்ட சிக்கல் நமது வாழ்வில் வரலாம். அதைத் தவிற்கத் தேவையான அறிவைத் தேடி அடைவார்கள்.

இவர்கள் வருமுன் காப்பவர்கள்.

(2)  இரண்டாம் வகை; ( Reactive Learning). எல்லோருமே ஏதாவது ஒரு பொருள் வேட்டையிலே இறங்கிடறோம். பொருள் நிரைய  உள்ளவன் பதவி,  சமூக அங்கீகாரன்னு தேடுவாங்க.   ஒத்தன் தேடினா பரவாயில்லே. பலரு தேடரதுனாலே நிரைய தடங்கல் வரும்.   என்ன அறிவை அடைஞ்சா, தடங்கலை குறைக்கலாம் என்று அறிவார்கள்.

இவங்க கண் கெட்டப்புரம் சூரியநமஸ்காரம் பண்ர விதமான மக்கள்.

(3) Domain dependent ஒரு தொழில் செஞ்சு வெற்றி கிடைச்சா நல்லா வாழலாம். பிடிச்ச துறை ஒண்ணைத் தேர்ந்தெடுத்து கல்வி திட்டத்துலே புகுந்து அறிவை அடையலாம். சுய முயற்சியிலே மற்றும் அனுபவ பூர்வமா தேவையான அறிவை அடைந்து தேவையான பொருளை அடையலாம். இதற்குத் தேவை, அறிவுப்பசி. இவர்கள் தேடுவது குறுகிய தொழில் அறிவு. துறையில்   உள்ள நெளிவு சுளிவுகள். பொருள் தேட இலக்கு ஒண்ணு குறிச்சுட்டு, அதுக்கு என்ன அறிவு, குறைந்த நேரத்துலே குறைந்த உழைப்போட அடையலாம் என்று அறிவைத் தேடும் வகை.

(4)  நாலாம் வகை;  Domain independent learning.  உதாரணமாக; – பிற நாடுகளை, அங்கே உள்ள கலாச்சாரங்களை காலம் கடந்த கதைகளை, இலக்கியங்களை, உலகம் போற்றிய அறிஞர்களாக அறியப் பட்டவர்களின் சிந்தனைகளை அறியும் ஆர்வம். இவர்கள் அறிய வேண்டியது பல மொழிகளை. இவர்கள் தேடுவது பறந்த அறிவு.

சிலர் கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படிச்சி அதுலே ஏதாவது புதிய செய்தியைத் தேடுவார்கள்.

இவங்க செய்திய மட்டுமில்லாமே நினைவாற்றலையும் வளர்த்து நல்ல ஒரு அறிவாளியா வாழ்வாங்க.

என்னோட அம்மாவோட பாட்டியை,- நான் சிறுவனா இருக்கும்போது கவனிச்சிருக்கேன். மளிகைக் கடையிலிருந்து வருகின்ற பொட்டலம், ஒரு பத்திரிக்கையிலிருந்து கிழித்த காகிதாமாக இருக்கும். அதைப் படிக்கச் சொல்லுவாங்க. (அவங்களுக்கு படிக்க வராது),  கிழிச்ச பக்கம் எப்படி இருக்கும்? அரையும் குறையுமான வரிகள்.  அப்படியும், அதைப் படிக்கச் சொல்லிக் கேட்பாங்க.

வீட்டிலே எல்லோருமே பிரச்சனை வரும் போது பாட்டியின் உதவியத்தான் கேப்பாங்களாம்.   என் பாட்டி மாதிரி ஆளுங்க  பொருள் வேட்டையில் இறங்கியவர்கள் இல்லை. அறிவை வேட்டையாடரவங்க.

(5) Primary Knowledge இந்த வகை அறிவைத் தேடும் மக்கள் வெகு சிலரே! நியூட்டன்னு ஒரு விஞ்ஞானியப்  பத்தி பள்ளிக்கூடத்திலே படிச்ச அத்தனை பிள்ளைகளுக்கும் தெரியும். அவரு ஆப்பிள் மரத்துக்குக் கீனழ படுத்திருந்தாராம். அப்போ ஆப்பிள் ஒண்ணு  மரத்திலேருந்து கீழே விழுந்திச்சாம்.

அன்னிக்கித் தான் ஆப்பிள் மொதமொதல்ல கீழே விழுந்திச்சா? அதுக்கு முன்னாலே, ஆப்பிள்  வானத்தை நோக்கியா போயிட்டிருந்தது? கீழே விழுந்த ஆப்பிள் நமக்கு வயத்துப் பசிய தூண்டிவிடும்.     நாம  என்ன பண்ணுவோம்? ஆப்பிளை எடுத்துத் தொடச்சி, சாப்பிட்டுவிட்டு சந்தோசமா போயிருப்போம்.

நம்மைச் சுற்றி பலவிதமான மக்கள் இருக்காங்க. ஓவ்வொருவரும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள் சிந்தனைகள்   உடையவர்கள்தானே?

  உதாரணமா, ஒரு சிதிலமடைந்த  கற்சிலைகளைப் பாக்கறோம்.

பக்தனுக்கு அது ஒரு கல்லாவோ இல்லை சிலையாவோ தெரியாது. அதிலே கடவுள்தான் தெரியும். கையைக் கூப்பி,  கன்னத்துலே போட்டுக்கிட்டு வணங்கிடுவான்.

பக்தி இல்லாத ஒரு சிற்பக் கலைஞன்  காணும்போது சிலையின்   அழகு, வடித்ததில் ஒரு  நேர்த்தி என்பதையெல்லாம் அனுபவிப்பான்.

ஒரு நாத்திகன், அதை ஒரு  கல்லாகத்தான் பார்க்கிறான்.

புலன்களால்  உணரும் பொருளில், அறிவின் மூலம் பார்க்கும் போது, அதே பொருளின் பல்வேறு பரிமாணங்கள் தெரிகிறது.

இப்போ நியூட்டன் சங்கதியைப் பார்க்கலாம். விழுந்த ஆப்பிள் அவர் வயிற்றுப் பசியைத் தூண்டாமல் அறிவுப் பசியைத் தூண்டியது.

பௌதிக விஞ்ஞானத்தை இரண்டாகப் பிரிக்கலாம்.

(1)  புலன்களால் (நேரடியாகவும், மறைமுகமாகவும்) அறியப்படும் அறிவைச் சார்ந்தது.   மற்றது

(2) புலன்களைக் கடந்த  அறிவியல். அன்று நியூட்டன் தோட்டத்து மரத்திலெருந்து விழுந்த ஆப்பிள், இன்றுள்ள பல விஞ்ஞான அதிசயங்களுக்கு வித்திட்டிருக்கிறது.  இவருடைய கண்டுபிடிப்புகள். அதுமட்டுமில்லாமல்,   இந்த வித பௌதிக விஞ்ஞானத்தின் எல்லையாக அறியப்படுகிறது.

இரண்டாவதாக வரும், புலன்களைக் கடந்த பௌதிக அறிவியலுக்குத் தந்தையாக ஐன்ஸ்டீன் அறியப்படுகிறார்.

உலகம்  உருண்டைவடிவானதுன்னு கண்டு பிடிச்ச கலிலியோவுக்கு மரண தண்டனை கொடுத்து கொன்னுட்டாங்க.  நியூட்டன் கலிலியோவுக்கு முன்னாடி பொறந்திருதா, கலிலியோ தப்பிச்சிருப்பாரு. ஏன் என்று கொஞ்சம் சிந்தியுங்கள்.

நியூட்டன் பெற்ற அறிவை, தானே உணர்ந்து சேகரித்த அறிவு என்று    சொல்லிடலாம்.

(6)  Secondary Knowledge;  யாரோ, எப்பவோ  உணர்ந்து அறிந்ததை சேமிச்சு வச்சு, பரிசோதனை எல்லாம் செஞ்சுகாட்டி மத்தவங்க தன்னுடையதா ஆக்கிக்கிறதுதான், தேடாமல் மறைமுகமாக பெற்ற இந்த வகை அறிவு.

கல்விக்கூடத்துலே இதை செய்யரதா சொல்லிக்கிறாங்க.

பொரியியல் நிபுணர்கள் இந்த விதமான அறிவை ஒண்ணு சேர்த்து, மனிதனின் பலவிதமான தேவைகளை பூர்த்தி செய்யராங்க.

(7) மிக உயர்ந்த அறிவு.

கடவுள்  நம்பிக்கை,  அறிவைச் சேக்க இயலாதவர்களுக்கு அவசியம் என்று ஒரு மாதிரியாக உணர்கிறோம்.  அறிவு குறைந்த மக்களோட பிரச்சனையிலே முக்கியமானது எது நல்லது, எது கெட்டது, எவன் நல்லவன்? எவன் நல்லவனைப் போல நடிச்சு,  நம்மைக் கவுக்கக் காத்திருக்கான் என்று தெரியாதது.

கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு நம்மை மோசம் செய்து நம்ம கிட்டேயிருந்து சுரண்ட அவசியம் எதுவும்  இல்லே. நம்மைப் படைச்ச  இறைவன் நமக்கு எத்தனை தேவையோ, அதேபோல, அதே இறைவனுக்கும்  நாம தேவை. (இதை வேற ஞானிகள் சொல்லாட்டலும் நான் சொல்றேன், கேட்டுக்கங்க).

அதனாலதான் ஞானிகள் சொல்றாங்க கண்ணுலே தெரியுர மனுசனை நம்பரதை விட, கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளை நம்பலாம் என்று சொல்றாங்க.

எல்லா துன்பத்தையும் அவன் பாத்துப்பான் என்று நம்பிட்டாக்க தொல்லைகளோட பளு பாதிக்குமேல கொறைஞ்சிடும். ஒரு நம்பிக்கை பெரிய பலமும் பலனும் தரும். அது முதல் கட்டம்.

கடவுளைக் கண்டு கைகுலுக்க, இல்லை கடவுளோட காலைப் புடிச்சு அவரோட ஓண்ணா ஒக்கார முயற்சி பண்றது, அதுக்கான அறிவைத் தேடரது மனித வாழ்க்கையோட மிகப் பெரிய குறிக்கோள்.

வள்ளுவர் மட்டுமில்லாமல் பலர் சொன்னதை இப்போ அலசுவோம்.

                    கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்

                    நற்றாள் தொழார் எனின்.

பெரிய பட்டப்படிப்பு எல்லாம் படிச்சிட்டு முனைவர் பட்டம் வாங்கிட்டு ஒண்ணாங்கிளாஸ் வாத்தியார் வேலையோ, இல்லை  ஒரு வீடு வாங்க விற்க உதவுற புரோக்கர் வேலையோ பாத்தா, பெரிய படிச்சு என்ன பிரயோசனம் என்று கேட்டா எல்லோருக்கும் புரியும்.

அதேபோல, கற்பதன் மூலம் பெற்ற அறிவின் ஆழமும் அகலமும் அதிகமாகி வரும் போது, பொருள், பதவி, அங்கீகாரம் தேடரது ஒரு சின்னப்புள்ளைத் தனம். அப்போ, எதைத் தேடினா சரியா இருக்கும்?

நம்மைப் படைச்சவன் யாரு? எங்கேஇருக்கான்? அவனைக்கண்டுஉறவாடரது எப்படின்னு சிந்திக்கணும்.  அதைத்தேடி

அடையுற அறிவை அடைவதுவே அறிவின் மிக உயர்ந்த பயன்.

ஒரு சிவனிடியார் பாடுகிறார்:

          நமச்சிவாயமே ஞானமும் கல்வியும்…..

இது போன்ற அறிவு பல ஞானிகளோட எழுத்துகளிலே சொற்களிலே கொட்டிக்கிடக்குது. இப்போ இண்டர்நெட்லே இதல்லாம் கிடைக்குது. தினம் ஏதாவது படிச்சுத் தெரிஞ்சுக்கிட சபதம் எடுத்து ஒழைச்சா எப்பவானும் கடவுளை பாத்து உறவாடலாம்.

சீன ஞானிகளோட இரண்டு வரிகளை நாம் முழுசா புரிஞ்சுக்டுக்கல்லே. நினைவுலே வச்சுக்கங்க.

அத்தியாயம் 10

சிந்தனை செய்தால்

கிடைக்கின்ற செய்தியை அறிவா மாத்தலாம்

நடராஜன் :  ஞானிகள் இறைவனை எப்போதும் சிந்தையில் வைக்கணும் என்பாங்க. அது எப்படி? பொதுவா  சிந்தையின்னா, எப்போதும் சிந்திக்கிற இடம் போல இல்லே தோணுது. .

கந்தசாமி: அப்படி செஞ்சா, அடிக்கடி மனசுக்கு கஷ்டம் தர எல்லாத்தையும்  நினைவுகளிலிருந்து தள்ளி வச்சு, அங்கே இறைவனை ஒக்காத்தி வச்சிடணும்.  அப்ப கஷ்டம் மறைந்திடும்.இது  நம்பிக்கைப் பாதைக்கான  விஷயம்.

இது அப்படியே அறிவுப் பாதைக்கும் பொருந்தும.¢ பொதுவா  மக்களோட மனசுலே என்னும் அறிவு (உண்மையாகவே, அது அறிவல்ல, செய்திகள் தான்)  அறையிலே இருக்கற செய்தியை மனதின்  முன்னாலே  கொண்டாந்து சிந்தையில்  வச்சு தட்டி, ஒடைச்சு பிரிச்சு அறிவாக்கணும்.

அங்கே பொருள் தொடர்பான செய்திக்குப் பதிலா, இறைவைப் பற்றிய செய்தியை  சிந்தனைகளை ஓட்டினா,  நிம்மதியும் கிடைக்கும் அதோட கடவுளை அறியும் அறிவும் எப்பவாவது கிடைக்கும் என்கிறார்கள்.

ஐய்யா, மாவு அரைக்கிர மிசின்லே அரிசியைப் போட்டா, அரிசிமாவு வரும். கோதுமையை, கேழ்வரகு போட்டா, அரிசி மாவு வராது. சிந்தனையும் ஒரு மிசின்தான். அதையும் ஒரு விதமான கம்ப்யூட்டர் மிசின்னு சொன்னா சுலபமாயிடும்.

இப்போ நாம பாக்கப் போறது அதைத்தான். பொதுவா, சிந்தனையோட லெ¢பாட்டை  நாம் பலரும் சரியா அறியாதவங்க, தான். சிலர் அறிஞ்ச அரை குறை செய்திகளையே ஒரு அறிவாவோ இல்லையினா ஒரு பேரறிவாகவோ நினைச்சுக்கிட்டு   நிம்மதியா கஷ்டப்படராங்காக. சில செய்திகளை நினைவு அறை இல்லேன்னா சேமிப்புப் பெட்டியிலே அடச்சுட்டு, நிறைய அறிவு வச்சிருக்கோம் என்று நிம்மதியா இருப்பாங்க.

நடராஜன் : தோரணம்?

கந்தசாமி : பெரும்பாலோருக்கு தோரணம் கட்ற பழக்கம் இல்லே.

நடராஜன் : இப்ப என் மண்டையிலே மணி அடிச்சுடுத்து.

கந்தசாமி : இப்போ உங்க மண்டையிலே மணி அடிக்கல்லேன்னா, என் மண்டை வெடிச்சுடும். மேற்கொண்டும் சொல்லுங்க.

நடராஜன்: நாம துணிமணி, பாஸ்போர்ட், பாங்க் பாஸ்புக், செக்-புக்கு மாதிரி அவசியமான எல்லாத்தையும் ஒரு பெட்டியிலே அடச்சு வச்சா  தேடரபோது விரைவா கிடைக்காது. சலவை செஞ்சு வச்ச பேண்டு சட்டை கசங்கிப் போயிடும். தேடரப்போ காகிதங்கள் கிழிஞ்சு போயிடும்.

கந்தசாமி : சுத்தமா புரியுது ஐய்யா.

நடராஜன் : நாம வச்சிருக்கரதோ வெறும் செய்தி. அவசரமா தேடரப்போ அது சுலபமா கிடைக்காது. அதற்கப்புரம் செய்தியிலேருந்து, அறிவப் பிரிச்சு எடுக்கும் திறமை பலருக்கு வராது.  தெரிஞ்சவங்களுக்கும் நேரம் எடுக்கும். அதனால சரியான செய்தி நமக்கு இருந்தாக்கூட தேவையான சமயத்துலே பயன் படரதில்லை.

கந்தசாமி : பொட்டியலடச்சு வச்சதை எடுத்துத் தோரணமா கட்டினா தேடின செய்தி வேகமா  கிடைக்கும். துணி தொங்கவிடர கயிரு மாதிரி இல்லேன்னா  பீரோலே  (ஙிச்ணூஞீ ணூணிஞஞு)  பேண்ட் சர்ட் தொங்கவிடர வார்ட் ரோப் மாதிரி. சரிதானா?

நடராஜன் : அதிகமா தேடாம துணி கிடைச்சுடும். ஆனா செய்தியையும் அறிவையும் எப்படி தொங்க விடரது?

கந்தசாமி : கண்ணாலே பாத்து, கையால சொல்றதை விளக்குவது சிரமம் இல்லை. கண்ணால காணாத ஒண்ணை, மனசால் செய்யறதை விளக்குறது அவ்வளவு சுலபம் இல்லே. இருந்தாலும் முயற்சி செய்வோம்.  படிக்கிறவ்வங்களுக்கு இப்போ ஒரு ஐடியா கிடச்சிருக்கும். மனக் கண்ணாலே  படமாப் பாக்கலாம்.

நடராஜன் : இதை வரிவடிவங்களோட சேர்த்து படிக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

கந்தசாமி : உண்மைதான். இப்போ செய்திகளை அறிவா மாத்தும் சிந்தனைகளை புரிய வைத்திடுவோம். செய்தியை  பயன்படும் வகையிலே அறிவா மாற்ற பல சிந்தனைகள் உண்டு.

  1. அறிவாளியாக மாறப் பயன்படும் சிந்தனனைகள்.
  2. மேதாவியாக மாறப்பயன்படும்சிந்த்தனைகள்

என்று இரண்டாப் பிரிச்சுச் சொல்றேன் .

நடராஜன்: சரி.

கந்தசாமி :  முதல்லே, அறிவாளியானாத்தான் யாருமே பேரறிவாளி அல்லது மேதாவியா ஆக முடியும். அதனாலே அறிவாளியா வெற்றிகரமா மாறிட்ட பிறகு அடுத்த கட்டம் மேதாவியாகும் முயற்சி செஞ்சிடுவோம்.

அறிவாளியாகும் வழிகளை, படிப்படியா  நாலு கட்டமா பிரிச்சு.கீழே  சொல்லி இருக்கேன்.  முதல் மூணு கட்டத்தை எழுத்தை வைத்து சிந்திக்கிறது. நாலாவது எண்ணை வைத்து சிந்திக்கிரது என்று பிரிச்சிருக்கேன்.

அறிவை தாவர விதைகளிலில் இருகிற எண்ணைக்கு உதாரணமா எடுத்துக்கலாம். இந்த விதைகளிலேருந்து எண்ணையை வெளியே எடுத்து நாம் பயன் பெற பல வழிகள்   இருக்கு.

நம் உடல் நலத்திற்கு தேவையான கொழுப்புச் சத்தை அடைய எண்ணையை சாப்பிடறோம், இல்லையா அப்படி, மனநலம் காக்கவும்   உடல் நலம் காக்கவும் அறிவு என்கிற எண்ணைய செய்திகள் என்கிற விதையிலேருந்து வித விதமா பிரிக்கமால்.

இப்பெல்லாம், பிராஸஸ் (கணூணிஞிஞுண்ண் ) என்கிற பதம்  தொழில் கூடங்களிலே அதிகமாகவே பயன் படுத்தராங்க. இதை செய்முறை என்று சொல்லலாம்.

சிந்தனை என்ற பதம் செய்திகளை அறிவாக மாத்துகின்ற பல செயல் முறைகளுக்கு ஒரு பொதுவான  சொல்லாக எடுத்துக்கலாம்.

அதேபோல பிரச்சனைகள் வரும்போது நாம அதைத் தீர்க்க அறிவைத் தேடரோம் இல்லியா. அப்ப   பிரச்சனையையும் ஒரு செய்தியாகப் பார்க்கலாம். அப்போ, சிந்தனை என்ன செய்யுது?  காத்துவச்ச  அறிவை புதிய செய்தியோட இணைத்து அறிவை ( தீர்வைத்) தேடும் ஒரு செயலா, செயல் முறையா அறியலாம்.

எழுத்துகளால் விளக்கக் கூடிய  பிரச்சனைகளும், அதைச் சார்ந்த சிந்தனைகளும்.

(1)முதல் வகை அறிவு. கேட்டு, படித்து அறிந்த செய்தியிலே, நேரடியா கிடைக்கிர அறிவு.

விதையை நேரடியாகத் தின்று உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து சேர்ப்பது போன்றது இவ்வகை அறிவு. முதல் வகை அறிவு கிடைக்கும் செய்தியிலேயே நேரடியா இருக்கும். ஆனா மிக மிகக் குறைவா இருக்கும்.

விதைகளைத் தின்று வாழ்வது வயத்திற்கு கோளாறு வராதா? நடைமுறைக்கு ஒத்துவருமா?

கல்விக் கூடங்களிலே  பெரும்பாலும் அளிக்கப் படுவது, இந்த முதல் வகை அறிவு. நமக்குத் தேவையான அறிவு சேந்திடிச்சான்னு பள்ளிக் கூடங்களிலே சோதனை செய்யரதும் இந்த வகை அறிவைத் தான்.

வேலை தேடப் போரப்ப, உதை வாங்கர காரணம் இதைவிட வேற  (இரண்டாம், மூன்றாம்,  நான்காம் ) வகை சிந்தனையைப் பழகாதது தான்.

இதுக்கு வேறு ஒரு  உதாரணமும் கூடச் சொல்லலாம். பசிக்குது. அடுத்துள்ள கடையிலே கிடைக்கிற பன்னு வாழ்ழைப்பழம்  போன்றவற்றை, வாங்கித் தின்னு பசியைப் போக்கிடலாம்.

குறிப்பிட்ட சில வகைகள்தான் கிடைக்கும்.  நம்ம விரும்புகிர உணவுகள் கிடைக்காது. நம்ம விரும்பும் சுவைகள் கிடைக்காது. வயத்துக்கு கோளாறு வரலாம்.  அப்ப வேற என்ன வழி இருக்கு ?

அறிவை அடையும் மற்ற செயல் முறைகள்.

வீட்டிலேயே கச்வய்கறி, பல சரக்கு சாமான் எல்லாம் வாங்கி, சமச்சு சாப்பிடலாம். காய்கறி வகை பருப்பு உப்பு புளி எல்லாமே நேரடியா உணவாகாது,  வேக வச்சு, வதக்கி, உப்பு புளி மொளகா சரியான அளவிலே சேத்து.  சமைக்கிறது.  சமயல்லே சில செயல் முறைகள் இருகிறது. அதை எல்லாம் பின்பற்றன்ணும். அதன் பிறகு தான், கடையிலே வாங்கின காய்கறி – பலசரக்கு  சாப்பிடும்  உணவாக மாறுகிறது. அதை சாப்பிறப்போ, உடம்புலே சத்து ஏறிடும், வயத்துக் கோளாறும் அவ்வளவா வராது.

அப்படியே செய்திகள், சிந்திக்கிறது என்கிற செயல் முறைகளை பயன் படுத்தும்போது, ஒரு அறிவாக மாற்றிடும். இப்போ சிந்திக்கிறதை ஒண்ணு ஒண்ணா பாக்கலாம்.

(2) அறிவை அடைய சிந்திப்பது.

இது இரண்டாவது வகை அறிவு. இதை ஆங்கிலத்திலே ஒளிந்த அல்லது  மறைந்துள்ள (கூச்ஞிடிt டுணணிதீடூஞுஞீஞ்ஞு) என்று அறியலாம்.

திருக்குரளிலேருந்து ஒண்ணு.

          எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

          மெய்ப் பொருள் காண்பதறிவு

இதை இரண்டாவது அறிவைப் பத்தி வள்ளுவர் சொன்னதா நான் நினைக்கிறேன். படிப்பது பொருள் இல்லே. உண்மையான பொருள் மறைஞ்சிருக்கும். என்னன்னு தேடுங்கறாரு.

 நம்ம எல்லோருக்கும் ருசியா  சாப்பிடப் பிடிக்கும், இல்லையா? இப்போ சாப்பாட்டிலிருந்தே  மேலும் ஒரு உதாரணம் எடுத்துக்கலாம்.

கடலை, அதாவது மல்லாக் கொட்டை  அல்லது நிலக்கடலை சாப்பிட்டு ஆனந்தப்பட என்ன செய்யணும்? கொட்டயை உடைக்காமல் அப்படியே  சாப்பிட்டால் கெட்டியான தோலு நம்ம வாயைக் கிழிச்சுடும். அதைவிட மோசம், முந்திரிப் பருப்பு. முந்திரிக் கொட்டையை அப்படியே கடிச்சா பல்லு உடைஞ்சிடும். அப்ப என்ன செய்யணும்?

அப்படியே சாப்பிடாமல், மேல் மூடிய ஒடச்சி உள்ளே இருகிற பருப்பை பத்திரமா எடுத்துத்தான் சாப்பிடணும். அப்படி பல செய்திகளிலே நமக்கு  உபயோகமான அறிவு ஓளிந்திருக்கு. அதை உணர்வதும் அதைப் பிரித்தெடுத்து பயன் பெறும் வகையானது இந்த இரண்டாம் வகை சிந்தனை.

இப்படிப் பட்ட செய்திய அறிவா மாற்ற உபயோகிக்கிற வகையான சிந்தனனையயை ஆங்கிலத்தில்  லேட்டரல் திங்கிங் (ஃச்tஞுணூச்டூ tடடிணடுடிணஞ்).  வார்த்தைகள் தெரிவிக்கும் பொருள்களை ஒதுக்கி வைத்து, மறைமுகமான பொருளைத் தேடுவது, இந்த வகைச் சிந்தனை.  இதை விளக்க ஒரு சின்னதா ஒரு கதை.

திருடினா, தப்பு பண்ணினா எப்பவுமே குற்றம்தான். ஒரு காலத்துலே அதிகாரியோட மகனோ, மந்திரியோட மகனோ குற்றம் செய்தால் கூட  தண்டனை கிடைக்கும் (இந்தக் காலத்துலேதான்  பிள்ளைகள் என்ன கொடிய குற்றம் செஞ்சாலும் தப்பிச்சிடலாம் இல்லையா?).

கிருஷ்ணதேவராயர் ஆட்சி செய்தப்போ அவருக்கு புத்திசாலி மந்திரி ஒருவர். தெனாலி ராமன் என்ற பெயர்.  பல மந்திரிகள் பிள்ளைகளைப் போல அவருக்கும் ஒரு உதவாக்கரைப் பிள்ளை. பிள்ளைக்கு திருடுற பழக்கம் நிரையவே உண்டு.

ராஜாவோட தோட்டத்திலே புகுந்து ரோஜாப் பூவைத் திருடுவது இவன் வழக்கம். பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் இல்லையா? ஒரு நாள் காவல்காரர்கள் இவனைக் கையும் களவுமா பிடிச்சாங்க, ராஜா முன்னால நிருத்தப் போராங்க.

என்ன இருந்தாலும் மந்திரி பிள்ளை இல்லியா, அதனாலே, ஒரு பல்லக்கிலே ஏத்தி அரண்மனைக்குக் கொண்டு போறாங்க. குற்றத்தை நிரூபிக்க சாட்சி வேணுமில்லை அதற்காக, அதே பல்லக்கிலே, திருடின பூ உள்ள பூக்கூடையையும் வச்சிருக்காங்க.

அரண்மனைக்குப் போற வழிலே, எதிர் திசையிலே தெனாலி ராமன் வருக்கிறார். பல்லக்கு, பிள்ளை, கூடை இதைப் பார்த்த வினாடியில் என்ன விஷயம் என்று புரிஞ்சிக்கிட்டாரு.

ஏதானும் சொல்லணும்னா அதிக  நேரம் இல்லை. பிள்ளையை தண்டனையிலிருந்து தப்பிக்க வைக்கணும். சுருக்கமா ஒரு செய்தி சொல்லணும். காவலாளிகளுக்கு அது புரியக்கூடாது. மகனுக்குப் புரியணும். அவன் தப்பிக்கனும். அப்படி ஒரு சிறிய செய்தி சொன்னார்.                       வாயுள்ள பிள்ளை பிழைக்கும்

பொய் சொல்லச் சொன்னாரா?  இல்லை. மகனுக்கு செய்தியிலே ஒளிந்திருக்கும் செய்தி கிடைத்துவிட்டது. காவல்காரர்களுக்கு  புரியல்லே.

மந்திரி மகன் அரண்மனையை அடையும் முன்னாலே பூவைத் தின்றுவிட்டான். குற்றத்தை நிரூபிக்க சாட்சி இல்லாம போச்சு. மகன் தப்பிச்சுட்டான்.

இந்தக் கதையிலே உள்ள செய்தியை,  “அறிவிருந்தா தவறு செய்யலாம். செய்துவிட்டுத் தப்பிக்கலாம்” என்ற ஒரு தவறான செய்தியா பாக்காதீங்க.

தவறு செய்யும்போது உடனடி தண்டனை கிடைத்தால் தவறு செய்தவனுக்கு  நன்மை உண்டாகும். ஓவ்வொரு முறையும் தப்பிக்கும் போதெல்லாம், குற்றம் செய்பவர்களுக்கு தவறான தன்னம்பிக்கை கூடிவருகிறது. அதனால் அவர்கள் செய்யும் குற்றங்களின் வீரியங்களும் கூடிவரும். வெகு விரைவில் பெரிய குற்றங்களில் ஈடுபட்டு தப்ப முடியாத ஒரு சூழ்னிலையில் பெரிய தண்டனை இவர்களை எதிர்பார்க்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

(3) அறிவின் மூன்றாவது கட்டம்.

செய்திகளை இணைத்தால் கிடைக்கும் அறிவு. எனக்கு ஒரு உறவுக்காரப் பையன். நினைவாற்றல் மிக அதிகம். கெமிஸ்ட்ரி படிச்சு பத்து வருடத்துக்கு மேல ஆயிட்டாலும், படிச்சதிலே எதைக் கேட்டாலும் தயங்காமல் விடை வரும். அந்த அறிவுள்ள பையனுடன் ஒரு உரையாடல். (உ.பை அப்படின்னா,  உறவுக்காரப் பையன்).

உ.பை: நம்ம நாடு முன்னேற்றத்திலேயும் அறிவிலேயும் அதிகம் பின் தங்கியிருக்கக் காரணம் சமுதாயத்தில் பரவியிருக்கிர பல மூடநம்பிக்கைள் தான் காரணம்.

நான்: எங்கே, ஒரு உதாரணம் சொல்லு.

உ.பை: பேய்.  பலர் பேய், பிசாசு இதெல்லாம் இருக்குன்னு நம்பராங்க.

நான்:   அப்புரம்?

உ.பை: புளியமரத்துலே பேய் இருக்குதாம். அதுங்கீழே, ராத்திரி படுத்து தூங்கினா, பேய் கொன்னுடுமாம்.

நான்: செய்தி என்ன?

உ.பை: …..

நான்: எல்லா உயிர்களும் சுவாசிக்கின்றன, தெரியுமா? அசையா உயிர்களான தாவரங்களும் சுவாசிக்கின்றன. உண்மையா?

உ.பை: நிச்சயமா?

நான்: பாட்டனி படிச்சியா? அரோபிக்குன்னா என்ன?

உ.பை: கார்பன்-டை-ஆக்ஸைட உள்ளே வாங்கி, ஆக்ஸிஜனை வெளியிடும் வகையான மரங்கள். அனோரோபிக்குன்னா, பகல் வேளையிலே எல்லா  மரத்தையும் போல கார்பன்-டை-ஆக்ஸைடை உள்ளே வாங்கி, ஆக்ஸிஜனை வெளிவிடுஅம். ஆனா, ராத்திரிலே ஆக்ஸிஜனை உள்ளே வாங்கி கார்பன்-டை-ஆக்ஸைடை வெளிவிடுது.

நான்: புளிய மரம் என்ன வகையைச் சேர்ந்தது?

உ.பை: ….. அனோரோபிக் …….

நான்:  நம்மைச் சுத்திஉள்ள காத்திலே ஆக்ஸிஜன் குறைவானா என்னவாகும், அதைவிட கார்பன்-டை-ஆக்ஸைடு கூடுனா என்னவாகும்……

உ.பை: புரிஞ்சிடுத்து.. மரணம்….. பின்ன பேய் பிசாசு???

நான்: இதை மூடநம்பிக்கையின்னு சொல்றதுக்குப் பதிலா, மூடனுக்கு நம்பிக்கை வரவக்கிறது என்று சொன்னா தப்பில்லே.  இதை எல்லாம்  பாடமா படிச்சு, பட்டம் வாங்கின உனக்கே புரியல்லே.

ராத்திரியிலே புளிய மரத்துக்குக் கீழே படுத்து  உறங்கி பிழைச்சு எழுந்தா சன்தோசம். ஆபத்தானது. பள்ளிக்கூடமே படிக்காதவனுக்கும் பாட்டனி படிக்காதவனுக்கும், படிச்சும் பிரயோசமில்லாதவனுக்கும், புளிய மரத்துக்கு கீழே உறங்கினா சாவு ஏற்படுமின்னு புத்தியிலே ஏத்ததரது எப்படி?

உ.பை: நீங்க எப்போதும் சொல்வது போலே, அறிவை அடைய இயலாதவருக்கு, நம்பிக்கையே வாழும் வழி.

நான்:  சிந்தனை செய்யாத உயிர் எதுவுமே இல்லை.  எல்லோருமே சரியான செய்தியை தேவையான அளவு அறிவா சேர்க்கத் தவறி விடுகிறோம். அரைகுரை அறிவோட சிந்தனை செய்தால் விளக்கங்கள் மாறுகின்றன.

உ.பை: நீங்க என்ன சொல்றீங்கன்னு தெரிஞ்சுடுத்து. புளிய மரத்தின் கீழே உறங்கினா உயிருக்கு ஆபத்து என்கிற எச்சரிக்கை தவறில்லை. ஆனால், சொல்லப்பட்ட விளக்கம் சரியல்ல. எனக்கு அடிப்படை எல்லாமே தெரியுது. நான் ஏன் தவறிட்டேன்? ஆனாலும் எப்படி நீங்க கண்டுபிட்டிச்சீங்க? நான்:

வாசகர்களே, எல்லோரும் கேட்டுக்கங்க.

இரண்டு அல்லது அதற்கதிகமான செய்திகள் இணையும்போது அறிவு உண்டாகிறது.

நாம நமக்குக் கிடைத்த பல செய்திகளை, தேவையில்லையின்னு ஒதுக்கி விடுவோம். அறிவைச் சேர்க்க ஆசைப் பட்டா, செய்தி கிடைச்ச உடனே இது நமக்கு தெரிஞ்ச எதாவதோட சேருதான்னு ஓத்துப் பாக்கணும். (ரம்மி விளயடவங்களுக்கு இது சுத்தமா புரியும்).  இல்லியாக்கும், மனதிலே சேத்துவச்சிடனும். புதிய செய்திகள் வரும்போது, இதே போல சேராத  செய்தி எல்லாத்தையும் சேர்த்துப் பாத்துடனும்.  இப்படி செய்திகள் சேரும்போது அதுவே அறிவா மாறி, மனசுலே நிரந்தரமா உக்காந்துடும்.

உ.பை: செய்திக்கும் அறிவுக்கும் என்ன வேற்றுமை?

நான்: இப்படி நினைச்சுப் பாரு. செய்தி வரப்போ மனசு கேக்குது. ஐய்யா சேமிக்கிற இடம் குறைவா இருக்கு. இந்த செய்தியை சேக்கணுமா? இந்த செய்தியாலே பசி போகுமா, சாவு வராம தடுக்கலாமா? வளமா வாழும் வகை செய்யுமா? பல செய்திலே இந்த மூணுக்கும் விடை, இல்லை, இல்லை, இல்லை என்று வரும். மனசு ஏத்துக்காம தள்ளிடும். மனசு  அறிவா ஏத்துக்க இந்த மூணுலே ஏதானும் ஒண்ணு ஆமாம் என்கிற பதில் வரணும்.வந்தாத்தான் மனசிலே மணியடிக்கும்.

இப்போ நாம சில செய்திகளை அலசினோம்.

செய்தி வரப்போ, மனசோட பேசிப் பாக்கலாம். என்ன சொல்லுதுன்னு கேப்போம்.

நீ சொல்றே: மரங்கள் சுவாசிக்கின்றன. மனசு பதில் சொல்லுது அது பாட்டுக்கும் சுவாசிக்கட்டும். என்னை ஏன் தொந்தரவு செய்யுரே?

மனிதர்கள் வாழ ஆக்ஸிஜன் அவசியம். மனசு பதிலா சொல்லுது. அப்படியா, செய்தி அவசியம்தான்.

நீ சொல்றே, கார்பன்-டை- ஆக்ஸைடு அதிகமாயிட்டா உயிருக்கு ஆபத்தாகிடும். மனசு சொல்லுது, இந்த செய்தியையும் சேர்த்துக்கறேன்.    வாழ்வா சாவான்ற பிரச்சினையில்லே.

எல்லா மரமும் கார்பன்-டை-ஆக்ஸைடை தன்னுள் வாங்கி ஆக்ஸிஜனை வெளியிடுது. மனசு பதிலா சொல்லுது. ஆகா மரத்துங் கீழே உறங்கினா அதிகம் வாழலாம். மோசமில்லே. இதை சேத்துக்கறேன்.

சில மரங்கள், ராத்திரி நேரத்துலே ஆக்ஸிஜனை உள்ளே எடுத்து  கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியே விடுகிறது.

மனசுலே மணியடிக்குது. மனசுக்குள்ளே தூங்கிட்டிருந்த சிந்தனை தன் வேலையை ஆரம்பிச்சிடுத்து.

சொந்த பந்தங்களுக்கு அறிவை சொல்லியாச்சு. சொன்ன பேச்சைக் கேட்காம விதண்டா விவாதம் செய்கிற  பயல்களை என்ன செய்யறது?

பேய்னா என்ன தெரியுமா? கண்ணுக்குத் தெரியாதாம் ஆனா கிட்டெ வந்தா கொன்னு போட்டுவிடுமாம்.

கார்பன்-டை-ஆக்ஸைடு, கண்ணுக்குத் தெரியுமா? தெரியாது. அப்ப கார்பன்-டை-ஆக்ஸைடை ஒரு பேயாப் பண்ணிடு.

          படிக்காத, விதண்டா விவாதம் பண்ணுர பசங்களுக்கு எச்சரிக்கை.

          புளியமரத்துலேபேய்குடியிருக்குது. ராத்திரிதூங்குரவங்களை

          மூச்சை திணர வைக்குதாம், அதுலே சிலரை சாவடிதுடுத்தாம்.

எல்லா நம்பிக்கைகளையும்  மூடநம்பிக்கையா கணக்கிடக் கூடாது. எல்லா நம்பிக்கையும் அறிவா எடுத்துக்கறதும் தவறு. தெரிஞ்ச விஞ்ஞான அறிவை வைத்து ஆராய்ந்தால்,  எதைப் பின்பற்றலாம், எதை ஒதுக்கி வைக்கலாம் என்று கண்டுபிடிச்சிடலாம்.

இப்ப நாலாவது கட்ட அறிவுக்கு முன்னேறிடலாம்.

  1. நாலாம் கட்ட அறிவு

வள்ளுவரு சொல்லிட்டாரு.

          எண்ணென்பஏனைஏழுத்தென்பஇவ்விரண்டும்

          கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

கணக்கை அலட்சியமா விட்டுவிட்டால் வாழ்க்கை சுகப்படாது. அதோட  அதுவே கணக்கில்லாத பிரச்சனைகளா மாறி, நம்மைத் தொல்லைகளாகத் தொடரும். கணிதத்திற்கு அடிப்படையான எண்களை வச்சு விளையாடரதை நல்லா  பழகிடனும். கணக்கை சொல்லித்தரப்போ, தினசரி வாழ்க்கையின் தேவையோடு பலவிதமா இணைத்து சொல்லித் தந்தால்  மனதில் சுத்தமா பதியும்.

மொதல்ல கணித அறிவையும்  கணிதமில்லாத்த செய்தியையும் எப்படி இணைத்து அறிவை அடையலாம் அல்லது வாழ்வில் பயன் பெறமுடியும்   என்று  சொல்வதை விட, எப்படி இன்றியமையாதது என்பது பொருத்தமானது.

இப்போ வாழ்க்கைக்கு தேவையான பொருளோ பயணமோ எல்லாத்துக்கும் ஒரு கொள்ளளவு, ஒரு வாங்கும் விலை விற்கும் விலை, நீளம் அகலம் உயரம், தூரம், வேகம், கட்டணம்,  மொத்த விலை சில்லரை விலை என்று எண்கள் அதிகம் இல்லாத துறை மிகக் குறைவு.  ஓரளவுக்கு உள்ளுணர்வு சொல்லி கணித ரீதியா சில செய்திகளை மாத்திரம் சிந்திக்கப் பழகிட்டோம்.

இதைவிட கொஞ்சம் மனசுலே ஏத்தரத்துக்கு  கொஞ்சம் சிரமமான விசயம் இப்போ  நான் சொல்லப்போறது. ஆனா அது ஒரு சிக்கலான செய்தியி இல்லை. கொஞ்சம் மனச அப்படி இப்படி ஓட விடாம, கவனமா படிக்கணும். அப்படி செஞ்சா  இந்த வகையான சிந்தனை என்ன என்கிற விளக்கம். டக்குனு மனசுலே ஏறி ஒக்காந்திடும்.  இதை ஒரு எளிய உதாரணத்தோட பார்க்கலாம்.

கணிதம் ஒரு தனி உலகமா நினைத்துப் பாக்கணும். அறிவுலகத்துலே  வாழ்வில் நாம் நாடும் தேடும் எந்த அறிவு வகைகள் மற்றும் செய்திகள் எதுவுமே செல்லுபடியாகாது.  ஆனா எழுத்துலகுலே வர பல பிரச்சனைக்களை எண்ணுலக்குக்கு சரியா மாத்திட்டாக்க, படுவேகமா தீர்வு  கிடச்சுடும்.  விஞ்ஞானா ஆராய்ச்சிலே மற்றும் அறிவியல் ரீதியான கட்டமைப்பு  எல்லாமே கணித உலகத்தோட உதவி இல்லாமல் நடக்காது. பலவித வாகனங்களோட கட்டமைப்புலே தொடங்கி அதன் செயல் பாடுகளுக்கு பயனாகிற கம்ப்யூட்டர்கள் இதே அடிப்படையில் நிகழ்கின்றன.

இதை மனசுல பதிய வச்சுக்க ஒரு உதாரணம் பாக்கலாம்.

எழுத்து உலகத்தை நாம் வசிக்கும் வீடாகவும், கணித உலகத்தை ஒரு ஓட்டலாவும், சமையல் பண்றதை ஒரு  சிந்தனையாகவும் கற்பனை பண்ணிப் பாருங்க. வீட்டிலே ஒரு மாதிரியாகவும் ஓட்டலிலே வேற விதமாகவும் சமைப்பாங்க இல்லியா?

தினம் நாம் ஓட்டல்லே சாப்பிட அவசியம் வராது. ஏன்ன விலை அதிகம். அங்கே பல பேருக்கு சமைக்கிறதனால நம்ம தினசரி தேவையோட ஒத்துவராது.  சுவை மாறுபடும்.  பலருக்கு உடல் நலத்துக்கு  ஓட்டல்களிலே  சமைத்தது  ஒத்துவராது.

நம்ம வீட்டுக்கு அதிக அளவுலே மக்கள்  விருந்துக்கு வரப்போ வீட்டிலே தேவையான அளவு பாத்திரம், உதவிக்கு ஆளு, விரவா செயல்பட தனி இயந்திரங்கள் எதுவுமே இல்லை. அப்போ ஓட்டல்லேந்து வாங்கிடுவோம். மத்தபடி எப்பவும் வீட்டுச் சாப்பாடுதான்.

ஓட்டல்லே வேகமா கிடைக்கும்,  செலவுதான் அதிகம்.

நாமெல்லாம் நமது செய்திகள்ளை எழுத்துலகிலே சிரமம் வரப்போ எண் உலகத்துக்கு அனுப்பி (டிரான்ஸ்பர் செய்து) அங்கே கிடைக்கும் சிந்தனையை சரிவர  பயன் படுத்தி, தேவையான தீர்வு கிடச்சப்புரம் நம்மோட எழுத்தலகத்துக்கு ஓடி வந்துடறோம். இதை விஞ்ஞானிகள் டொமைன் டிரான்ஸ்வர் என்பார்கள்.

கணித உலகத்துலே ஆக்சிஜன், பசி, கொடுமை, தேவை, தொல்லை  கடவுள்  இரண்டு அல்லது அதிகமான  எண்ணோ, எழுத்தோ, எழுத்து சொல்லும் எண்ணோ இவற்றை எல்லாம் பலவிதமா இணைத்து (சிந்திக்கும்) வழி முறைகள் ஏராளம். இதை இங்கே இப்போ நிறுத்திடுவோம்.

லாஜிகல்சிந்தனை

இதுவும் எண் கணித அறிவைக் கொண்டு சிந்திக்கிறதுலே சேர்ததுதான்.

கல்விக் கூடங்களிலே சாதாரண எண் கணிதம் படிச்சு முடிச்சு பலநாள் கழித்து  மாடர்ன் அல்ஜீப்ரா பள்ளியிலே சொல்லிக் கொடுப்பாங்க. ஆன  இந்த வகையான கணித விஞ்ஞானம் பல நூறு வருடங்களா எந்தவித பயன்பாட்டும் கருதி இல்லாம வளத்துட்டு வந்தாங்க.

இப்ப கம்ப்யூட்டர் – தொலை தொடர்புத் தொழில் துறையிலே இந்த வகைக் கணிதம் அதிகமா பயனாகுது. அதெல்லாம் எப்படி சொல்லிக் கொடுத்தா பிற்காலத்துலே பயனாகும் என்று அறிந்து செய்லபடனும்.

இங்கே எண்ணுலம் போல குறியீடுகள் காட்சி தந்தாலும் எண் எழுத்து என்ற இரண்டு உலகத்திலேருந்தும் அதிக வித்தியாசம்  உள்ளது.

இதை வார்த்தைகளிலே விளக்குவதற்கு பதிலா சில உதார்ரணங்களைப் பார்த்தா சுத்தமா மனசுலே பதியும்.

துக்கமான விஷயம் இதுலே இருக்கு. கல்வித் திட்டத்துலே, எழுத்து எண் என்ற இரண்டும் கொடுத்த உடனே  எண் மற்றும் லாஜிக் அடிப்படையிலான சிந்தனை எப்ப்படி செய்யறதுன்னு சொல்லிக் கொடுத்திருந்தா மாணவர்களின் சிந்திக்கும் மற்றும் செயலாக்கம் இரண்டும் அதிகரித்திருக்கும்.  இதையும் இங்கே முடிச்சிடறேன்.

இப்போ அதிபுத்திசாலி அல்லது பேரறிவாளனா  மக்கள் மத்தியிலே எப்படிப் பேர் வாங்கலாம்?  சுலபமா முடிக்கணுமின்னா, பேரையே பேரறிவாளன் என்று வைத்துக் கொள்ளலாம். அது அதிக நாள் ஓடாது.

அடுத்ததா, அதைப் பாக்கலாம்.

License

Icon for the Public Domain license

This work (மிகவும் உயர்ந்த் அறிவை அடைவது எப்படி? by nat123; நடராஜன் நாக்ரெத்தினம்; and Natarajan Nagarethinam) is free of known copyright restrictions.

Share This Book