அவணியில் அவதரித்த தினம் தொற்று

ஆசாங்கள் பலரை சந்தித்திருக்கிறேன்– அவர்களுள் சிலரை குறிப்பிடுகிறேன் !

பாலும் தேனும் உடன் தன் இரத்தத்தையும் ஊட்டி

வாழ்வின் நெறிகளை கற்பித்து என்றும் முன் நிற்கும் ஓர் ஆசான்

– எனது அன்னை…..!

நல்லறிவையும் வீரத்தையும் என்னுள் புகட்டி

என்  வாழ்வனைத்தும்  உடன் நடந்துவரும் ஓர் ஆசான்

– எனது தந்தை…..!

பாசத்தின் திருவுருவாய் வாழ்வனைத்தும் உடன் வந்து

விளையாட்டாய் எனை நிந்திக்கும் ஓர் ஆசான்

– எனது தங்கை…..!

நட்பின் இலக்கணத்தை அறியவைத்து என்

வெற்றி தோல்விகளில் பங்கு பெற்று

என்றும் என்னுள் இருந்தும் பல தருணம் உடன் இல்லா சில ஆசான்கள்

– எனது மித்திரர்கள்…..!

கல்வியே குறைவற்ற செல்வம் அச்செல்வத்தை

எனதாக்கி இவ்வுலகில் என்னையும் மனிதனாய் மாற்றியது பல ஆசான்கள்

– எனது குருமார்கள்…..!

காதலின் இலக்கணம் உணரவைத்து

உடன் இல்லாவிடினும் என்றும் என் நினைவில் வாழும் ஓர் ஆசான்

– என் இனியவள்…..!

என் வாழ்வின் வெற்றிகள் அனைத்தும்

சமர்பிக்கிறேன் என் வாழ்வின் ஆசானகளுக்கு……!!!

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

வகுப்பறைச் சாரல்கள் Copyright © 2015 by நவீன் ராஜ் தங்கவேல் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book