உன்னுடன் நடக்கும் நேரம் எனக்கு
பாலைவனமும் ரோஜாவனமானதடி….!
உன்னுடன் பேசிக் கொண்டிருக்கும் நேரம் எனக்கு
சூறாவளியும் தென்றலாய்ப் போனதடி….!
உன்னுடன் சண்டையிட்ட நேரம் எனக்கு
திங்களும் ஞாயிறு ஆனதடி….!
உன்னுடன் பயணிக்கும் நேரம் எனக்கு
பேருந்தும் விமானமானதடி….!
நீ என்னுடன் இல்லா நேரம் எனக்கு
கற்பூரமும் காற்றாய் போனதடி…..!!!