அத்தியாயம் 12
கந்தசாமி: இது தான் விவரிக்க ரொம்ப சிக்கலான விஷயம்,
நடராஜன்: இதோட சிரமத்தை முன்னாடியே சொல்லிட்டீங்களே. கண்ணாலே பாத்து இல்லையினா, நமக்குள்ள ஐந்து உணரும் கருவியினால் அறிய முடிஞ்சதை, கையினால செய்ய வேண்டும் என்றால் அதை விளக்கறது சுலபம். இது மனக்கண்ணாலே பாத்து மனசுனாலே செய்ய வேண்டியது. அது தான் சிரமம்.
கந்தசாமி: தோரணங்கள்கட்டி பேரறிவாளராவது எப்படி?.
நான் முதன் முதலா தோரணத்தைப் பத்தி சொன்னப்போ, உங்களுக்கு அரசியல் தோரணம் மட்டும்தான் நினைவுக்க்கு வந்திச்சு இல்லையா? மத்த எந்த வித தோரணமும் நினைவுக்கு வரல்லே. இல்லியா?
நடராஜன்: உண்மைதான். நீங்க மத்த தோரணத்தை பட்டு பட்டுனு சொன்னப்போ, எம் மனசிலே மணியடிச்சுது.
கந்தசாமி: அது எதுனாலே? பல வகையான தோரணங்களைப் பாத்திருந்தாலும், அதை அப்படியே, சேமிப்புப் பெட்டீலேயே சேத்து வச்சிருக்கீங்க.
தோரணம் என்கிற ஒரு தோரணம் கட்டணும். அதிலே, நீங்க எப்ப ஒரு புதுவகையான தோரணத்தை பாக்கிரபோதும், அதைத் தோரணம் என்கிற தோரணத்திலே கட்டி அதிலே ஓவ்வொரு வகையான தோரணத்தையும், ஒரு வரிசைக் கிரமா, சேத்திடணுட்ம்.
நடராஜன்: கேக்கறத்துக்கு நல்லா இருக்கு. ஆனா, அதை எப்படி செய்யறது? எனக்கு புரிஞ்சிடுத்து. ஆனா எல்லோருக்கும் ˆஉரிஞ்சிக்கிட்டு பயன் படுத்துகிற மாதிரி எப்படி சொல்றது?
கந்தசாமி: ரொம்ப சுலபம். எப்ப ஒரு புது தோரண வகையைப் பாக்கிறபோதும், நீங்க அதுவரைக்கும் பாத்த அத்தனை தோரண வகையும் மனக் கண்முன்னாலே கொண்டு வாங்க. உடனே மனக் கண் முன்னாலே ஒரு தோரணம் உருவாகி, எல்லா வித தோரணங்களும், அதிலே தொங்கிடறதைப் பார்த்திடுவீங்க.
நடராஜன்: அப்ப தோரணமாக் கட்டின தோரணம் என்று கேட்டவுடனே, மனக்கண்ணு முன்னாலே அத்தனை தோரண வகைகளும் வரிசையா நிக்கும். அப்படித்தானே?
கந்தசாமி: எந்த ஒரு வார்த்தையைக் கேட்கும்போதும், மனசுலேருந்து பொருளைத் தேடாதீங்க. அது எந்த தோரணத்திலே கட்டினோமுன்னு தேடிப் புடிச்சி, அதிலே தேடுங்க.
நடராஜன்: புரிந்து விட்டது. இதை ஆரம்பிக்கிறது சிரமம். ஆனா பழக்கத்துக்கு வந்திட்டா மிக மிக சுலபம்தான்.
கந்தசாமி: அவசரப்படாதீங்க. இது முதல் அடிதான்,
நடராஜன்: இப்போ, அடின்னு நீங்க சொன்னப்போ, சின்னப் பிள்ளையா இருந்தப்போ அப்பா கொடுத்த அடி, அளப்பதற்கு பயனாகும் அடி என்னும் அளவு கோல், தண்ணிப்பானை அடியிலே, அடி தடி என்கிற பல அடிகள் என் மனக் கண்ணு முன்னாலே நின்னுடுச்சு,
அடியார்கள், ராமலிங்க அடிகள், குன்றக்குடி அடிகள், இளங்கோ அடிகள் போன்ற அடிகளை விட்டுட்டீங்க சார். அளவுகள் என்கிற தோரணத்துலேயும் அடி தொங்கணும். அடிகளார் அடிகள் என்று அறியப்பட்ட பெரிய மனுசங்க பேரையும் தொங்க விடனும்.
நடராஜன்: மேலே சொல்லுங்க.
கந்தசாமி: வெளியிலே கட்டுர தோரணம் அழகுக்கு, மனசுலே கட்றது அறிவுக்கு. இரண்டுவிதத் தோரங்களிலேயும் ஒரு ஒழுங்கு காணப்படனும்., அதுதான் அதிகமான பயன் தரும்,
அதேபோல மனசுலே அறிவுத் தோரணம் கட்டும்போது ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதா இருக்கணும்,
நடராஜன்: பள்ளிப் பிள்ளைகளுக்கு ஒரு போட்டி நடத்துவாங்க. சுமார் நூறு வார்த்தைகளை போர்டுலே எழுதிட்டு பிள்ளைகளை பத்து நிமிஷம் வரை பாத்து மனப்பாடம் பண்ணச் சொல்லுவாங்க. அப்புரம் போர்டை அழிச்சுட்டு, மனப்பாடமா பண்ணின வார்த்தைகளை எழுதச் சொல்லுவாங்க.
சில பிள்ளைகள் மாத்திரம் அதிக வார்த்தைகளை கரெக்டா சொல்லிடுவாங்க. அவங்க ஒண்ணுக்கொண்ணு தொடர்பு இருக்கிற வார்த்தைகளைத் தேடி மனசிலே (தோரணமா) போட்டுருவாங்க.
உதாரணமா, தட்டு, டேபிள், ஸ்பூன், (சாப்பாட்டு சமாச்சாரம் என்று ஒரு தோரணமாக), பேனா, சட்டை, புத்தகம், பஸ், இதெல்லாத்தையும் பள்ளிகூடம் என்கிற tத்தோரணம் கட்டி அதிலே தொங்கப் பாட்டிடுவாங்க.
கந்தசாமி: ஒரு வார்த்தைய பிடிச்சாச்சுனா, அதோட பத்து வார்த்தையும் ஓடியாந்திடும். ஒன்றோட ஒன்று தொடர்புள்ள செய்திகளையும், அறிவையும் மனதுனாலே தேடி (யோசிச்சு) அதை ஒன்றோடு ஒன்றை இணத்து நினைவுலே வைப்பதை ஒரு நல்ல அறிவுத் தோரணம் கட்ரதா சொல்லலாம்.
இப்போ அறிவைத் தோரணா கட்டி பயன்படுத்தரது எப்படின்னு யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது, இல்லையா?
நடராஜன்: கந்தசாமி, சிக்கலான விஷயங்களை மக்களுக்கு தெரியப்படுத்த உங்களோட உதவியா ஏன் தேடறேன்னு புரியுதா?
கந்தசாமி: நீங்க சொல்லிக் கொடுத்ததைத்தானே நான் சொல்றேன். புதிசா என்ன சொல்லிட்டேன்?
நடராஜன்: அதில்லை கந்தசாமி, நான் சொல்றமச்அதிரி சொன்னா உங்களை மாதிரி சில பேருக்குத்தான் புரியுது. அதிலும், உங்களுக்கு எல்லோருக்குமே புரியர மாதிரி சொல்ல முடியுது. உங்களேட சிந்தனையோட வேகம் மிக மிக அதிகம். எதையாவது புதிசா சொல்றப்போ தினசரி வாழ்க்கையிலேருந்து உதாரணமா டக்குனு சொல்லிடரீங்க.
உங்களை கவனிச்சுட்டுத்தான், நான் புது விஷயம் பேசரபோதும், பாடம் சொல்லிக் கொடுக்கரபோதும், தினசரி வாழ்க்கையிலேருந்து தேடிப் பிடுச்சு சில உதாரணங்கள் சொல்றேன். உதாரணங்கள் மாணவர்கள் மனசுலே ஏத்தி பத்திரமா வச்சு பின்னாலே தேடிப் பிடிக்க மிகவும் உதவியா இருக்கு.
கந்தசாமி: அப்ப நாம, கடைசியா வரிவடிவங்களை எப்படி பயன் படுத்தரதுன்னு பாத்துட்டு, புத்தகத்தை முடிச்சுடுவோமா?
நடராஜன்: அப்படியே செய்வோம்.
பின் குறிப்பு:
சமீபத்தில் இந்த ஆண்டு சம்மர் விடுமுறையை என் பேரக் குழந்தைகளுடன் செலவழிக்க பங்களூரு திரும்பினேன்.
வேதாவும் அவள் தோழிகளும், காலையிலிருந்து இரவு வரை உல்லாசமாக விளையாட்டில் விடுமுறையை செலவழித்து மகிழ்ந்திருந்தார்கள். அப்போது, கந்தசாமி அண்ணன் விவரித்த அந்த, தோரணம் கட்டும் வித்தையை இந்த மூன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு சொல்லித்தரலாமா என்று யோசித்தேன்.
எதிர்பாராத அளவு வெற்றியும் கிட்டியது. விவரம்:
குழந்தைகளுக்கு ஒரு போட்டி வைத்தேன். அவர்கள் ஆங்கிலம் மூலம் கல்வி பெறும் குழந்தைகள். அவர்கள் நினைவிலிருந்து ஆங்கில வார்த்தைகளை எழுத வேண்டும். அதிகமான வார்த்தைகளை யாரால் எழுத முடியும்? இது தான் போட்டி. ஆறு குழந்தைகள் ஆவலுடன் பங்கேற்றார்கள். ஆனால் பத்தே நிமிடங்களில், யாருக்கும் சுமார் முப்பது வார்த்தைகள் கூடத் தேற்றவில்லை.
அடுத்த கட்டமாக, இவர்களை, வீட்டில் உள்ள பொருள்களை நினைவில் வரவழைத்து எழுதுமாறு சொன்ளனேன். சுமார் நாற்பது வார்த்தைகள் தேறியது. அடுத்த்து, பள்ளி தொடர்பான வார்த்தைகள். அடுத்து ஒரு அலுவலகம், ஒரு தோட்டம், ஒரு காய் கனி விற்பனைக்கூடம். ஒரு புத்தகக் கடை, ரயில் நிலையம், இப்படியாக தொடர்ந்தது. ஒரு மணி நேரத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்ட வார்த்தைகள் தயார். அன்று அத்துடன் போட்டி முடிந்தது.
பின்னர் ஒரு வாரம் கழித்து, மீண்டும் அதே போட்டி. இப்போது
போட்டி, அவர்கள் விரும்பியபடியே சுமார் இரண்டு மணி நேரத்திற்கு நீடித்தது. பெரும்பாடு பட்டு, குழந்தைகளை எழுதுவதை நிறுத்த வைத்து, யார் யார் எவ்வளவு வார்த்தைகள் எழுதினார்கள் என்று கணக்கிட்டால் எல்லோருக்கும் அவரவர் எண்ணிக்கை அறுநூரைத் தாண்டி இருந்தது.
மேலும் நேரம் கிடைத்தால், இன்னமும் அதிகமான வார்த்தைகளை எழுத இயலும் என்று சொல்லிய சிறுவர் சிறுமியர் கண்களில் தான் எத்தனை பிரகாசம்?
இப்போது, இந்த குழந்தைகள் தோரணம் கட்டப் பழகிவிட்டார்கள். இவர்கள், தங்கள் வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தைத் தவறாமல் பிடிப்பார்கள். அதில் சிறிதும் சந்தேகம் இல்லை.