பாரதத் தாயே…..!
இதோ புறப்பட்டுவிட்டான் உனது மகன்….
களையெடுக்க……!!
உன்மேல் படிந்துள்ள ஊழலைக் களையெடுக்க….
பிறந்தபோது தெரியவில்லை ஏன் பிறந்தேன் என்று
இன்று உணர்கிறேன் என் தேவதையின் மூலம்…..
உன் கொடிக்கு மரியாதை செய்யவே
என் கரங்கள் படைக்கப்பட்டன…..!
உன் கீதத்தை பாடவே
என் இதழ்கள் படைக்கப்பட்டன…..!
உனது கீதம் ஒலிக்கும் போது – அதை
நான் இசையாய் உணரவில்லை
என் உணர்ச்சியாய் உணர்கிறேன்….!
என் உயிர் மீது ஆணை
உன் மேல் இருக்கும் களைகள் நீக்க நிச்சயம் வருவேன்
உனது மகனாக……!!!