கந்தசாமி அண்ணன் என்கிற ஒரு நண்பர், ஒரு கிராமத்திலே 10 கிளாஸ் வரை படிச்சு, வளந்து, மிலிட்டிரிலே சேர்ந்து, இந்தியாவின் பல பாகங்களிலே வேலை செஞ்சிருக்காரு,
ரிடையரானப்புரம், சொந்த ஊருக்கே திரும்பி வந்து அங்கேயே செட்டில் ஆயிட்டாரு. அவரோட அனுப அறிவு, சமூகநோக்கம், பரந்த மனப்பான்மை, கடினமான எந்த செய்தியையும் எளிமையா விளக்கும் திறமை, வசதி வந்தும் கூட ஒரு எளிமையான வாழ்க்கையை நடத்துகிற மனம், ஏழைகள் மீது இரக்கம் எல்லாமே, என்னை மிகவும் கவர்ந்தது.
கந்தசாமி அண்ணனை ஒரு நாள் பாத்து பேசாட்ட தூக்கம் கூட வராதுன்னா பாருங்களேன்.
அவர், என்னோட ஏழைகள் (ஏழைகள் வறுமையைத் தொலைப்பது எப்படின்னு ) என்கிற புத்தகம் சிறப்பா அமைய ஒரே ஒரு காரணம், கந்தசாமி அண்ணனின் முழு ஈடுபாடு.
அவரோட பேரை ஒரு இணை எழுத்தாளரா, போட்டுக்கறேன் என்று சொன்னப்போ, தீர்மானமாக, தீவிரமாக மறுத்துவிட்டார். கந்தசாமி அண்ணனுக்கு, இந்த புத்தகத்தை அர்ப்பணிக்கிறேன்,
நடராஜன் நாகரெத்தினம்