என் மனதில் கட்டினேன்
இராஜராஜனாலும் கட்ட முடியாத
ஒரு பிரம்மாண்ட கோவிலை;
ஷாஜகானாலும் கட்டமுடியாத
ஒரு தாஜ்மஹாலை;
நான் கட்டிய கோவிலின் கர்ப்பகிரகத்தை
அலங்கரிக்கும் தெய்வம் நீ…..!
நீ என் காதலை ஏற்றபோதே
நிகழ்ந்த்து குடமுழுக்கு…..!
ஆனாலும்’
ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது
கோவில் திருப்பணிகள்
எனது வெற்றி தோல்விகளால்…..!
ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது
கோவிலின் குடமுழுக்கு
எனது பிறந்தநாளன்று……!
என் கண்ணீர் என்னும் புனித ஜலத்தை கொண்டு…..!!!