ரதியே,
உனக்கு என்ன பரிசு தருவதென்று தெரியவில்லை
நீயே கூறிவிடு…..!
நான் அறிவேன்
நீ என்னைத் தான் கேட்பாய் என்று…..!
உன் கரம் பற்றிய தினமே கொடுத்துவிட்டேன்
அந்த பரிசை…..!
இருப்பினும் உனக்காய் ஒன்று தர வேண்டும், இவ்வுலகில்
ஆதலால் என் மௌனத்தை தருகிறேன்
உனக்காக
ஆனந்துடன் ஏற்றுக்கொள்வாய் என்று……!!!