தோழனே விழித்தெழு,
கேள்விக் கணைளுடன் அழைக்கிறது – பல்கலைக்கழகம்…..!
அறிவை கூர்மையாக்கி பேனாவால் தற்காத்து
முன்னேறு வெற்றியை நோக்கி முன்னேறு
தந்திரக் கணைகள் தாக்கினால் கலங்காதே
நிதானமாய் செயல்பட்டு பேனாவால் முன்னேறு
எதிர்நோக்கி வரும் பாணங்களை
பஞ்சாய் பறக்கவிடு உன் அறிவைக் கொண்டு
முடியாமல் போனால் மாவீரனாய் தாங்கு
அஸ்திரங்களின் அணிவகுப்பை உன் இதயத்தில்
மீண்டும் முன்னேறு அக்னிப் பிழம்பாய்
அஸ்திரங்களும் அச்சப்படும் உன் அறிவைத் தொட
ஒரு மாத போராட்டம் – பிறகு
வெற்றி என்பது உன் வாசம்
உனது வெற்றியை உலகமே அறியும்
கணைகளை தொடுத்த கழகத்தின் கைகளால்…..!!!