அத்தியாயம் 14
கல்வித் திட்டம் தீட்டும் கல்வித் நிபுணர்களின் கவனத்திற்கு
சுதந்திரம் கிடைச்சப்புரம் அறுவது வருசத்துக்கும் மேலே, தவறான திட்டம் போட்டு கோடிக்கணக்கான மக்களோட வாழ்க்கையையும் வரிப் பணத்தையும் ஒரு மாதிரியா நாசம் பண்ணிடீங்க.
ஆஸ்பயரிங் மைண்ட்ஸ் என்ற தன்னார்வு நிறுவனம் தனது ஆய்வில், கல்வித்திட்டங்கள் அறிய வேண்டிய பல உண்மைகளை வெளியிட்டிருக்கிறது. இண்டெர்னெட்லே பாத்து படிச்சு எல்லோரும் முழிச்சுக்கணும்.
(1) கல்விக் கூடங்களோட குறிக்கோள் என்ன?
(2)அதை எந்த அளவு குறிக்கோளை அடஞ்சிருக்குன்னு அப்பப்ப அளந்து கண்டுபிடிக்கறது எப்படி? வழி தவறினா, கண்டுபிடிச்சு, சரி பண்ணனுமில்லே?
(3) கல்விக்கூடத்திலிருந்து வெளியிலே போறப்போ ஒரு மாணவன் வாழ்க்கையிலே மனோரீதியாவும் பொருளாதார ரீதியாவும் என்ன என்ன மாற்றங்கள் வரணும்?
அதை எப்படி அளந்து கண்டுபிடிக்கறது?
படிச்சவன் படிக்காதவன் எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு.
அறிவு எல்லோருக்கும் தேவை. அறிவைத் தேடரது வாழ்நாள் முழுவதும் செய்யவேண்டிய பயணம். அதைத் தயார் செய்யறது கல்விக் கூடங்கள்.
*கல்விக்கூடங்கள், அந்த நீண்ட பயணத்துக்கு ஒரு முறையான ஆயத்தம். எண்ணும் எழுத்தும் எல்லாருக்கும் வேணும். அறிவை அடைய உதவாத கண்ணை ஞானிகள் அது கண்ணு இல்லே, முகத்திலே புண்ணுதான் என்று சொல்லிட்டாங்க.
எல்லோரும் அறிந்தது, ஐந்து புலன்களால் கிடைக்கும் செய்தியில் உள்ள திறந்த அறிவு.
அதிலிருந்து கிடைக்கும் அறிவு மிக மிகக் குறைவானது, மாணவரும் கல்வித் திட்டங்களும் தரும் கல்வி அப்படிப்பட்ட ஒண்ணு. அறிவை அடைய பலவகையான சிந்தனை தேவை. அதிலே எனக்குத் தெரிஞ்ச கொஞ்சம் இதுவரை எழுதிருக்கேன். எல்லாவித சிந்தனைகளையும் அறிந்து, அதனாலே மாணவர்கள் பயன்பட பாடுபட வேண்டும். பேரறிவாளராகாட்டாலும், உடனே அறிவாளராயிடலாம்.
உண்மையிலே, கல்விக் கூடங்களிலே மாணவர்கள் அறிவை அடயர ஒரு குறிக்கோளோட செயல் படல்லே. ஏதோ கோவில் நடத்தர மாதிரி கல்விக்கூடங்கள் செயல்படுது.
கல்விக் கூடத்துலே சேர்ந்த யாரும் வேலை வெட்டியில்லாமலோ இல்லை வெட்டிவேலை செஞ்சிக் கிட்டோ இருக்கக் கூடாது.
எல்லா தொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதில் பணி செய்யுர ஒவ்வொருவருடைய ஆற்றலையும் அதுனால வாழ்வையும் மேம்படுத்துர மாதிரி, கல்வித் திட்டம் அமையணும்.
கல்வியை விநியோகிக்கும் கல்விக் கூடங்களின் கவனத்திற்கு;
இன்று கல்வித்திட்டத்தினால பயன் பெறுவது, கல்வித்திட்டத்திலே வேலை செய்யறவங்க, ஷஹ கம்பெனிலேருந்து, ரெடிமேட் யூனிபாரம், புத்தகம் விக்கறவங்க, பஸ் சர்வீஸ் நடத்தறவங்க, டியூஷன் கோச்சிங் கிளாஸ் என்று எத்தனையோ பேர்.
இவங்கல்லாம் கல்வித் திட்டத்தினால அமோகமா வாழராங்க. நல்லாவே வாழட்டும்.
கல்வித் திட்டத்திலே சொல்லித்தரது ஏதும் பிரயோசனம் இல்லேன்னு, டியூஷன், கோச்சிங் கிளாஸ் அது இதுன்னு சொல்லிக்கிட்டு ஒரு பெரிய கூட்டம் ஒண்ணு சந்துலே சிந்து பாடிக்கிட்டுருக்கு. அவங்களும் ரொம்ப நல்லாவே வாழராங்க. அப்படியே வாழட்டும்.
இதெல்லாம் சேர்த்து, கல்வி நிருவனங்கள் மற்றும் எண்ணற்ற தனியார் அமைப்புகள் எல்லாம் சேர்த்து, பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் வருது.
அரசாங்கம் வேறு வரிப் பணத்துலேருந்து கல்வித் திட்டத்துலே அள்ளிவிடுது.
ஆனால் இவர்கள் மூலம் பயன் பெறுவோர் அதிகமாச் சொன்னா, வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு லட்சம் மாணவர்களே.
தோல்விகளைச் சுமக்கும் இளைஞர்கள் அதிகரிக்கும் போது, அவங்க எல்லாருக்கும் வழி தவறும் வாய்ப்புகள் அதிகரிக்கும். மொத்ததிலே வழி தவறின இளைஞர்கள் உற்பத்தியாவரதுக்கு உங்க பங்கு அதிகம்.
சுருக்கமா சொன்னா, புதிய பொருளாதாரச் சூழ்னிலையில் கல்விக்கூடங்கள் தங்களை லாபம் ஈட்டும் தொழிலாகக், கருதாதாமல் இருப்பது, மாணவர்களை ஒரு உற்பத்திப் பொருளாகக் காணாமல், ஒரு பயனாளியாக (Customer) காணப் பழக வேண்டும்.
ஓவ்வொரு அதிருப்தி அடைந்த பயனாளியும் கல்வி தரும் சேவையில் ஈடுபட்டிருக்கும் கல்வி நிருவனத்தின் சரிவுக்கு காரணமாவார்கள் என்பதை உணரவேண்டும்.
கல்விக் கூடங்களில் ஆசிரியர்களை பூசாரிகளாக இல்லாம துறை அறிவிலும் அனுபவத்திலும் சிறந்தவராக மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.
மாணவர்கள், மற்றும் பெற்றோரின் கவனத்திற்கு.
கவன் வாங்கி உள்ளதை விற்று பிள்ளைகளை உயர் கல்விக்கு அனுபுறீங்க. ஐயா, கல்வி பெற்ற எல்லோருக்கும் அரசாங்க வேலை, தனியார் துறையில் வேலை கிடைக்காது. இது எதுனாலே? அப்படிப்பட்ட வேலைக்கு எத்தனை காலி இடங்கள் இருக்கோ அதைவிட சில நூறு மடங்கு அதிகமா, வேலை தேடுரவங்க இருக்காங்க.
காசையும் நேரத்தையும் செலவழிச்சவனுக்கு கல்வியினால ஏதானும் பயன் உண்டா? ஏதோ, ஒரு பறக்காத பட்டம் கையிலே தருவாங்க.
பட்டம் வாங்கிட்டானில்லே, வெட்டியா சுத்தினாலும் சுத்துவான், இனிமே சின்னதா, குறைந்த சம்பளத்தில் வேலை ஏதும் செய்யமாட்டான்.
வாழ்க்கை வளமாக வேண்டுமென்றால் அறிவு அவசியம் என்பது எல்லோருடைய உள்ளுணர்வும் சொல்லும். அது ஏதாவது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பில் கிடைக்குமா? இன்றைய கல்வித் திட்டத்தில் அப்படி ஒரு குறிக்கோள் இருப்பதாகத் தெரியவில்லை.
அதனாலே, வேறு யாருடைய உதவியும் எதிர் பார்க்காமல் அறிவை எப்படி வளர்க்கலாம் என்று தெரிஞ்சுக்கிட்டு அறிவை வளர்த்துக் கொள்வோம்.
ஒரு முக்கியமான தகவல் சொல்லிடறேன். பெரிய ஆளுங்க, உதாரணமாக – அண்டத்தை ஆள்கிற கடவுள், நாட்டை ஆளும் மந்திரி, நம்மை ஆள நினைக்கும் முதலாளி – யாருமே மத்தவளோட அறிவு வளருவதை விரும்பமாட்டாங்க.
ஏனென்றால் அறிவுள்ளவங்களை அடக்கி ஆள்வது மிகவும் கடினம். (ஆமாம் கடவுளை இங்கே ஏன் கொண்டு வருகிறோம்? பின்னாலே வேற ஒரு புத்தகத்துலே பார்க்கலாம்).
அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுக்கு
நம்ம நாட்டைப் போல இல்லாமல், வளர்ந்த நாடுகளில் விவசாயம் ஒரு லாபகரமான தொழில்.
விவசாயிக்கு வளமா வாழ பட்டங்கள் தேவை இல்லை.
விவசாயம் போன்ற பல தொழிகள் அறிவு வழி ஆற்றலுக்கு அதிக தேவை இல்லாமல் செயல் ஆக்கம் அதிகம் தேவைப்படுகிறது.
வளர்ந்த நாடுகளில் எந்த ஒரு தொழில் செய்தாலும் வறுமையில் வாடாது வாழலாம்.
வளரும் நாடுகளில் பட்டம் பெற்று, வௌ¢ளைக் காலர் உத்தியோகத்தில் சேர்ந்தால் மட்டுமே மூன்று வேளை உணவு கிடைக்கும். வியாபாரம் அரசியல் ஆகியவற்றில் கல்வியில்லாமல் வளமாக வாழ வழியுண்டு. அதற்கும் முதலீடு வேண்டும். ஓரளவு அறிவும் வேண்டுமே! அதைவிட முக்கியமா ஒரு சமுதாயம் எத்தனை வியாபாரிகளை மற்றும் தலைவர்களைத்தான் தாங்க முடியும்?
இதிலிருந்து என்ன தெரிகிறது? வசதியாக வாழ, வௌ¢ளைக் காலர் வேலையோ, இல்லை அரசியலோ அல்லது வியாபாரமோ செய்யணும்.
இது எல்லாத்துக்கும் ஓரளவு அறிவு அவசியம், ஆனால் அந்த அறிவை எப்படி தருவதென்பது கல்வித் திட்டஙக்ளில் இல்லை. எப்படி அடைவதென்று மாணவர்களுக்கும். கல்வித் திட்டத்தை வகுத்த அறிவாளிகளோ, திட்டத்தை வழிநடத்தும் கல்வியாளர்களுக்கோ தெரிந்ததாக சாட்சியம் இல்லை.
மத்திய தர வருமானமுள்ள மக்கள் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியை மட்டும் நம்பி வாழ்கிறார்கள். இவர்களுக்கு வௌ¢ளைக் காலர் வேலை என்கிறார்கள் இல்லையா – கிளார்க், மானேஜர், அக்கௌண்டண்ட், டாக்டர், கம்பௌண்டர், ஆசிரியர், லெக்சரர் – என்கிற மாதிரி ஒரு வேலை.
இவர்களைப் பார்த்து, ஏழைகள், கல்வியினால் ஓரளவு வசதியா வாழலாம் என்று நம்புகிறார்கள்.
கல்வியினால் நமக்கு வளமான வாழ்க்கை கிடைக்குமா கிடைக்காதா என்று அவர்களுக்குத் தெரியாது.
அறிவில்லாதவர்களுக்கு ஆண்டவன் உதவுகிறானோ இல்லையோ, நம்பிக்கைகள் சில நேரங்களில் கை கொடுக்கும். மீத சமயங்களில் கெடுக்கும்.
பல ஏழைகள், தங்கள் வயத்தைக் காயவைத்து, இருப்பதை அடகு வைத்து, கந்து வட்டிக்கி கடன் வாங்கி தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். படிப்பு மூலம் ஏழ்மையை உதரித்தள்ள, பத்து ஏழைகளிலே ஒரு ஏழைக்குடும்பமாவது வளமானாப் பரவாயில்லை.
நூற்றுலே ஒரு ஏழை வெற்றி பெறுலாம். மத்தவங்க கதி என்ன? ஏழை படு ஏழையாகிறான். இது ஏழைக்கும் புரியல்லே.
முடிவுரைக்குக் போவோமா?