அத்தியாயம் 4
பட்டதாரி: இதுவரை மூன்று அத்தியாயங்களில் படிச்ச எதுவுமே, யாரும் சொல்லல்லே. இதை எல்லாம் பாடமா சொல்லிக் கொடுக்கல்லே! சொல்லிக் கொடுத்திருந்தா வாழ்க்கைய்யிலே ஏமாறாம இருந்திருப்போம்.
கந்தசாமி அண்ணன்: பள்ளியிலே பாடமா எதைத் தான் சொல்லிக் கொடுப்பாங்க? இதை எல்லாமே பாடமா படிச்சுத் தெரிஞ்சிக்க ஒரு நூறு வருஷம் போதாது சாமி!
பட்டதாரி: அப்ப எதுக்குத்தான் கல்விக்கூடத்துக்குப் போறோம்? பின்ன அறிவைத் தராத பள்ளிகளுக்கு எதுக்கு எங்களை அனுப்பினீங்க?
கந்தசாமி அண்ணன்: அப்படி வாங்க. இதைத்தான் இப்போ பாக்கப் போறோம். ஒரு பட்டம் படிக்காத ஆளுதானே. இவனுக்கு அறிவைப்பத்தி பேச என்ன யோக்கியதை இருக்குன்னு கேப்பீங்கள்ளே?
அதுக்காக, நட்ராஜ் சாரும் நானும். பொருமையா ஒரு சுத்தமான வேலை செஞ்சோம். அறிவு மற்றும் கல்வியைப் பற்றி நம்மோட கருத்தை எதுவும் சொல்ல வேண்டாம்.
நம் மூதாதையர்கள் சிலர், மற்றும் உலகம் புகழும் மாபெரும் அறிஞர்கள் இருந்தாங்க இல்லையா? வள்ளுவரு, அவ்வையார், ஆயிரம் ஆண்டுகள் முன் வாழ்ந்த சீன தேசத்துச் சிந்தனையாளர்கள் போன்றவங்க. அவங்க அறிவை மற்றும் கல்வியைப் பற்றி என்ன என்ன சொன்னாங்க என்று பார்க்கலாம். போதாதற்கு சில பழமொழிகளையும் சேர்த்துக்கலாம்.
அறிவை அடைய, படிச்சாலே போதும் என்று ஒரு காலத்தில் எல்லோரும் நம்பினோம். நானும்தான். ஆனா, இன்னிக்கி படிப்பது (கேட்பது, பார்த்து, உணர்ந்து, பரிசோதனைகள் செய்து அறிந்து கொள்வது என்பது) போன்ற பல வழிகளாக நாம் அடைவது அறிவில்லை. ஆனா, அறிவை அடைய உதவும் வெறும் செய்திகளே.
செய்தியே அறிவாகாது. ஆனால் செய்திகள் அறிவை அடைவதற்கு இன்றியமையாத்து என்ற உண்மைகளைத் தெரிந்து கொள்வோம்.
அப்ப அறிவை எப்படித்தான் அடைவது?
கொஞ்சம் பொருங்க. அதையும், (நமக்கு கதை இல்லாம எதையும் விளக்கமா சொல்லவராது) கதைகள் மூலமா தௌ¢ளத் தெளிவா நான் சொல்ல. நட்ராஜ் சாரு எழுதிடுவாறு.