ஆயிரம் கனவுகளுடன் வந்த மாணவர்களுள் நானும் ஒருவன்

என் கல்லூரியைக் காண ……

தோற்றமோ எளிமை அனுபவமோ புதுமை

இதுவரை கற்றதில்லை இப்படி ஒரு சூழலில்

பாதையில்லா காடுகளும் நீர் மறைந்த ஓடைகளுமே

மதில் சுவர் எந்தன் கல்லூரிக்கு

நாற்புறமும் வாயில்கள் ; வாயில் வரும் இரு பேருந்து ;

எளிமையான அரண்மனை எந்தன் விடுதி ;

மூன்று வேளையும் இரு சுவை உணவு ;

என் நண்பர்களுடன் இருக்கும் தருணம்

எந்தையும் தாயும் உடன் இருப்பதுபோல் உணர்வு

கவலைகளில்லா வாழ்க்கை

கரைகளில்லா கல்வி.

இருந்தும் ஒரு கவலை

மீண்டும் கிடைக்குமா இந்த சொர்க்கம்…..!!!

வேண்டுதலுடன் ஒரு மாணவன்…..!!!

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

வகுப்பறைச் சாரல்கள் Copyright © 2015 by நவீன் ராஜ் தங்கவேல் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book