திருவிழா ஒன்றில் உன்னை கண்டேன்
அழகிய கண்கள்;
மீன்களும் தோற்றது எனது பார்வைக்கு…..!
அழகிய கூந்தல்;
நயாகராவும் தோற்றது எனது கண்களுக்கு…..!
அழகிய கன்னம்;
ஆப்பிள்களும் தோற்றது எனது பார்வைக்கு…..!
அழகிய உதடு;
தேனமுதும் தோற்றது எனது கண்களுக்கு…..!
அழகிய தேகம்
பூக்களும் தோற்றது எனது பார்வைக்கு…..!
தாவணி கட்டிய தேவதையே
நானும் தோற்றுவிட்டேன் அக்கணமே உன்னில்…..!
இவண்
உனது ரசிகன்