இலையுதிர் காலமாம் உன்னைக் கண்டது – உதிர்த்து
விட்டேன் என் காதலை உன் மேல்; நட்பாய்
தொடங்கிய பழக்கம் காதலில் முடியுமோ
என்றே தொடர்ந்தது – முடிந்தது ஒரு நாள் காதலில்;
எந்தையும் தாயும் ஒருங்கே கண்டது போல்
நானும் கவிஞனாம் இயற்கையினால் அல்ல
உன் கண்களின் ரசனையினால் பெண்ணே
ஒரு ஜோடி நாட்டியங்கள் கற்க முடியவில்லை என்னால்
உன் கண்களுக்கு மட்டும் ஒரு கோடி
நாட்டியங்கள் கற்க எவ்வாறு முடிந்தது
உன் மௌன மொழிகளுடன் உன் கண் பேசும்
வார்த்தைகளை பாதி கற்றேன் !
மீதி கற்கும் முன்னறே உறங்கிவிட்டாய் – கல்லறையில்
இறைவனிடம் வேண்டுகிறேன்
அடுத்த பிறவியிலாவது உன் கண் பேசும்
வார்த்தைகளை முழுமையாய் கற்க….!
உரிமையுடன் உன் கண்களின் ரசிகன்