தேடலுடன் தொடங்கிய வாழ்வு
சிறுவயதில்
தேடாமல் கண்டெடுத்தேன்
நமது உறவை
எனக்காய் நீ இருக்க
உனக்காய் நானிருக்க
கவலைகளை கலங்க வைத்தோம்
தோல்விகளை தோற்க்க வைத்தோம்
நமது கூட்டணி வெற்றியாய் தொடர
வெற்றி தேவதை ஆசிர்வதிப்பாள்
வீர நடைபோடுவோம் ; இவ்வுலகின் வாசலில் நண்பனே……..!!!