"

அத்தியாயம் 13

நடராஜன்: இதுவும் சில உதாரணங்களாலே விளக்கிடலாம். இல்லையா?

கந்தசாமி:  நீங்க வழக்கமா சொல்றதை, நான் இப்போ வாசகர்களுக்கு சொல்றேன்.

பார்க்கிற கேட்கிற படிக்கிற விஷயங்களை (தினசரி சில நிமிடங்களாவது முகத்துலே இருக்கற கண்ணை மூடி வச்சிட்டு), மனசுலே ஒரு கண்ணு இருக்குல்லே, அதை திறந்து அதனாலே பாக்கப் பழகிக்கிடணும்.

நடராஜன்:  மிகவும் சரி. அது முதல் கட்டம்.  அடுத்த கட்டமா, நம்ம கண்ணுக்கு புலப்படாத உயிர்கள் மற்றும் பல கண்டுபிடிப்புகளையும் பற்றி பிறர் சொல்லியும் படித்தும் வருகிறோம். அவற்றையும் மனக்  கண்ணுனாலே பாக்கப் பழகிகிடனும்.

சிறு பிள்ளைகளுக்கு இந்த திறன் அதிகமா இருக்கு, வயசு ஏற ஏற, இந்த திறமை குறைஞ்சுக்கிடே வருது.

பொதுவா, கண்ணுக்குத் தெரியக் கூடிய உலகம் என்றும்.  தெரியாத உலகம் என்று இரண்டா பிரிச்சுப் பாக்கலாம்.

அண்டம்,  பல அண்டங்கள் அடங்கிய ஒரு அகில அண்டம் என்று கேட்டிருக்கிறோம். அதை எல்லாம் புலன்களாலே நாம உணரமுடியாது. ஆனா, மனக் கண்ணாலே  பார்க்கலாம்.

மேலே சொன்ன இரண்டு உலகங்களிலேயும் அசையும் உயிர்கள், அசையா உயிர்கள், அவைகள் வாழும் முறைகள், அவற்றின் இயக்கங்கள் போன்ற எல்லாமே ஒரு சில வரிவடிவங்களுக்குளே அடங்கிடும். அதை மனசாலே உணர்ந்திடறது முதல் கட்டம்.

கந்தசாமி:  உதாரணத்துக்கு வாங்க. நீங்க இதை எனக்கு விளக்குறப்போ,  நான் புரியாம முழிச்ச இடம் இது.

நடராஜன்: இந்த அண்டத்திலே உயிர் இல்லாதது எதுவுமில்லேன்னு அடிக்கடி சொல்லுவேன், இல்லையா?

கந்தசாமி:  நீங்க வாகனங்களுக்கும் உயிர், உணர்வுகள்,  சிந்தனைகள் என்று எல்லாமே இருப்பதா சொல்லுவீங்க. இது ரொம்ப ஓவரா தெரியுது.

நடராஜன்: வாகனத்தோட உயிரையும் உணர்வையும் விட்டுங்க. வாழும் முறையமட்டும் கவனிங்க. மனித வாழ்க்கையோட எப்படி ஒத்திருக்குன்னு கவனிங்க.

கந்தசாமி:  வாகனம்  எங்கேயோ ஒரு தொழிற்சாலையிலே பொறக்குது. மனுசங்கூட வாழுது. மஅனுசனுக்குச் ¢சாப்பாடு மாதிரி வண்டி ஓடரத்துக்கு பெட்ரோல் ஊத்துதாங்க,

தேய்மானம் வருது, அதனாலே  மனுசனுக்கும் வண்டிக்கு நோய் வருது. அதோட டக்டர்கிட்டே கொண்டு போயி அவுட் பேஷண்ட், இன்-பேஷண்ட் என்கிற முறையிலே வைத்தியம் பண்றோம்.  மாட்டுப் பொங்கல் அன்னிக்கி மாட்டுக்கு செய்யுர அத்தனையும் வாகனங்களுக்கும் செய்யறொம். நல்ல நாளுலே அதுக்கும் பூமாலை போட்டு, பொட்டு வச்சு பூசை போடறோம்.

நடராஜன்: ஒரு கட்டத்துலே, தேய்மானம் அதிகமாகி, ரிப்பேர் செஞ்சு பெரிய பிரயோசனமில்லேன்னு, காயலாங்கடையிலே போட்டுடறோம்.

கந்தசாமி: மனுசன் மற்ற உயிர்கள் மாதிரி வாகனங்கள் குட்டியோ முட்டையோ போட்டு வம்சத்தை வளக்கறதில்லே.

நடராஜன்: வம்ச விருத்தி செய்யுர முறையிலே உயிர்களுக்குள்ளே எத்தனை வேறுபாடுகள்? குட்டி போட்டு பால் கொடுக்குற வகை, முட்டையிட்டு அடை காத்துக் குஞ்சு பொரிக்கிறது. மீன்கள் ஏராளமான முட்டைகளை இட்டுட்டு காணாமப் போயிடரது. தன் சந்ததிகளை பார்கிற்தே இல்லை.

அதை மாத்திரம் ஒதுக்கி வச்சுட்டா, மத்தபடி மனிதருக்கும் வேற எந்த  உயிருக்கும்  வித்யாசமில்லை.

கந்தசாமி: பிறக்கிற ஒவ்வொரு உயிரும், பெத்தவங்க ஆதரவுலே வளர்வது. பிறகு தானே வாழப் பழகுறது. அடுத்ததா, இனப் பெருக்கம் செய்யறது. வாழ்ந்து வயசாகி மண்டையப் போடரது. இதை ஒரு வாழ்க்கைச் சுற்று (Life cycle) என்று சொல்லலாம்.

நடராஜன்: இதை ஒரு நிலையான தோரணமா தொங்கவிட்டுட்டா, தேவைப் பட்டபோது ஒரு தனி உயிரோட வாழ்க்கையைப் புரிஞ்சுக்கப் பயன் படுத்தலாம்.

இதே மாதிரி ஒவ்வொரு தொழில்களிலும் துறைகளிலும் சில வரி வடிவங்களைக் கண்டுபிடிக்கலாம். இல்லீங்களா? நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை   உணரும் உண்மை வாழ்க்கையின்,  பல பரிமாணங்களை கவனித்துப் பாத்தல் அதில் பல வரிவடிவங்களைக் காணலாம்.

நாம்  அறிந்த, பயன்படுத்தும் எந்த ஒரு வாணிக, அல்லது பொது  நிர்வாக  அமைப்போ, அல்லது தொழில் இயக்கமானாலும், இயந்திரமானாலும் அவைகள் எல்லாமே  குறிப்பிட்ட ஒரு சில வரிவடிவங்களின் கூட்டணிக்குள்ளே அடங்கும்.

ஒவ்வொரு வரிவடிவங்களுக்கும் மிகச் சிறிய வேறுபாடுகளே இருப்பதைக் காணலாம்.

இதை மனதினால் உணர முடிந்தால், தான் அறிந்த ஒரு துறை என்ற தடையில்லாமல் எல்லாத் துறைகளிலும் வெற்றி காணலாம். ஏனென்றால் எல்லாத் தொழிகள் துறைகளுக்கும்  பல வரிவடிவங்கள் பொதுவானது. அதைக் கண்டுபிடிச்சுட்டா, துறைகள் என்ற எல்லைகள்  எதுவும் இல்லாமல் எல்லாவற்றிலும் அறிவாளராக திகழலாம்.

கந்தசாமி:  சார், எனக்கு பொட்டுலே அடிச்சாப்புலே டக்குனு  மனசுலே ஏறி ஒக்காந்திடுச்சு. அதே போல வாசகர்களும் புரிஞ்சுக்கிட்டிருப்பாங்க. இதை எல்லாம் மனசிலே வாங்கி , வாழ்க்கையிலே பயன்படுத்தி பேரறிவாளரா மாறிடுவாங்கன்னு நம்பரோம்.

என்  உள்  உணர்வின் மூலம் அறிந்த சில சிந்திக்கும் முறைகளைப் பகிர்ந்து கொண்டோம்.  இது ஒரு தொடக்கம் மாத்திரமே.

 முடிவில்லை. மேற்கொண்டு வாசகர்கள் சிந்திக்கட்டும். புதிய சிந்தனைகளை உருவாக்கி அதனால் கிடைக்கும் அறிவு பெருகட்டும்.

இத்தோட  நம்ம வேலையை முடிச்சுக்கிடுவோம். நட்ராஜ் சார், என்ன சொல்றீங்க?

நடராஜன்:  அப்பட்டியே செஞ்சுடுவோம்.

License

Icon for the Public Domain license

This work (மிகவும் உயர்ந்த் அறிவை அடைவது எப்படி? by nat123; நடராஜன் நாக்ரெத்தினம்; and Natarajan Nagarethinam) is free of known copyright restrictions.

Share This Book