கந்தசாமி: வாசகர்கள், இந்த புத்தகத்தைப் படிச்சதோட பயனை முழுவதா அடையுணுமின்னா, ஏதோ ஒரு வாரப் பத்திரிக்கையை அல்லது செய்தித் தாளைப் புரட்டுவதைப் போலப் படிக்கக் கூடாது.
நடராஜன்: வாரப் பத்திரிக்கை அல்லது செய்தித்தாள் படிக்கிறது அவசியம் இல்லை என்று சொல்ரீங்ளா?
கந்தசாமி: அப்படித் தப்பா நினைக்க வேண்டாம். அறிவு இல்லாத இடம் அண்டத்திலே எங்கேயும் இல்லை. வாழ்க்கையிலே நம்மச் சுத்தி நடக்கிறதை அறிவது ரொம்ப அவசியம். அதைத் தெரிஞ்சுக்காம நலமா வாழமுடியாது.
நடராஜன்: நாம செய்தித் தாளிலே படிக்கிற செய்தி மற்றும் பத்திரிக்கைகளிலே படிக்கிற கதைகள் எல்லாமே குறிப்பிட்ட ஒரு சில நாட்களுக்குத்தான் பயன்படும். அதனாலே, இவை எல்லாமே தன்னிச்சையாக மனதிலே இருந்து அல்லது நினைவுகளே இருந்து கலைஞ்சு இல்லேன்னா கரைஞ்சு போயிடுமில்லையா?
கந்தசாமி: அப்படிப் படிகிறபோது, செய்தியிலே அடங்கிய அறிவுவைப் பிரிச்சு சேமிச்சு வச்சிகிட்டப்புரம், மற்றது மறந்து போனாத் தப்பில்லே. ஆனா அதுக்கு முறையான வழி வகை ஏதும் நம்ம முறையா தெரிஞ்சுக்கல்லே.
நடராஜன்: நமக்கு, ஏன் படிக்கிற, கேக்கிற பல செய்திகள் மறந்து போகுது? கல்வியோட பயன் மக்களுக்கு ஏன் முழுவதா கிடைக்கல்லேன்னு கொஞ்சம் விளக்கமா சொல்ரீங்களா?
கந்தசாமி: அறிவை அடைய மூணு விஷயம் வேணும்.
மொதல்லே நினைவாற்றல். நம்ம எல்லாரோட மனசுக்குள்ளாரேயும் ஒரு சேமிப்பு அறை, இல்லேனா ஒரு சேமிப்புப் பெட்டி இருக்கறதா நெனைச்சுப்போம். இயற்கையோ, இல்லை, இறைவனோ (சரியாகத் தெரியவில்லை) பொறக்கறப்போ எல்லாருக்கும் சின்னதாத்தான் சேமிக்கிற பெட்டியத் தந்திருக்கு. அதுலே நன்மையும் இருக்கு. தீமையும் இருக்கு. சரியா பயன் படுத்தினா வாழ்க்கை வளமாவும் மனசு மகிழ்ச்சியாவும் இருக்கும். இல்லையினா தொல்லைதான்.
எல்லா நினைவுகளும் அங்கே போய் சேருதா? சின்ன வயசிலே துக்கமான செய்திகள் அதிகம் வரும். அது போயி சேமிப்புப் பெட்டிலே அடைஞ்சுட்டா சீக்கிரமே நிரம்பி வழிய ஆரம்பிச்சுடும். புதிசா கிடைக்கிற நல்ல செய்தி சேர இடமில்லாம ஆயிடும். அதுமேலேதான் நம்ம சிந்தனை ஓடிக்கிட்டுருக்கும்.
நாம வளர வளர, நினைவாற்றலையும் சிறிய பயிற்சிகள் செஞ்சு வளத்துக்கலாம். பள்ளிக்கூடம் போறோம். அங்கே படிச்சதை சேர்க்க, மொதமொதல்லே, ஒரு நியாயமான காரணத்துக்குக்காக மனசுலே சேமிப்பிடம் தேவைப்படுது.
அதுக்கப்புரம் வேலைக்கி போயி, குடித்தனம் பண்ற காலம் எல்லாம் கடந்து, சாவர வரைக்கும் செய்தி மற்றும் சேர்த்த அறிவைச் சேர்க்க இடம் தேவைப் படுது. சேமிப்பு பெட்டிய பெரிசு பண்ணிக்கிட்டே போகணும். தேவையில்லாத எல்லாத்தையும் மனசிலேருந்து வெளியேற்ற பழகனும். எல்லாமா சேர்த்து, அவசியமான அறிவு மனசுலேருந்து காணப் போகாம செய்யரத்துக்கு நினைவாற்றல் என்கிறோம்.
நடராஜன்: சரி, அடுத்த ரெண்டு என்ன?
கந்தசாமி: நமக்கு, படிச்சு, கேட்டு, பார்க்கிறதுலே நெரய செய்தியா நமக்கு வருது. அதைத்தான், இந்த சேமிப்புப் பெட்டிலே அடைச்சு வச்சு அதைத் தான் அறிவுன்னு பயன் படுத்துறோம். நாம் பெரும்பாலும் அடைவது செய்திகள்தான். அறிவல்ல. செய்திகள் அறிவை அடையரத்துக்கு ஒரு மூலப்பொருள்.
நடராஜன்: செய்திகள் அரிசி, காய்கறி மாதிரி இல்லையா? அதை வச்சு சாப்பாடு செய்யலாம். அப்படித்தானே?
கந்தசாமி: சுத்தமா சொல்லிட்டீங்க. அதிலே கூட மிகக் குறைவான எண்ணிக்கையுள்ள பொருளைச் சமைக்காம சாப்பிடலாம். பழ வகைகளை ஒரு உதாரணமா சொல்லிடலாம். செய்தியும் அப்படித்தான். சில செய்திகளே அறிவாகும். காய்கறிகளை சமைச்சு உணவா மாத்தரோம் இல்லியா, அப்படியே செய்தியையும் சிந்தனை செய்தால், அது அறிவா மாறிடும். இது இரண்டாவது.
நடராஜன்: அது என்னமா, அறிவையும் உணைவையும் சுலபமா இணைச்சுட்டீங்க?
கந்தசாமி: இது ஒரு பெரிய விஷயம் இல்லீங்க. இயற்கையிலே பல நிகழ்வுகள்ளோட வரிவடிவங்களிலே ஒத்துமை இருக்கு. இதை ஆங்கிலத்துலே (Patterns) என்கிறோம். ஒவ்வொரு நிகழ்வுகளை கொஞ்சம் கவனமா பாத்தா, இதோட நாம ஏற்கனவே அறிஞ்சதோட ஒத்துப் பார்த்து கவனிச்சாலே போதும். டப்புனு பிடிச்சிடலாம்.
நடராஜன்: அப்ப அறிவு தயாரா என்றுமே எங்குமே கிடைக்காதா?
கந்தசாமி: ஏன் இல்லை? திருக்குரள், ஆத்திச்சூடி என்று ஆரம்பிச்சு ஆயிரக்கணக்கான நூல்கள் இருக்கு. சிந்தனையில் சிறந்த, கருணை மிகுந்த மகான்கள் தயாரிச்சு வைத்த அறிவுக் குவியல்கள்.
புரியாதவனுக்கும் புரியவைக்க அறிவு புதைக்கப்பட்ட கதைகள் ஆயிரமாயிரம். அதுலே எல்லாமே அறிவு, ரெடிமேட் சட்டை பேண்ட்போல, தயாரா, விதவிதமா தயாரா இருக்கு.
ஆனா, அதைக் கூட படிச்சுத் தெரிஞ்சுகிட்டு பயனடைய அறிவு தேவைப்படுது. நம்ம மக்கள் ஒரு தமாசான ஆளுங்க. இதை எதையும் திரும்பிக்கூட பாக்க மாட்டாங்க.
நடராஜன்: குற்றவியல் நிபுணர்கள், மருத்துவர்கள், பொரியியல் நிபுணர்கள் கூட தங்கள் வேலையைச் செய்ய இந்த அணுகு முறைத்தான் பின்பற்றுகிறார்கள் இல்லையா? சாதாரண மற்ற நான்கு முறைச் சிந்தனைகளோடு கலக்காமல், தனியா பேரளிவானவரா எப்படி மாறுவது என்று தனியா பாக்கப் போறோம் என்று சொன்னீங்க. மூணாவது என்ன?
கந்தசாமி: செய்தியைச் சிந்திச்சு அறிவா மாத்தினதை தோரணமா தொங்கப் போடணும். இது மூணாவது.
நடராஜன்: இது என்ன புதிசா சாப்பாடுலேந்து, அரசியலுக்கு தாவிட்டீங்க?
கந்தசாமி: நட்ராஜ்சார். கொஞ்சம் கவனிங்க. தோரணம் அரசியல் இரண்டையும் இணைசீங்க சரி. வேறே எங்கெல்லாம் தோரணம் கட்டறோம்? கோவில் திருவிழாக்களிலே தோரணம் கட்டுறோம். துணியினால சின்னச் சின்ன கட்சிக் கொடி பண்ணித் தோரணம் பண்றோம். வீட்டிலே எப்போ என்ன விசேஷம் கொண்டாடினாலும் மாவிலையிலலையிலே, பூவுலே தோரணம் செஞ்சு கட்டறோம்.
எல்லா வீட்டிலேயும் துணியத் தோச்சு தோரணமா கட்றோம். காஞ்ச துணியக் கூட பல வீட்டுக்குளே தோரணமாத் தொங்கவிடராங்க. நீங்க மனசுலே கட்டின தோரணம் சரியா அமையல்லே.
தோரணத்திலே செய்தியையோ, அறிவையோ தொங்கவிடரத்தே, அதிலே ஒரு ஒழுங்கு அமையணும்.
தோரணம் என்கிற தோரணத்திலே அரசியல் தோரணம் மட்டும்தான் இருக்கு. மற்ற தோரணவகைகள் அரசியல் தோரணத்தோட, வரிசைக் கிரமமா, உக்காரல்லே.
அறிவினால பயன் படணும்னா, தோரணம் கட்றதும், தோரணத்திலே ஒரு ஒழுங்கை அனுசரித்து எல்லாச் செய்திகளையும், அறிவையும் தொங்கவிடரதும் அவசியம். அறிவை அடைஞ்சு அதனால கற்பவர்களுக்கு முழுப் பயன் கிடைக்க நான் அவசியமாக நினைக்கும் மூணாவது விஷயம். இதை எல்லாம், போகப் போக விளக்கமா பாக்கலாம்.
வாசகர்களுக்கு ஒரு விண்ணப்பம்.
இது பல வருடங்களாக ஆராய்ந்து எழுதிய புத்தகம். இந்த புத்தகத்திலிருந்து அரை நாளில் படித்து முடித்துப் பலன் பெற முடியாது. படிச்சது எல்லாத்தையும் மனசோட சேமிப்புப் பெட்டியிலே அடச்சுடாதீங்க. இங்கே சொன்னதெல்லாம் வெறும் செய்திதான். அறிவா மாத்தி உங்க மனசுலே தோரணமா கட்டிட்டா, சரியான நேரத்திலே பயன் படுத்தி வளமா வாழுவோம் என்று தீர்மானம் செஞ்சுக்கங்க.