தற்போதய கல்வித்திட்டம் ஆங்கிலேயரால், மெக்காலே என்பவரால் அளிக்கப்பட்டது. இதற்கு ஒரு பெயர் உண்டு. ஆங்க்கிலத்தில், இதை ROTE Learning என்பார்கள்.
இந்தவகைக் கல்வி ஆரம்பக் கல்விக்கு, போதுமானது. இங்கே சிந்தனை என்பதற்கு வேலை இல்லை. பாத்ததை, படித்ததை அப்படியே மனசுலே பதிச்சுடணும். இதை நாம பட்டியடிக்கிறது, மன்ப்பாடம் பண்றது, என்றெல்லாம் சொல்லுவோம்.
ஒரு பாட்டா, ராகத்தோட, தினசரி திருப்பித் திருப்பி மனப்பாடம் செஞ்சா, பல விஷயங்களை மனதில் ஏத்திடலாம். வேதப் பாடசாலைகளில் சிறுவர்களுக்கு டன் டன்னாக மனசுலே பதிய வக்கிறார்கள்.
வயசு ஏறும் போது, சிந்தனையும் வேகமா வளருது. அதுனாலே நன்மை உண்டு என்றாலும், அறிவை அடைய அதுவே ஒரு தடை ஏற்படுத்துது. சாதாரண்மா, படிச்தை நினைவில் நிறுத்துவது கடினமாகுது.
அதனாலே, மெக்காலே கொடுத்த கல்வித்திட்டத்தை ஆரம்பக்கல்வியிலேயே கழட்டி விட்டிடணும்.
இப்ப உள்ள பாடத்திட்டம் உய்ர்கல்வியிலேயும் ஆரம்பக்கல்வியில் கையாண்ட அதே வழியைக் கடைபிடிக்கிறோம்.
“றோட் ” முறையான கல்வியை ஆரம்ப்க்கல்வியோடு நிறுத்திட்டு, அடுத்த கட்டத்திலேருந்து மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் ஒரு வழிகாட்டியாகணும். ஆசிரியர்கள் வழிகாட்டிகளாக மாறி, மாணவர்கள், தானாகவே படித்து, பரிசோதனை செய்து, சிந்தனைகள் மூலமாக அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கற்றது எல்லாமே காற்றிலே பறந்திடுத்து
பத்து, பன்னிரண்டு, பதினைந்து அல்லது அதற்கு மேலும் அதிக வருடங்களை பள்ளியில் செல்விடுகிறோம். விஞ்ஞானம் மொழிக்கல்வி, இலக்கணம் இலக்கியம் சமூக இயல் என்று பல புத்தகங்கள் படிக்கிறோம், அம் பல ஆசிரியர்கள், பேராசிரியர்கள் நமக்கு அந்த அறிவை ந்ம் தலையில் ஏற்ற முயற்சித்திருக்கிறார்கள். மனதைத் தொட்டுச் செல்லுங்கள். அவற்றில் நினைவின் நின்று நமக்கு பயனாவது எது?
அப்படியானால், பயனாகும் வகையான கல்வித்திட்டம் எப்படி இருக்கனும்?
கற்பதும் & சிந்திப்பதும் என்ற இரண்டு குறிக்கோள்களை முன் வைத்து கல்வித்திட்டங்களில் மாறுதல்களைச் செய்யவேண்டும்.
எனது அடுத்த புத்தகத்தில், கல்வி = கற்பது + சிந்திப்பது, விவரமாகப் படிக்கலாம்.
இவற்றை சித்தரிக்கும் சில படங்க்க்ளைக் கீழே வருகின்றன:
இதைப் படிக்கும் வாசகர்கள் (ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட) தாங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
பல கதைகளுடன் சில முக்கியமான சிந்தனை வகைகள் ஆங்க்கிலப் புத்தகமான, Knowledge. Go, get it, என்னும் இலவசப் புத்தகத்தில் படிக்கலாம்.