சீன அறிஞர்கள் சொன்னது.
இப்போ பாக்கி சொல்ல வேண்டியது ஒண்ணே ஒண்ணு இருக்கு.
அதுதான், சீன அறிஞர்கள் சொன்னது.
(1) கற்றவன் சிந்திக்கல்லேனா, கற்றது (செஞ்ச செலவு, நேரம் எல்லாமே) வீண்.
இதுலே ஒண்ணும் இப்போ சந்தேகம் வரக்கூடாது. அடுத்தாப்புலே ஒரு குண்டு வச்சுட்டான், சீன ஞானி.
(2) கல்லாதவன் சிந்திச்சா, அவனுக்கும் அவனச் சேர்ந்தவனுக்கும் ஆபத்து.
இது என்னமா நிகழும் ? சிந்திக்கணும்.
கற்றால், அறிவு தயார் செய்ய கருவிகள் நிரைய கிடைக்கும். செய்திகளும் அதிகமா கிடைக்கும்.
கல்லாதவன் (முறையா கல்வி பெறாறாதவர்) அறிவு இல்லாதவங்கன்னு சொல்ல முடியாயாது.
ஒவ்வொருவருக்கும் இயற்கையாக சிந்திக்கும் திறன் வெவ்வேறு அளவுகளிலே இருக்கு. அதிக சிந்திக்கும் திறன் உள்ளவர் கல்வி பெற்றால் அதிக பயன் அடைவார். இயற்கையில் சிந்திக்கும் திறனில் குறைந்தவர், எத்தனை பட்டங்கள் பெற்றாலும் எந்த ஒரு புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் பயின்றாலும் பயன் என்னவோ, மிகக் குறைவாக இருக்கும்.
மனித வாழ்க்கையிலே வலி, தோல்வி இல்லாமல் நிறைவா, அமைதியா வாழ அறிவு வேணும். கல்லாதவன் அறிவைத் தேடல்லே. அப்ப என்னவாகும்?
மனசுலே இருக்கிற அறிவுப் பெட்டி காலியா இருக்கும். அந்தக் காலிப் பெட்டி காலியாவே இருந்தாக் கூடப் பரவாயில்லே. அங்கே தவறான பல செய்திகள் நம்பிக்கைகளா மாறி அடைஞ்சிடும்.
தவறான செய்திகள் மீது (இருக்கிற சின்ன) சிந்தனைகளை ஓட்டுருதினாலே அதை தவறான அறிவா மாறிடும். அதுவே அறிவுப் பெட்டியிலே கம்பீரமா உக்காந்துக்கும். அதைப் பயன் படுத்தும்போது, பெட்டி முதலாலாளியை தவறான திசைகளில் கொண்டு போயிடும்.
சமுதாயத்திலே நாம் அன்றாடம் காணும் சிறிய குற்றங்கள் முதல் தீவிரவாதம் வரையுள்ள பல சிக்கல்களில் ஈடுபடுபவர்கள் செயல் படுவதன் அடிப்படை இதுதான்.
அது அவனுக்கும் துன்பம் வரும், அவனாலே மத்தவனுக்கும் துன்பம் வரும்.
செய்தித் தாளிலே, டெலிவிஷன் செய்தியிலே வர பரப்ரப்பான பல செய்திக்கு அடிப்படை, தப்பான வழியிலே போயி கவுந்து போன சின்ன மனுசங்களைப் பற்றியது.
இதில்லாமல் மாணவர்களுக்கு படிப்பு ஏன் கசக்குது? கசக்காம செய்ய என்ன என்ன செய்யணும். கல்வியிலே துறையைச் சார்ந்த அறிவைவிட வாழ்க்கையில் பிரகாசிக்க பல வழிகள் இருக்கு. எல்லாத்தையும் ஒரே புத்தகத்துலே படிச்சா, மண்டை காஞ்சுடும்.
அடுத்தா, நட்ராஜ் சார், யுனிக்ஸ் என்கிற ஆபரேட்டிங் சிஸ்டம் வேலை செய்யுரதைப் பத்தி அழகா எளிமயா, கம்ப்யூட்டர் சயின்ஸ் எதுவுமே தெரியாதன் கூட சுலபமா புரிஞ்சுக்கர மாதிரி சொல்லிக் கொடுத்தாரு.
அதுலே நட்ராஜ் சார் அருமையா ஒர் தோரணம் கட்டராரு. அதைப் பத்தி நான் அடுத்த புத்தகம் எழுதப் போறேன். அதையும் நான் சொல்லுவேன். நட்ராஜ் சாரு எழுதிடுதிவாரு.
அதைப் படிச்சா மாணவர்கள் மட்டுமில்ல கம்ப்யூட்டர் துறையிலே வேலை செய்யரவங்க கூட பயன் படுவாங்க.
நான் எழுதின ஏழைகள் தன் வறுமைய தொலைக்கிறது எப்படின்னு எழுதின புத்தகத்தை ஏழையா இல்லாதவங்க கூட படிச்சு பயன் பெறலாம்.
இந்த புத்தகத்தை எழுத, பொருமையா எழுதி உதவி செஞ்ச நடராஜன் சாருக்கு கந்தசாமி சொல்லுவது நன்றி, நன்றி, நன்றி.
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். இதைப் படிச்சவங்க அறிவாளியா மாறி, மற்றவங்களையும் மாற்றி, வளாமா வாழ்ந்து, ஒரு இனிமையான சமுதாயம் உருவாக உறுதுணை செய்யணுமின்னு கேட்டுக் கொண்டு, விடை பெறுகிறேன். வணக்கம்
(மிலிட்டரி) கந்தசாமி
அப்படியே, நானும் வாசகர்களை வேண்டி விடை பெறுகிறேன். வணக்கம்
நடராஜன்,