அத்தியாயம் 3.
நடராஜன்: கந்தசாமி, மக்கள் பேசிக்கிறதை சொன்னீங்க. இதை வச்சு புதிசா என்னதான் சொல்லப் போறீங்க?
கந்தசாமி: உயிர் வாழப் பொருள் வேணும். பொருள் வாங்க ஒரு உத்தியோகம் பாக்கணும் இல்லே ஒரு தொழில் செய்யணும். இரண்டிலும், வெவ்வேறு அளவுலே வெற்றி அடைகின்ற மக்களையும் பாக்கரோம். எதிர்பார்த்த வெற்றி கிடைக்காம வெற்றிய விடாம தொரத்திக்கிட்டு ஓடரதையும் பாக்கரோம். வெற்றியை வாழ்க்கையோட ஒரே குறிக்கோளா வச்சிட்டு, ஓடிக்களைச்சு அல்லாடரவங்களையும் பாக்கறோம்.
நடராஜன்: எதிர்பார்த்த வெற்றிகள் மிக மிகக் குறைவா அடைந்தவர்கள் இருக்காங்க., எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைத்தவர்களும் இருக்காங்க. இவங்களுக்குளே வித்தியாசம் என்ன?
கந்தசாமி: அறிவின் ஆழங்கள்.
நடராஜன்: என்ன என்னவோ புதிசா சொல்றீங்க? மொதல்லே செய்தி, அப்ப்புரம் அறிவு, பின்னே அறிவுத்தோரணம், இப்ப ஆழம். அறிவைப் பத்தியே உத்தேசமா தெரியுது. அதிலே ஆழங்கள், அது இதுன்னு சொல்றீங்க.
கந்தசாமி: ஐய்யா, ஞானிங்க நம்மளப் போல, வாழ்க்கை வாழ பொருள் தேட ஆரம்பிக்கறாங்க. ஒரு கட்டத்திலே, அதை விட்டுவிட்டு அறிவத் தேடி அடையராங்க. அவங்க அறிவுன்னா என்ன, அதை அடையுர வழிகளெல்லாம் சொல்லிட்டு போயிருக்காங்க. அதை யாரும் சரியா தெரிஞ்சுக்கல்லே.
வாழ்க்கைய எல்லா ஞானிகளுமே ஒரு பயணமா விவரிச்சிருக்காஙக. அதையே உவமானமா வச்சு சொல்றேன். சரியா இருக்கான்னு கேட்டப்புரம் சொல்லுங்க.
நடராஜன்: சொல்லுங்க.
கந்தசாமி: ஒரு பயணம் செய்யரத்துக்கு முன்னாடி நாம அதுக்கு தேவையான சில ஆயத்தங்கள் அல்லது பிரபரேஷன் பண்றோம் இல்லையா? அதுக்குத்தான் வாழ்க்கைப் பயணத்துக்கு ஆயத்தமாக் கல்விக்கூடம் போறோம். மொத்த அறிவையும் அங்கே எதிர்பாக்கக்கூடாது. அந்த ஆயத்தங்கள் பூரா பண்ணிட்டு ரயில்லே ஸ்டேஷனுக்குப் போயி டிக்கெட் எடுத்து சரியான ரயில் வரதை கண்டு பிடிக்கணும். அதுலே ஏறி பயணத்தைத் தொடங்களும்.
நடராஜன்: கல்விக்கூடம் ஆயத்தங்கள் செய்கிற இடம். கல்விக்கூடம் வீடு மாதிரி. குளிச்சிட்டு டிரஸ் போட்டுக்கிட்டு தேவையான பொருளை எல்லாம் பைகளிலே எடுத்துக் கொண்டு கல்விக்கூடங்கிர வீட்டைவிட்டு வாழ்க்கைப் பயணம் செய்ய ரயில்வே ஸ்டேஷன் என்கிற உலகத்துக்குளார போறோம். புரிஞ்சிடுத்து. அடுத்தாப்புலே என்னன்னு சொல்லுங்க.
கந்தசாமி: பிரச்சனை அங்கே தான் வருது. சில பேரு குளிக்கரதே. அதாவது மனச சுத்தம் பண்றதில்லே. தானும் நாறுவான், தான் இருக்கற இடத்தையும் நாறடிப்பான்.
நடராஜன்: மன சுத்ததை உடல் சுத்தம் போல சொல்ரீங்க. புரியுது.
கந்தசாமி: பல பேரு ஜட்டி போன்ற உள்ளாடை மாத்திரம் போட்டுக்கிட்டு பையைத் தூக்கிகிட்டு ஸ்டேஷன் வந்திடராங்க. இன்னமும் கொஞ்சம் ஆளுங்க, பேண்டு வேட்டி அணிஞ்சுக்கறான், மேலாடை அணியல்லே.
நடராஜன்: நினைத்தாலே தமாஷா இருக்கு. அப்புறம்?
கந்தசாமி: அதல்லாம் கூட பரவாயில்லே, வீட்டிலே இருந்து (கல்விக் கூடங்களிலிருந்து) பல மனிசங்க பயணத்துக்கு அவசியமாகக் கொண்டு போக வேண்டிய சாமான்-சட்டு எல்லாதையுமே கொண்டு போகாம அதிகமா வீடுலேயே விட்டுடறாங்க.
நடராஜன்: பள்ளியிலே படிச்சதை எதையும் வாழ்க்கைக்கு பயன்படுற எதையும் கொண்டுவரல்லே. அப்படித்தானே.
கந்தசாமி: ஆமாம். சில பேரு, ஸ்டேஷனுக்குப் போயி, கரெக்டா டிக்கட்டு எடுத்துட்டுத் தப்பான ரயிலிலே ஏறிட்டு வழியிலே இறக்கிவிடப்படுறாங்க. வேற சில பேரு, தப்பான டிக்கெட் எடுத்து சரியான ரயிலிலே ஏறி கொஞ்ச பயணமானப்புரம் பயணம் தடை பட்டுருது. இதல்லாம் சரியானாலும், சரியான பொருளை உடன் கொண்டு வராததாலே, பயணம் கசக்குது, பயணம் இனிமையாக இல்லே.
நடராஜன்: இப்ப வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் போன்றது. அதிலே கல்விக் கூடங்கள்ளிலெ ஆயத்தங்கள் செஞ்சுக்கிட்டு உலகத்துக்குள்ளே பயணம் தொடங்குறப்போ, அப்ப ஆரம்பிச்சு, பயணம் முழுவதும் மக்கள் தப்பு மேலே தப்பு பண்ணி, அவதிப்படரது புரியுது.
இப்ப வாழ்க்கை, கல்வி, அறிவு இதுக்கும் ரயில் பணத்திலே வருகிர தொல்லைக்கும் இணைப்பு எல்லாத்தையும் விளக்கமா தந்தீங்கன்னா அறிவு கல்வி வாழ்க்கை எல்லாத்தையும் சுத்தமா தெரிஞ்சுக்கலாம்.
கந்தசாமி: இப்ப அதை விளக்கமா சொல்றேன், இதையும் எழுதிக்கிடுங்க. கல்விக்கூடத்தை ஒரு வீட்டுக்கு உவமான சொல்றது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.
நாமெல்லா படிப்பை முடிச்சுட்டு ஊரை விட்டு வேலை தேடி முதல் தடவையா கிளம்பறோம். அப்போ, அப்பா அம்மா என்ன செய்வாங்க?
நடராஜன்: அப்பா ரயில் டிக்கெட் வாங்கி வச்சிருப்பாரு. அதைத் தருவாரு. செலவுக்கு காசு வச்சு ஒரு பர்ஸ் தருவாரு. அம்மா அந்த மணிபர்சுலே சாமி படம் ஒண்ணை வச்சுத் தரும்.
எல்லாமே சொல்லிட்டீங்க. ஆனா முக்கியமான சிலதை விட்டுட்டீங்க. அப்பா, வெளி உலகத்துலே முதல் முதலா காலை வைக்கிற பிள்ளைக்கு அவருக்குத் தெரிஞ்ச அறிவை எல்லாம் ஒரு பாடமா சொல்லித் தருவாரு. இதை செய்யலாம். இதை செய்யக்கூடாது. எப்படி எல்லாம் மத்தவன் ஏமாத்துவான். எதிலெதிலே எச்சரிக்கையா இருக்கணும்..
அம்மா என்ன செய்வாங்க. வெளியிலே வாங்கின உணவு பிள்ளைக்கு ஒத்துக்காதுன்னு பயந்து, பிள்ளைக்கு பிடிச்ச ருசியிலே அன்பா சோறு சமைச்சு கட்டித் தருவாங்க.
நடராஜன்: இதிலே என்ன புது செய்தி இருக்கு? கந்தசாமி அவசியம் இல்லாம எதையும் சொல்லமாட்டாரே.
கந்தசாமி: ஐய்யா, கல்வி அறிவோட மொத்த செய்தியும் இதிலே அடங்கிருக்கு.
நடராஜன்: சஸ்பென்ஸ் வைக்காம மேலே சொல்லுங்க.
கந்தசாமி: அம்மா அன்போட தந்த உணவை வச்சு எத்தனை நாளை ஓட்டலாம்? அதிகமாமான உணவை அம்மா கட்டிக் கொடுத்தாலும் அடுத்த நாளு கெட்டுப் போகாட்டியும் மூணா நாளைக்கி பயன் படாது. அதே மாதிரி அப்பா சொன்ன புத்திமதி அவரோட பயணத்திலே சம்பாரிச்சதிலெ கொஞ்சம். ஒவ்வொருவருரோட பயணமும் வித்தியாசமானது. அந்தப் பயணங்களால் சேர்த்த அறிவும் மற்றவர்களோட பயணத்திற்கு ஓரளவுக்கு மேலே பயன்படாது.
அதனாலே அப்பா தந்த அறிவும் அம்மா தந்த உணவும் மட்டுமே முழு வாழ்க்கைப் பயணத்துக்கும் பயன் தராது.
நமது வாழ்க்கைக்கு அப்பா அம்மா தந்தது போல கல்விக் கூடத்திலே தந்ததுலே ஏதானும் மிச்சம் மீதம் இருந்துச் சின்னா அதை (அறிவை?) மட்டும் வைத்து வாழ்க்கைப் பயணத்தைச் சுத்தமா ஓட்ட முடியாது.
ஔவையார் வள்ளுவர் ஆகிய அறிவாளிங்க சொல்றதை மனசிலேருந்து மறக்காம. புதிய அறிவுகளை அன்றாடம் சேர்த்தா பயணம் சுகம்மா இருக்கும்.
நடராஜன்: கல்விக் கூடத்திலே படிச்சவங்களுக்கு அறிவே வரல்லேன்னு கிராம மக்கள் சொல்றது போதாதுன்னு பெரிய பதவியிலே இரு-ந்த மனுசங்களும் சொல்லிக்காங்களே!
உதாரணமா, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒத்தரு, ஜஸ்டிஸ் லக்கோட்டின்னு பேரு, டைம்ஸ் ஆப் இண்டியா என்கிற ஆங்கில நாளேட்டிலே சுமார் நாலு வருசம் முந்தி அமர்க்களமா ஒரு கட்டுரை எழுதினாரு. கல்வித் திட்டத்துலே படிச்ச எல்லோருக்கும் அறிவு வரல்லே. ஆங்கிலேயர்கள், தங்கள் ஆட்சித் தேவைக்கு மட்டும் பயன்படர மாதிரியும், அறிவை அதிகரிக்காமலும் உள்ளதுமான ஒரு பாடத்திட்டத்தை நம்ம மேலே திணிச்சுட்டானோன்னு சந்தேகப்படராறு.
கந்தசாமி: அதை உண்மையின்னே வச்சிப்போம். அறுவது வருசமா, நம்ம கல்வியாளருங்க என்னத்தை புரட்டிப்புட்டாங்க? உண்மை என்னன்னா, வௌ¢ளைக்காரன் கொடுத்த ஆரம்பக் கல்வி மோசமில்லே. இன்னிக்கி படிக்க எழுத தெரிஞ்சவங்கதான் அதிகம் பேரு.
ஆரம்பக் கல்வித் திட்டம் எண்ணையும் எழுத்தையும் சுமரா எல்லோருக்கும் தருது. வேண்டிய மாற்றமில்லாம அதையே, எந்தவித மாற்றங்களும் செய்யாம எல்லா உயர் கல்விக்கும் ஒரு பொதுவான கல்வித் திட்டமுனு போட்டு கல்வித் திட்டத்தையே மொத்தமா கெடுத்திட்டாங்க.
ஏதோ கோவில்லே போயி சாமி கும்பிட்டுவிட்டு பிரசாதம் வாங்கி தின்னுவிட்டு கையக் கழுவிட்டு வருவோம். அப்ப திருப்தியா சாமிய கும்பிட்டாச்சு. இதுக்கு மேலே சாமி கவனிச்சுப்பாரு. இனிமே எல்லாமே நல்லா நடக்கும் என்று நம்பர மாதிரி கல்விக் கூடத்திலேருந்து வெளியே வாரோம்.
நடராஜன்: ஆரம்பக் கல்வியிலே எண்ணும் எழுத்தும் பிரிசில்லாம தெரிஞ்சுக்கரது ஒரே ஒரு குறிக்கோள். அது ஓரளவுக்கு வெற்றி அடஞ்சோம் என்று சொல்லலாம்.
கந்தசாமி: உண்மைத்தான் சார். தேபோல உயர் கல்வியிலேயும் கல்வியின் குறிக்கோளையும், (அறிவை) அடையும் வழிகளை அறிவதும் முதல் கட்டம். அந்த அறிவைக் கொண்டு கல்வி பெறும் மாணவர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி பெறண்ணும். அதற்கு அவசியமான தொழில் சார்ந்த அறிவை மாணவர்களை அடையச் செய்வதும் அவசியம். இதை எல்லாமே கண்டுபிடிக்கணும்.
நடராஜன்: மக்களுக்கு பொருள் தேவை இருக்கு. அதைவிட அதிகமா பல துறைகளிலே சேவை (குஞுணூதிடிஞிஞுண்) தேவையா இருக்கு. இதை எதாவது செய்ய அவசியமான துறைகளை அறிமுகப் படுத்தணும். அதிலே வெவ்வேறு அளவிலே அறிவை அடைய வைப்பதையும் குறிக்கோளாக இருக்கணும்.
கந்தசாமி: எல்லாதையும் விட முக்கியம் என்னான்னா, வாத்தியார் எப்பவும் கூட இருக்கமாட்டாரு இல்லியா? கல்விக் கூடத்தை விட்டப்புரம், தானே படிச்சு, கேட்டு, பாத்து, அனுபவ ரீதியாவும். விடாம வாழ்னாள் முழுவதும் அறிவை சேத்துக்கிற பழக்கத்தை, கல்விக் கூடத்திலேயே சேத்துடனும்.
நடராஜன்: அதுக்கு என்ன செய்ய வேணுமுன்னா, பாடம் சொல்லிக்குடுக்கிற வழக்கத்தை குறைச்சிட்டு, வாத்தியார் உதவியோட தானே கத்துக்கர முறையை என்ற முறையை அறிமுகப்படுத்தணும். அதைத் தீவிரமா அமுல்படுத்தணும்.
கந்தசாமி: சுத்தமா சொல்லிட்டீங்க. அதோட, செமஸ்டர்லே பிட்டடிச்சு மனப்பாடம் பண்ணி பேப்பருலே வாந்தியெடுக்கிற, இல்லை காப்பியடிச்சதுக்கு மார்க்குபோடர வழக்கத்தை விட்டு, தொடரும் தேர்வு முறையைக் (இணிணtடிணதணிதண் உதிச்டூதச்tடிணிண) கையாளனும். அப்பதான் மனசுலே வாங்கினதை தேக்க வச்சு, அறிவா மாத்தி படிக்கிறவங்களுக்கு பலன் கிடைக்கும்.
நடராஜன்: அறிவை எப்படி அடையதுன்னு பாக்கரத்துக்கு முன்னாலே எது அறிவு உள்ள செயல்? எது அறிவுள்ள செயல் இல்லை? என்று உதாரணமா, இரண்டையும் இரண்டு தோரணமா கட்டி பார்க்கலாமா?
கந்தசாமி: செஞ்சுடுவோம். மனுசன் அறிவில்லாம காரியம் பண்ணிட்டு அதை மத்தவன் மேல பழி போட்ருவான். கிரகம் சரியில்லேன்னு எங்கேயொ இருக்கிற கோள்கள் மேலே குத்தம் சொல்லிருவான். தனக்கு அறிவில்லை என்பதை மாத்திரம் ஒத்துக்க மாட்டான்.
நடராஜன்: சரியாச் சொன்னீங்க.
கந்தசாமி: பொதுவா, சில செய்திகளை கேட்ட உடனே, நம்மை அறியாமலே, “இவன் ஒரு அறிவு கெட்ட மனிதன் என்போம். உதாரணத்திற்கு சில.
ஸ்டாக் மார்க்கெட்லே பணம் விட்ட இந்திய சாப்ட்வேர் இஞ்சினியர் (அமெரிக்காவில்) தற்கொலை.
வீடு நிலம் வாகினத்துலே மோசடி செய்யப்பட்டார் ஒரு கல்லூரிப் பேராசிரியர்.
குதிரைப் பந்தயத்திலே, லாட்டரி சீட்டுகளிலும் விடாமல் பணம் கட்டி கோட்டை விட்டு சொத்தை அழித்தவர்கள் பெரும்பாலோர் தொழிலாளிகளும் மற்றும் சிறிய வியாபாரிகளும் ஆவர்.
(போலிச்) சாமியார்களினால் ஏமாறும் மக்கள் தமிழ் நாட்டில்தான் அதிகம்.
அதிக வட்டிக்கி ஆசைப்பட்டு மோசம் போன பலர் ராணுவ அதிகாரிகள், பொதுத்துறை மற்றும் அரசு அதிகாரிகள் தான்.
தனியார் நடத்திய சீட்டில் பணம் இழந்த பலர் மிகவும் ஏழ்மையில் உள்ளவர்களே.
வெளிநாட்டில் வேலை தேடும் முயற்சியில் பணம் இழந்தோர் பலர், முறையான கல்வி பெற்றவர்கள்.
போலித் தங்கம் வாங்கி ஏமாறுவோரில் பலர், வியாபாரிகள் .
நடுத்தர மக்கள்தான், தங்க நகைகளை பாலீஷில் செய்பவர்களிடம் ஏமாறுவோர்.
இலவசம் என்ற விளம்பரத்தால் தினம் தினம் இழப்பவர்கள் மத்திய வருமானமுள்ள மக்களே.
வீட்டிலோ அல்லது நாட்டிலோ ஏதோ ஒரு காரணமாக மற்றவருக்குப் பயந்து அடிமையாக வாழ்பவர்கள் (இந்தியாவைப் போன்ற) வளரும் நாடுகளில் அதிகம்.
வழக்கமாக சிலரைப் பற்றிக் கீழே கண்ட விதமான செய்திகள் வருவதுண்டு. அதைக் கேட்டவர்கள் தரும் உடனடி பதில், ““இவங்க அதிக அறிவுள்ளவங்க” இல்லையா?.
இவர்கள் சுலபமாக ஏமாறுவதில்லை.
இவர்களின் வாழ்வில் தோல்விகள் குறைவு.
இவர்கள் (செய்கின்ற தொழிலில்) புகழ் பெற்றவர்கள்
இவர்களுக்கு கோபம் வந்தத்தை யாரும் கண்டதில்லை.
இவர்கள் எதிலும் நிதானம் காட்டுவார்கள்.
இவர்களுக்கு விரோதிகளும் வெகு சிலரே.
அடுத்துள்ளோரை அரவணைத்துச் செல்வார்கள்.
தானமும் தருமமும் இவர்களின் இயல்பு.
இனிய முகம், இனிய சொல் – இவர்களின் இலக்கணம்,
இலக்கிய அறிவு:
மனிதனுக்கு தொழில் அறிவு வயிறு வாடச்வமல் காக்க அவசியம். பொது அறிவு மற்றவர் எவரும், நம்மை ஏமாற்றி, அடிமைப் படுத்தாமல் வாழ அவசியம்.
இவை இர்ரண்டும் எவ்வளவு அவசியமோ ஓரளவுக்கு இலக்கிய அறிவும் அவசியம். அந்த அறிவு கிடைக்க ஏதோ பெரிய பெரிய சிந்தனயாளர்கள் எழுதின இலக்கிய புத்தகம், கவிதைகள் எல்லாத்தையும் படிக்கணும்னு சொல்லாலே. அதுவும் ஒரு விதமான சிந்தனையிலே கிடைச்சிற அறிவு.
எல்லாரும் பணம் கிடைச்சாக்க, சொகம் எல்லாத்தையும் வாங்கிடலாமுன்னு தப்புக் கணக்கு போடராங்க. அதுக்கு பதிலா அறிவை வேட்டையாடிப் பிடிச்சா பொருளும் கிடைக்கும், மகிழ்ச்சியும் கிடைக்குன்னு உணரல்லே. பொருள் வேட்டையிலே திருப்தியே கிடைக்காது. எதிர்பார்ப்பு வளந்துக்கிட்டே இருக்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதப்போ, மனசு இறுகிடும். அதை இலேசாக்க இலக்கிய அறிவு பெரும் பயன்தரும்.
பொதுவா, வாழும் காலத்திலே நிரைய மக்களை சந்திக்கிறோம். பெரிய பட்டப் படிப்பு எல்லாம் படிச்சிருப்பாங்க. அதிலே பெரும்பாலொருக்கு, நகைச்சுவை உணர்வு இருக்காது. இருந்தா, அது கம்மியா இருக்கும்.
அப்படியே இருந்தாலும், அவங்களுக்கு (குஃஅககுகூஐஇஓ) என்ற வகையான காமடிதான் பிடிக்கும் – அடிக்கிறது, திட்டறது, வழுக்கி விழறது, பிறருடைய குறைய காமெடியாக் காட்டறது மாத்திரம் புரியும். கலைவாணர் வகை எதுவும் புரியாது. வார்த்தை விளையாட்டு (கக்N) சிலேடை, நையாண்டி (குச்tடிணூஞு) இது எதுவும் புரியாதது. அதுகூடப் பரவாயில்லே. அதைத் தவறா புரிஞ்சுக்கிட்டு சண்டைக்கு வருவாங்க. இதன் காரணம், மொழிக் கல்வி பெற்றிருந்தாலும், செய்தியிலே அறிவு ஒளிஞ்சிருக்கிற மாதிரி, சில சமயம் நகைச்சுவையும் ஒளிஞ்சிருக்கு. சிந்தனையாளர்களின் எழுத்துகளில் நாம் வழக்கமா சந்திக்காத மனிதர்களும், அறியாத உணர்வுகள் பிரதிபலிக்கும். அதை எல்லாம் பிரித்து தோரணமா தொங்கவிடாததுதான் காரணம்.
மொழி அறிவை அடைந்தவர்கள் பலவித புத்தகங்களை படிக்கணும். அப்போ, அதிலே நகைச்சுவை ஏதானும் இருக்கான்னு தேடணும். நான் சொல்ற இலக்கிய அறிவு அப்போ தானே வளரும்.